KAILASA Library/தடைக்கற்களைப்/வெற்றியின் இரகசியங்கள்Sign in
தடைக்கற்களைப்

வெற்றியின் இரகசியங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நமது வெற்றிக்கு எது தடைக்கல்லாக இருக்கிறதென்று தெரிந்தால், வெற்றியின் இரகசியத்தை நாம் எளிதாகத் தொட்டு விடலாம், மாணவர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய இரண்டு தவறுகள்....

1) தள்ளிப் போடுவது 2) முக்கியமற்றவைக்கு முக்கியத்துவம் அளிப்பது

இந்த இரண்டு தவறுகளைத்தான் எல்லோரும் செய்கின்றனர்.

தள்ளிப்போடுவது (Postponding) போன்று ஒரு நகைச்சுவையான விஷயம் வேறு எதுவும் கிடையாது.

அப்பொழுதுதான் காலாண்டுத் தேர்வு முடிவுகள் வந்திருக்கும். மதிப்பெண்ணைப்பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கிறது, கண்டிப்பாக நாம் அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்ற பெரிய உத்வேகத்துடன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேருவார்கள்.

இன்றிரவு போய்ப் படித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்திருப்பார்கள். அன்று சனிக்கிழமையாக இருக்கும். மாலையில் ஒரு அருமையான படம் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும்.

சரி!. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு விடியற்காலையில் படித்துக்கொள்ளலாம். ஒரு ஐந்து அல்லது ஆறு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து படித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அந்த சினிமாவை நிம்மதியாக டிவியில் பார்த்துவிட்டுத் தூங்கச் சென்றுவிடுவார்கள்.

காலையில் 6 மணிக்கு அலாரம் அடித்தவுடன் 7 மணிக்கு எழுந்து கொள்ளலாம் என்று அப்படியே மெத்தையில் புரண்டுப் படுத்து விடுவார்கள். ஒரு 8 1/2 மணிக்கு, அப்பாவோ, அம்மாவோ தண்ணீரைத் தெளித்து எழுப்ப விட்டவுடன்தான் அரக்கப் பறக்க எழுந்திருப்பார்கள்.

இந்தத் தள்ளிப் போடும் மனோபாவம்தான் நம்முடைய படிக்கும் தன்மையைக் கீழே படித்து இறக்கி விடுகிறது.

இல்லையென்றால் நம்முடைய படிக்கும் தன்மை மிகச்சிறப்பாக இருக்கும். அன்றைக்கு வகுப்பில் சொல்லித் தருவதை அன்றைக்கே படித்தால் அதைப் படிக்க வெறும் அரைமணி நேரம்தான் ஆகும்.

அடுத்த நாள் படித்தால் முக்கால் மணி நேரம் ஆகும். இன்னும் இரண்டு நாள் கழித்துப் படித்தால் ஒரு மணி நேரம் ஆகும்.

சுத்தமாக விட்டு விட்டுப் பிறகு
படித்தோமென்றால் அதற்கு மூன்று மணி
நேரம் ஆகும்.

எல்லாவற்றையும் முழுதாகத்
தள்ளிப்போட்டுவிட்டுக் கடைசி நேரத்தில்
படிப்பதினால்தான் நம்மால் நினைத்த
அளவிற்கு மதிப்பெண் வாங்க
முடியவில்லை.

எதையும் வரிசைப்படுத்தி,
முக்கியத்துவம் புரிந்து நன்கு
யோசித்தால் அனைத்தும்
உள்ளுக்குள் முழுமையாக
நிர்ணயிக்கப்பட்டுவிடும்
புத்திசாலித்தனம் ஏற்கெனவே
உள்ளுக்குள் பதிவாகி உள்ளது,
(Pre registered)

இதற்கு அடுத்து (Giving Prioritiesor Process) முக்கியமற்றவைக்கு முக்கியத்துவம் அளிப்பது.

எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதைத் தெரிந்து கொள்வது படிப்பற்கு மட்டும் அல்லாமல் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உதவும்.

இந்த இடத்தில் கோபப்படலாமா? கூடாதா?

இந்த இடத்தில் அன்பாக இருக்கலாமா? இருக்கக்கூடாதா?. இந்த இடத்தில் கம்பீரமாக இருக்கலாமா? இருக்கக்கூடாதா? என்பதைத் தெரிந்து கொண்டால் நாம் தவறான ஒரு விஷயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டோம். சாலையில் நன்றாகப் பார்த்து நடக்கும்போது, எங்கேயாவது சகதியில் கால் வைக்க நம்மால் முடியுமா?

தப்பத் தவறிக்கூட வைக்க மாட்டோம் அல்லவா? யோசித்து கொண்டே நடந்தாலும் பாதையில் இருக்கும் கவனம் மாறுமா? அதே போல் முக்கியத்துவத்தை அறிந்து முடிவு எடுக்க வேண்டுமானால்... சற்று யோசித்து எதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்? எதற்குக் கொடுக்கக்கூடாது? எதை முதலில் படிக்க வேண்டும், எதை இரண்டாவது படிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள்.

எதையும் வரிசைப்படுத்தி, முக்கியத்துவம் புரிந்து நன்கு யோசித்தால் அனைத்தும் உள்ளுக்குள் முழுமையாக நிர்ணயிக்கப்பட்டுவிடும், அந்த புத்திசாலித்தனம் ஏற்கெனவே உள்ளுக்குள் பதிவாகி உள்ளது. (Pre registered) அதை நாம் செயல்படுத்துவதில்லை. உள்ளுக்குள் இருக்கும் புத்திசாலித்தனத்தைச் செயல்படுத்தி வைக்கக்கூடிய தூண்டுகோல்தான் தேவை.

அதுதான், சரியானவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தல்.

சரியா? தவறா? என்று நன்கு யோசித்துப் பார்த்து முக்கியத்துவம் கொடுப்பது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் விழிப்புணர்வோடு இருத்தல்.

ஆரம்பத்திலேயே விழிப்புணர்வோடு இருத்தல்!

ஆரம்பத்திலேயே விழிப்புணர்வோடு படிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் கேட்க மாட்டீர்கள். உங்களுக்குப் புரிந்துகொள்வதற்குச் சற்றுத் தாமதமாகியிருக்கும்.. அதனால் நீங்கள் ஏதோ பெரிதாகத் தத்துவம் கற்று முடிந்ததாகக் கருத வாய்ப்புண்டு என்பதால் உங்களுக்குக் கூறவில்லை.

நாம் செய்யும் செயல் சரியா?
தவறா? என்ற இந்த ஒரு
விஷயத்தை உங்கள்
விழிப்புணர்வுக்குக் கொண்டு
வாருங்கள். இதுவே
உங்களுக்கு அடுத்தடுத்த
பாடங்களைக் கற்றுக்
கொடுக்கும்.

விழிப்புணர்வோடு இருப்பதென்றால்
ஏதோ பெரிய விஷயமாக நினைத்து
விடாதீர்கள்.

அந்த நேரத்தில் நாம் செய்யும் செயல்
சரியா? தவறா? என்ற இந்த ஒரு
விஷயத்தை உங்கள் விழிப்புணர்வுக்குக்
கொண்டு வாருங்கள். இதுவே
உங்களுக்கு அடுத்தடுத்த பாடங்களைக்
கற்றுக் கொடுக்கும்.

எந்தெந்த இடத்தில் விழிப்புணர்வை
எந்தெந்தவிதமாகப் பயன்படுத்துவது
என்கிற விஷயத்தை அது கற்றுக்
கொடுக்கும்.