சின்னஞ்சிறு இரகசியங்கள்.
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
புத்துணர்வுப் பயிற்சி - 1
தேர்வு பயம் நீக்கும் பயிற்சி.
உங்கள் கை எவ்வளவு நெகிழும் தன்மை உடையதாக இருக்கின்றதோ அதைப் பொறுத்துதான் உங்களுடைய எழுதும், வேகமும் அதிகரிக்கும். அந்த நெகிழும் தன்மையை நாம் அதிகரிக்க வேண்டும். நம்முடைய மணிக்கட்டில் மாத்திரம் 21 எலும்புகள் ஒன்றாக சேருகின்றன. அதுமட்டும் அல்லாமல் நம் கைகளுக்குள் நம்முடைய எல்லா உறுப்புகளுக்குமான அக்குபரஷர் புள்ளிகள் இருக்கின்றது. இந்தப் புள்ளிகளை நாம் தொடுவதின் மூலமாகவும், தூண்டுவதின் மூலமாகவும் நமது உடலின் மற்ற பகுதிகளுடன் சுலபமாகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
1) ஒரு நாற்காலியில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கைகளைக் கீழே தொங்க விட்டுக் கொள்ள வேண்டும்.
2) மணிக்கட்டிலிருந்து விரல் நுனிவரை உள்ள பகுதியை நன்கு வேகமாக ஆட்டவேண்டும். கையில் இருந்து அந்தப் பகுதி பிய்ந்து தனியே விழுந்து விடும் அளவிற்கு மிக வேகமாக, எவ்வளவு வேகமாக முடிகின்றதோ அவ்வளவு வேகமாக ஆட்ட வேண்டும்.
3) இப்படியும், அப்படியுமாக எல்லாக் கோணங்களிலும் ஆட்ட வேண்டும். இதை 5 நிமிடம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
4) 5 நிமிடம் கழித்து ஒரு உள்ளங்கையின் மீது, மற்றொரு உள்ளங்கையை 2 நிமிடம் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவிதமாய் ஷாக் அடித்தாற்போல் விறுவிறுவென்று இருப்பதை உங்களால் உணர முடியும். இந்தப் பயிற்சி உங்களுக்குள் இருக்கும் தேர்வு பயத்தை அடியோடு போக்கிவிடும்.
புத்துணர்வு பயிற்சி -2
1) கைகளை வீசி மெதுவாக நடக்க வேண்டும்.
2) எவ்வளவு மெதுவாகக் கைகளை அசைத்து நடக்க முடியுமோ, எவ்வளவுக்கெவ்வளவு மெதுவாகக் கால்களை அசைத்து நடக்க முடியுமோ அவ்வாறு நடக்க வேண்டும்.
3) உங்கள் கைகளும், கால்களும் அசைவது தெரியாத வகையில், மெதுவாக மிக மிக மெதுவாக நடக்க வேண்டும். இதை 5 நிமிடம் செய்ய வேண்டும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் இந்த இரண்டு புத்துணர்வுப் பயிற்சிகளையும் செய்யக்கூடாது.
இந்தியாவில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. அதில் 3 கோடி மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மூன்று கோடி மாணவர்களில் 40 சகவிகிதம் அதாவது கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி மாணவர்கள் தேர்வு பயத்தில் இருக்கிறார்கள். இது சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் புள்ளி விவரம்.
தேர்வுப் பயிற்சிக்கான அடிப்படைக் காரணங்கள் இந்த இரண்டு மட்டும்தான்.
1. உணர்வு நிலையில் இயங்கும்போது உள்ள உணர்வற்ற நிலையின் இயக்கம். இது நமது பர்சனாலிட்டி (Personality) பலவீனமாக இருந்தாலோ, அல்லது நாம்
தேர்வு பயம் என்பது நாம்
நினைப்பதுபோல் பெரிய
விஷயம் கிடையாது. சிறிது
காலம் தொடர்ந்து அதற்கான
வேலையைச் செய்தோமானால்
நம்மால் நிச்சயமாகச் சரி செய்ய
முடியும். தியானமும், ஞானக்
கருத்துக்களும் இதற்கு மிகப்
பெரிய அளவில் சிறப்பான
முறையில் உதவும்.
தேர்வுக்குத் தயார் செய்வதில் பலவீனமாக இருந்தாலோ வரும்.
2. நமது கௌரவம் எங்கே பாதிக்கப்பட்டுவிடுமோ என்று எண்ணும் போது, என்று நினைக்கும்போது அங்கு வெளிப்படையாகத் தேர்வு பயம் விஸ்வரூபம் எடுக்கின்றது. அவர்கள் என்ன சொல்வார்களோ? இவர்கள் என்ன சொல்வார்களோ? வகுப்பில் உடன் படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்களோ? என இந்த எண்ணம் அடிவாங்கும்போது தேர்வு பயம் வெளியில் வருகின்றது. பர்சனாலிட்டியில் உள்ள பலவீனம், தேர்வுக்குத் தயார் செய்வதில் உள்ள பலவீனம். இந்த இரண்டையும் நாம் சரி செய்யும் போது தேர்வு பயம் நம்மை விட்டு ஓடிவிடும்.
தேர்வு பயம் என்பது நாம் நினைப்பதுபோல் பெரிய விஷயம் கிடையாது. சிறிது காலம் தொடர்ந்து அதற்கான வேலையைச் செய்தோமானால் நம்மால் நிச்சயமாகச் சரி செய்ய முடியும். தியானமும், ஞானக் கருத்துக்களும் இதற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பான முறையில் உதவும்.
உங்களுடைய பலவீனமான பர்சனாலிட்டியை மாற்றுவதற்கும், அதிகரிப்பதற்கும் உங்களுடைய படிக்கும் பழக்கத்தை மாற்றுவதற்கும் மிகவும் உதவும்.