தூக்கமும் படிப்பும்:
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தூக்கத்தைப்பற்றி விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்.
அந்த ஆராய்ச்சியில் விதவிதமாகத் தூங்க வைத்துப் பார்த்தார்கள். இரவு 9 மணிக்கே தூங்க வைப்பது. இரவு 12 மணிக்குத் தூங்க வைப்பது, இரவெல்லாம் கண்விழித்துப் பின் விடியற்காலை 2 மணிக்குத் தூங்க வைப்பது. காலை 6 மணிக்கே எழுப்பிவிடுவது. மொத்தமாக 6 மணிநேரம்தான் தூங்கவிடுவது, 10 மணிநேரம் தூங்கவிடுவது, வெறும் 4 மணி நேரம் மட்டுமே தூங்க விடுவது.
இப்படி வகைவகையான ஆராய்ச்சி செய்ததில் என்ன முடிவு தெரிந்ததென்றால் சரியான நேரம் தூங்குபவர்கள் நிறைய மதிப்பெண் பெறுகிறார்கள். தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பவர்களின் அறிவுப்பக்குவம் அபரிமிதமாகி உள்ளது. குறைந்த நேரம் தூங்குபவர்கள் ஓய்வாக இல்லாமல் இருப்பதினால், பரபரவென்று இருப்பதினால் இயற்கையாகவே அதிகம் செயல்பட வேண்டியுள்ளது. தேர்வில் மதிப்பெண் குறைவாக வருகின்றது.
எனவே, இந்த ஆராய்ச்சியின் ஆய்வு
அறிக்கையை எதற்கு அடிப்படையாகத்
தருகிறோம் என்றால், "நீங்கள்
தூக்கத்தைக் குறைப்பதினால்
உங்களுடைய மதிப்பெண் அதிகமாகக்
குறையும் என்பதே உண்மை. தூக்கத்தின்
நேரத்தைக் குறைப்பது எந்த வகையிலும்
நல்லதல்ல. அது ஆபத்து. குறைந்தது
தியானம் தொடர்ந்து
செய்யச் செய்ய
உங்களுடைய தூக்கத்தின்
தன்மை அதிகரிக்கும்,
தூக்கத்தின் அளவு
குறையும்.
மாணவர்கள் 6 மணிநேரம் தூங்க வேண்டும்" என்பது ஆராய்ச்சியின் முடிவில் வெளியிட்டுள்ள அறிக்கை.
தியானம் தொடர்ந்து செய்யச் செய்ய தூக்கத்தின் தன்மை (Quality of sleep) தன்னால் அதிகரிக்கும். அப்போது இயற்கையாகவே தூக்கத்தின் அளவு குறையும். 6 மணி நேரம் மட்டுமே தூங்கும் நபர்கள் தியானம் செய்யச் செய்ய அவர்களால் இயற்கையாகவே 5 மணி நேரத்திற்கு மேல் தூங்க முடியாது. அது தானாக நடக்கும்.
நாம் தூக்கத்தைத் தியாகம் செய்துவிட்டுக் கஷ்டப்படக்கூடாது. அதற்காக உடலையும், மனதையும் நாம் வருத்திக்கொள்ள வேண்டுமென்ற அவசியமே இல்லை. தியானம் தொடர்ந்து செய்யச் செய்ய உங்களுடைய தூக்கத்தின் தன்மை அதிகரிக்கும், தூக்கத்தின் அளவு (Quantity of sleep) குறையும்.
உணவும் படிப்பும்:
இது மிகவும் முக்கியமான பகுதி. உபநிடதம் மிக ஆழமாக கூறுகிறது, "அன்னம் பிரம்மம்"
" Food is God" ஒரு பெரிய ஞானி சொல்கிறார், "you are what you are eat"
"நீ என்ன சாப்பிடுகின்றாயோ அது தான்
நீ இவர்கள் சொல்லும் அளவிற்கு
உண்மையாகவே அந்த உணவிற்கு, அந்த
அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறது.
யாரேனும் திராட்சைப் பழத்தை ருசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
எவ்வளவு ஆழமாக உங்களால் ருசிக்க முடியும்?
அதை நன்றாக ருசித்துப்பார்த்தீர்கள் என்றால், ஒரு பழத்தைச் சாப்பிட்டாலே 10 பழம் சாப்பிட்டதற்கான திருப்தியைக் கொடுக்கும்.
நாம் சாப்பிடுவது எல்லாமே
நாவிற்குத்
தேவையானதைத்தான்
சாப்பிடுகிறோம்.
வயிற்றிற்கும், உடலுக்கும்
தேவையானதை நாம்
சாப்பிடுவதில்லை ருசித்து,
பொறுமையாகச் சாப்பிட்டால்
மட்டும்தான் வயிற்றிற்குத்
தேவையான அளவு சாப்பிட
முடியும்.
இயற்கையாகவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவும் குறையும். நிறையச் சாப்பிடுவது குறையும். சாப்பிடும் தன்மை அதிகமாகும். கொஞ்சம் சாப்பிட்டால் போதும், நமக்குத் தேவையான சக்தியை நாம் எடுத்துக்கொள்ள முடியும்.
நாம் சாப்பிடுவது எல்லாமே நாவிற்குத் தேவையானதைத்தான் சாப்பிடுகிறோம். வயிற்றிற்கும், உடலுக்கும் தேவையானதை நாம் சாப்பிடுவதில்லை. ருசித்து, பொறுமையாகச் சாப்பிட்டால் மட்டும்தான் வயிற்றிற்குத் தேவையான அளவு சாப்பிட முடியும்.
ஏனென்றால் நாவிற்கு சலிப்புத் தட்டிவிடும். நீங்கள் ஒரே சாக்லெட்டைத் திரும்பத் திரும்ப அதிக நேரம் வாயில் வைத்துக்கொண்டு சாப்பிட்டால் அது நொந்துபோய், இயற்கையாகவே வேண்டாம் என்று சொல்லிவிடும். அதற்கு மேல் நமது உடலுக்கும் தேவையிருக்காது.
எனவே உணவை ரசித்துச் சாப்பிடவேண்டும். தண்ணீரை ரசித்துக் குடிக்கவேண்டும். சிறிது சிறிதாக ரசித்துக் குடிக்கவேண்டும். அதற்கென்று சிறிது நேரம் செலவழிக்க வேண்டும்.
எடுத்தவுடன் “மடக், மடக்” கென்று குடிக்காமல் எவ்வளவு மெதுவாகக் குடிக்க முடியுமோ அவ்வளவு மெதுவாகக் குடிக்க வேண்டும். அதே போன்று உணவை வேகவேகமாகச் சாப்பிடுவது கூடாது. அல்லது டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடுவதும் கூடாது.
எண்ணெயில் பொறித்த, வறுத்த உணவுகள் கண்டிப்பாக மந்தத் தன்மையைக் கொடுக்கும். நமது உணவைத் தனியாக ஒரு தியானத்தைச் செய்து பழகுவது போல் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
அப்படிச் சாப்பிடும்பொழுது உணவின் தேவை அதிகம் இருக்காது. உணவு அதிகமாகச் சாப்பிடாததால், உங்கள் மூளைக்குப் போகும் இரத்த ஓட்டத்தின் அளவு குறைவதைத் தடுக்கும். ஏனென்றால் அதிகம் சாப்பிடும்பொழுது இயற்கையாகவே மூளைக்குக் குறைவாகப் போய், இரைப்பைக்கு அதிகமாக இரத்த ஓட்டம் போகும்.
எப்படிப் பார்த்தாலும் நீங்கள் உணவில் கவனமாக இருந்தால், அது நேரடியாக உங்கள் படிப்பிற்குப் பயனைத் தருகிறது. நீங்கள் இப்பொழுது படிப்பதைவிட இன்னும் சிறிது அதிகமாகப் படிக்க முடியும். தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக, காரத்தையும், இனிப்பையும் தவிர்க்க வேண்டும்.
காரம் உடல் பரபரப்பை அதிகப் படுத்தும், இனிப்பு மந்தத்தன்மையை அதிகப்படுத்தும். இனிப்பு, எண்ணெய்ப் பலகாரம் இது இரண்டுமே நமது உடலின் மந்தத்தன்மையை அதிகப்படுத்தும்.
காரம் (மிளகாய்) இது நமது உடல் படபடப்பையும், பதட்டத்தையும் அதிகப்படுத்தும். இது இரண்டுமே படிக்கும் மாணவர்களுக்குத் தேவையில்லாதது. படபடப்பும் இருக்கக்கூடாது. பரபரப்பும் இருக்கக்கூடாது. அதே சமயத்தில் மந்தத்தன்மையும் இருக்கக்கூடாது. இது இரண்டும் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் காரம், இனிப்பு இவை இரண்டையும் உணவில் தவிர்க்க வேண்டியது மிக மிக அடிப்படையான விஷயமாகும். சாத்வீக உணவுகளை மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிகக் காரம், அதிகப் புளிப்பு, அதிக மசாலா, அதிக எண்ணெய் இல்லாத எல்லா உணவுப் பொருள்களும் சாத்வீக உணவுப் பொருட்களே. தேர்வு சமயத்தில் மாணவர்கள் இதைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் பழங்களும், காய்கறிகளும் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்கத்தில் நாம் தவறு செய்தால், மாற்றி எதையாவது சாப்பிட்டால், நிச்சயமாக, படிக்கும் விஷயத்தில் உடல் தகராறு செய்யும். உடலை முறையாக நாம் கவனிக்காவிட்டால் அது நேரடியாகப் படிப்பல், தன் வேலையை, பதிலைத் தெரிவித்து விடும்.
நம் எல்லோருடைய உடலுக்குள்ளேயும் நம்முடைய அனுமதி இல்லாமலேயே ஏகப்பட்ட நச்சுக்கள் நுழைந்திருக்கின்றது.
Air Pollution, Food Pollution, Water Pollution என இது எல்லாவற்றையும் தாண்டி Thought Polution. காற்றினால் உருவாகும் மாசுக்கள், உணவினால் உருவாகும் மாசு, தண்ணீரினால் உருவாகும் மாசு, இது எல்லாவற்றையும் தாண்டி எண்ணங்களினால் உருவாகும் மாசு!
இந்த நான்கு மாசுக்களினால் ஏகப்பட்ட நச்சுத்தன்மைகள், நமக்குள் நுழைந்திருக்கின்றது. இப்போது நாம் ஏதோ சாதாரணமாக இருப்பதைப் போல நினைத்துக் கொள்ளாதீர்கள். உலகப் போர்க்களத்தில் இருப்பதைப்போல் இருக்கிறோம்.
ஒரு சின்னக் கதை:
கதை கூட அல்ல. நடந்த ஆராய்ச்சி. ஒரு விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். எண்ணங்களுக்கு எவ்வளவு வலிமை (Power of thoughts) இருக்கிறது என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள்.
ஒரு மூன்று ரோஜாச் செடியை எடுத்துக் கொண்டார்கள். மூன்று ரோஜாச் செடிகளையும், மூன்று கூண்டுகளில் வைத்தார்கள், வைத்த பின்பு இருபத்தொரு நபர்களைக் கொண்ட குழுவினராக, காலையில் ஒரு செடியின் முன்பு போய் நின்று என்னென்ன வார்த்தைகள் சொல்லித் திட்ட முடியுமோ அவ்வளவு எதிர்மறை வார்த்தைகளாய்த் திட்டினார்கள். அந்தச்செடியைப் பார்த்து ஒரு நரகமான சூழ்நிலையை, அங்கு அடிக்கடி சண்டை நடந்தால் எப்படி இருக்குமோ? அது போல் ஒரு சூழ்நிலையை அந்த இடத்தில் உருவாக்கி விட்டு 10 நிமிடம் செலவழித்துவிட்டு, தண்ணீரை ஊற்றிய பிறகே அடுத்த செடிக்குச் சென்றார்கள்.
> காற்றினால் உருவாகும்
> மாசுக்கள், உணவினால்
> உருவாகும் மாசு, தண்ணீரினால்
> உருவாகும் மாசு, இது
> எல்லாவற்றையும் தாண்டி
> எண்ணங்களினால் உருவாகும்
> மாசு!
அடுத்த செடியிடம் நாம் சாதாரணமாக எவ்வாறு நீர் ஊற்றுவோமோ, அதுபோல் நீர் ஊற்றிவிட்டு அந்த செடியைக் கண்டுகொள்ளாமலும், கோபப்படாமலும், எதுவுமே செய்யாமல் சாதாரணமாக விட்டுவிட்டு அடுத்த செடியிடம் சென்றார்கள்.
மூன்றாவது செடியிடம் சென்ற உடன் அங்கு இனிமையான வயலின், கிடார் எல்லாம் வாசித்து குதித்து, கும்மாளத்துடன் கொண்டாடினார்கள். இனிமையான வார்த்தைகளாய் அச்செடியிடம் பேசினார்கள். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்தார்கள்.
சரியாக இருபத்தியோராம் நாள் முடிவில், முதல் செடி சிறிது சிறிதாகச் சோர்ந்துகொண்டே வந்து, இறந்தே விட்டது.
இரண்டாம் செடி எந்த விதச் செழிப்பும் இன்றிச் சாதாரணமாய் வளர்ந்தது. ஆனால் மூன்றாம் செடி சாதாரணமாய் வளராமல் அபரிமிதமாக வளர்ந்திருந்தது.
பார்ப்பதற்கே மிக அழகாக. இரண்டுமூன்று கிளைகளுடன் நான்கு, ஐந்து பூக்களுடன் பூத்துக் குலுங்கியது. அதன் பசுமைத் தன்மை மிக அருமையாக, ஆரோக்கியத்துடன் இருந்தது.
எனவே ஆராய்ச்சியின் முடிவில் அந்த மருத்துவ விஞ்ஞானக் குழுத் தலைவர் “எண்ணங்களுக்கு வெளி உலகின் சக்தி மிகச் சாதகமாக இருக்கிறது” என்று எழுதியுள்ளார். (Thoughts has Tramendaous Power units Enternal Environment)
இதன்பிறகு மனிதர்களிடம் இந்த ஆராய்ச்சியைச் செய்யலாம், என முடிவெடுத்தார்கள்.
ஆனால் அங்கேதான் பிரச்சினை. செடியிடம் ஆராய்ச்சியை எளிதாகச் செய்யலாம். ஆனால் மனிதனிடம் செய்யமுடியாது. ஏனென்றால் மனம் என்ற ஒன்று மனிதனிடம் உள்ளது. அது ஏமாற்றும்.
மனிதனுக்கே தெரியாமல் இந்த ஆராய்ச்சியைச் செய்யவேண்டும். விஞ்ஞானிகள் குழு ஒரு திட்டம் வகுக்கிறார்கள்.
அதன்படி அவர்கள் எல்லோரும் சமையல் செய்யும் ஒரு சமையற்காரரைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து அவருக்கு எரிச்சலை உண்டாக்கினார்கள், சிறிது சிறிதாகத் தினமும் அந்த எரிச்சலை அதிகப்படுத்தினார்கள்.
அவரை வேலையை விட்டு எடுப்பது போன்று பேசுவது, எரிச்சலூட்டுவது போன்று எல்லோரும் அவரவர்களின் பங்கைச் சரியாகச் செய்து எவ்வளவு எரிச்சலூட்டமுடியுமோ, அவ்வளவு எரிச்சலை ஏற்படுத்தினார்கள். எரிச்சலை அதிகப்படுத்த, அதிகப்படுத்த, பதினைந்தாம் நாள் அந்தச் சமையல்காரர் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்ட இருபத்தியொரு பேரில் 10 பேருக்கு அல்சரே வந்து விட்டது. வயிறு எல்லாம் எரிய ஆரம்பத்து, ப்ரீ அல்சர் நிலை எல்லோருக்கும் வந்துவிட்டது.
பிறகு அடுத்த இருபத்தியொரு நாளில் சமையல்காரரை எவ்வளவு சந்தோஷமாய் வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு சந்தோஷமாய் ஊக்கத்தொகை அதிகமாகக் கொடுத்து, அன்பளிப்புகள் அதிகம் கொடுத்து அவரை மிகவும் சந்தோஷமாய் வைத்து இருக்கிறார்கள். அந்தக் கடைசி இருபத்தியொரு நாளில் உணவில் ஒரு புதுவிதமான சுவை அதிகரித்திருந்தது.
விஞ்ஞானிகள், ஆராய்ச்சியின் முடிவில் உணவில் புதுவிதமான சுவை இருந்தது, என்றும் ஒரு விதமான சக்தியை (Energy) அந்த உணவில் இருந்ததாக உணர முடிந்ததென்றும் அறிவித்தனர்.
உணவிலேயே மிகவும் மந்தமான உணவு இருக்கிறது. அதைச் சாப்பிட்ட உடன் தூக்கம் வரும். அதேபோல் நம்மைச் சுறுசுறுப்பாய் இயங்கச் செய்து உற்சாகப்படுத்தக்கூடிய உணவுவகைகளும் இருக்கின்றன.
இந்தச் சமையல் செய்பவர் சமைத்த உணவைச் சாப்பிட்டவுடன் அனைவரும் மிகவும் உற்சாகமாய் உணர்ந்தார்கள். யாருக்குமே எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டனர்.
அதன்பிறகு அவரைப் புகழ்வதையும், அன்பளிப்புத் தருவதையும் விட்டுவிட்டார்கள். சாதாரணமாக அவரை விட்டுவிட்டார்கள் இதன் விளைவாக அந்த உணவும் சாதாரணமாய் இருந்தது.
எனவே அந்த ஆராய்ச்சியைச் செய்த குழுவின் தலைமை மருத்துவ விஞ்ஞானி. எண்ணங்களுக்கு, வெளி உலகிலும், உள்உலகிலும் மிக அதிக சக்தி இருக்கின்றது. (Thoughts has tremendous Power into the external Environment and Enternal environment) என்று தங்களின் ஆராய்ச்சியின் முடிவைத் தந்தார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் 64 விதமான மிக முக்கியமான உணர்வுகள் இருக்கின்றன. யோசித்துப் பாருங்கள். எவ்வளவு உணர்ச்சிப் பரிவுகள். இந்த உணர்வுப் போராட்டத்துடன்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எண்ணங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தன்மை உள்ளது.
கோபம் என்னும் உணர்வு ஒருபக்கம் எழுகின்றது. கவலை, என்னும் உணர்வு மறுபக்கம் வந்து முட்டுகிறது. துக்கம் என்னும் உணர்வு படித்து ஒரு பக்கம் இழுக்கின்றது. இது எல்லாவற்றிற்கும் நடுவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இத்தனை எண்ணங்களையும் சேர்த்து, எதிர்மறையான (Negative) எண்ணங்களுக்கு நடுவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த எண்ணங்களுக்கு, வெளியில் பார்ப்பதற்கு வடிவம் இல்லாததினால் நமக்குத் தெரியவில்லை.
உண்மையில் எப்படி இருக்கிறதென்றால் இரண்டாம் உலகப்போரின் பொழுது இரண்டு பக்கமும் ராக்கெட்டுகள் சீறிவர, நடுவில் குண்டு மழைபொழியும் சூழ்நிலை இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
திடீர், திடீர் என்று நாம் எதிர்பார்க்காத சமயத்தில், எதிர்பார்த்தே இருக்காத எண்ணங்கள் நம்மை வந்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு மோசமான சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால்தான் “எண்ணங்களால் உருவாகும் மாசுக்கள்” என்ற வார்த்தைகளே உருவானது. இந்த நச்சுத் தன்மையால் நம்முள் சமச்சீரற்ற நிலையில் ஹார்மோன்கள் சுரக்கிறது. ஒவ்வொரு முறை பயம் எழும்போது, உள்ளுக்குள் அட்ரினலின் சுரக்கிறது.
அட்ரினலின் தன்மை Flight or Fight. அதாவது அந்த ஹார்மோன் வெளியானவுடன் ஒன்று ஓடவேண்டும் இல்லை அடிக்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டால் என்னாகும்?
பள்ளித் தலைமையாசிரியர் நீங்கள்
செய்யாத தவறுக்கு உங்களைத் திட்டும்
போது உங்களுக்குக் கோபம் வருகிறது.
கோபம் வரும்போது அட்ரினலின்
வெளிப்படுகிறது. ஓட முடியாது.
அந்த இடத்தில் கோபத்தை உங்களால் காண்பக்க முடியுமா? சண்டையிட முடியுமா? அல்லது ஓட முடியுமா? இதற்கு வாய்ப்பே இல்லை.
ஒரு ஹார்மோன் சொல்கிறது. 'பார்' இன்னொரு ஹார்மோன் சொல்கிறது 'பார்க்காதே!' என்று.
இன்னொரு ஹார்மோன் சொல்கிறது 'ஓடு.'
இன்னொரு ஹார்மோன் சொல்கிறது
'பயப்படு.'
இன்னொரு ஹார்மோன் சொல்கிறது 'உற்சாகமாய் இரு'.
இப்படி ஒரே நேரத்தில் இத்தனை
கட்டளைகளைப் பிறப்பத்தால் அது எப்படி
இருக்கும்?
சண்டையிடவும் முடியாது. ஓடவும் முடியாது, அங்கிருந்து அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அந்த அளவிற்கு நமக்குப் பக்குவமும் கிடையாது.
ஆனால் உள்ளுக்குள் ஹார்மோன் வெளியாகிவிட்டது. அதன் தன்மை என்னவென்றால் ஓடு, அல்லது சண்டையிடு என்கிறது. ஏதாவது ஒன்றைச் செய்யச் சொல்கிறது. ஒன்று ஓடிப்போய்விடு, இல்லையென்றால் சண்டை போடு என்று தொடர்ந்து தகவல் Signal கொடுத்துக் கொண்டே இருக்கின்றது.
ஆனால் நாம் வெளியில் எதுவும் செய்யாமல் தலையைக் குனிந்து கொண்டு அந்தக் திட்டுக்களை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறோம்.
உள்ளுக்குள் அப்போது சுரந்த அந்த ஹார்மோன் என்ன செய்யும்? பிரச்சினை செய்யும்!
இந்த ஒரு ஹார்மோன் மட்டும்தானா? எத்தனை, எத்தனை உணர்வுகளுக்கு எத்தனை எத்தனை ஹார்மோன்கள் வெளிப்படுகிறது. எல்லா உணர்வுகளையும் நம்மால் திருப்திப்படுத்த முடியாது.
எல்லா உணர்வுகளையும் திருப்திப்படுத்த இந்தச் சமுதாயம் நம்மை அனுமதிக்கவில்லை. எல்லா ஹார்மோனும் வெளிப்பட்டு அங்கங்கே ஒவ்வொரு செல்லுக்குள்ளும் நின்று கொண்டிருக்கும்.
ஒரு ஹார்மோன் சொல்கிறது. 'பார்' என்று. இன்னொரு ஹார்மோன் சொல்கிறது 'பார்க்காதே!' என்று. இன்னொரு ஹார்மோன் சொல்கிறது 'ஓடு.' இன்னொரு ஹார்மோன் சொல்கிறது 'பயப்படு.' இன்னொரு ஹார்மோன் சொல்கிறது 'உற்சாகமாய் இரு'. இப்படி ஒரே நேரத்தில் இத்தனை கட்டளைகளைப் பிறப்பித்தால் அது எப்படி இருக்கும்?
புது வீட்டிற்குள் சென்ற மருமகளைப் போன்றுதான் இருக்கும். பத்துப் பேர் ஒரே நேரத்தில் வேலை சொன்னால், பாவம், அந்தப் பெண் என்ன செய்வாள்? அப்படியே ஸ்தம்பித்துப் போய் நிற்பாள்.
நம் எல்லோர் முகத்தையும் பாருங்கள். அதுபோல், ஸ்தம்பித்துப் போன ஒரு முகம் நம் எல்லோரிடமும் இருக்கும். அனைவரிடமும் இதுபோன்ற இறுகிப்போன தன்மை இயற்கையாகவே உருவாகிவிட்டது.
அந்த இறுகிப்போன தன்மை மட்டும் இல்லாமல் தொடர்ந்து, உள்ளுக்குள் தொடர்ந்து தூண்டுதல் இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் எதுவும் நம்மால் செய்ய முடியவில்லை. இப்படி ஒரு முள்ளின் மீது நிற்பது போன்ற ஒரு சூழ்நிலையில் நம் உடம்பு இருந்து கொண்டிருக்கின்றது. உள்ளுக்குள் ஹார்மோன் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஹார்மோனுக்குப் பெயர்தான் 'பயன்படுத்தப்படாத ஹார்மோன்கள்'
இந்தப் பயன்படுத்தப்படாத ஹார்மோன்கள்தான் நச்சுக்களாக மாறி பிற்காலத்தில் நோயாக வெளிப்படுகிறது. திடீரென்று இரத்தக்கொதிப்பு வருவதில்லை. திடீரென்று சர்க்கரை வியாதி வருவதில்லை.
இப்படித்தான் படிப்படியாக நம்முள் உருவாகின்றது. இப்படி உருவாகும் விஷயங்கள் ஒருநாள் நமக்கு நோயாக வெளிப்படுகிறது.
இந்த செல்களுக்குள் இருக்கும் நச்சுக்களை எப்படி வெளியே எடுப்பது? ஒவ்வொரு செல்லுக்குள்ளும் தேங்கி இருக்கும் நச்சுக்களை எப்படி வெளியே எடுப்பது?
ஒரு துணியில் அழுக்கு இருக்கிறது. அவற்றைப் போட்டு அடித்துத் தோய்த்தால் வெளியில் வந்துவிடும். அதேபோல இப்பொழுது நமது செல்களுக்குள் அழுக்கு இருக்கின்றது. அழுக்கு வெளியேற வேண்டும். என்ன செய்யலாம்? இவ்வாறு உள்ளுக்குள் இருக்கும் நச்சுக்களை நாம் பிழிந்துதான் வெளியேற்ற வேண்டும். முறுக்குவதன்மூலம் வெளியேற்றலாம். நமது கைகளை முறுக்க முடியாது. ஒருவர் மற்றவரின் கைகளை பிடித்து முறுக்கமுடியாது. எனவே, இறுக்கமாக்க வேண்டும். உடல் பகுதிகளை இறுக்கமாக்குவதன் (Tight) மூலம் செல்களில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் வெளியேறிவிடும். இந்த முறையைத்தான் இந்தத் தியானத்தில் நாம் செய்யப் போகின்றோம்.
துக்கஹரணா தியானம் :
1. உங்கள் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து ஒரே சீரான சுவாசத்தை ஏற்படுத்த வேண்டும். முழங்கால் பாதியளவு மடியும்படி உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். குனிதல் கூடாது நேராக நின்று பக்கவாட்டில் பறவை பறப்பது போன்று கைகளை மேலும் கீழுமாக அசைத்து பாதியளவு முட்டியை மடக்கி எழுந்து, பின் மடக்கி எழுந்து ஒரே சீராக மூச்சு விடவேண்டும். இவ்வாறு பத்து நிமிடம் செய்தல் வேண்டும்.
2. அடுத்து, பத்து நிமிடம் உடலின் பாகங்களை, கால் பகுதியிலிருந்து உச்சந்தலை வரை படிப்படியாகக் கவனமாக அந்த பாகத்தை மட்டும் உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இறுக்கப்படுத்துங்கள்.
3. அமைதியாக இருந்த இடத்திலேயே அமர்ந்து சாட்சியாகப் பார்த்தல் (10 min) வேண்டும்.
“ஐயா! இரத்தக் கொதிப்பு, (BP) சர்க்கரை (Suger) வியாதி போன்ற நோய்கள் பரம்பரையான வியாதிகள் என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்களோ ஹார்மோனின் நச்சுத்தன்மையால் வருகிறது என்கிறீர்களே! எது சரி?” என்று தியான சத்சங்கத்தில் ஒரு அன்பர் கேட்டார்.
இரண்டும் சரியே!
ஒருவருடைய உடல் அமைப்பு பரம்பரையைப் பொறுத்தது. கண்டிப்பாக அது அவர்களின் வம்சாவளியை, பரம்பரையைப் பொறுத்துத்தான். நீங்கள் இந்த மாதிரி வடிவமைப்புடன் இருக்கிறீர்கள் என்றால் அது பரம்பரையினால்தான்.
உங்கள் தோலின் நிறம் இப்படி இருக்கிறது என்றால் அதுவும் பரம்பரையால்தான். இப்பொழுது நீங்கள் அழகுநிலையம் சென்று அழகு சாதனப்பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் தோலில் சிறிதளவு மாற்றம் ஏற்படுத்த முடியுமா?
முடியும்.
அதே போன்று சிறிது சூடுபட்டு, அதே தோல் கறுப்பாக முடியுமா?
நிச்சயமாக முடியும்.
நான் சொல்லியது சூடுபோட்டு வருவது. நச்சுத் தன்மையால் வரும் வியாதியைப்பற்றித்தான்.
வியாதியே வராமல் இருப்பது என்பது மிகவும் கடினம். எந்த ஒரு முதிர்ந்த மனிதனும் மூப்பால் இறக்கவில்லை. மூப்பால் இறந்ததாக மருத்துவ ஆய்வில் குறிப்புகளே Medical Record இல்லை.
ஒன்று, இதயம் செயலிழந்திருக்கும். இல்லையெனில் மூளை செயலிழந்திருக்கும். இல்லையென்றால் சிறுநீரகம் செயலிழந்திருக்கும். ஏதோ ஒரு உறுப்பின் செயலிழப்பின் காரணமாகத்தான் இறக்கிறார்கள்.
சாதாரணமாக ஒருவரின் உயிர் போனதற்கான அத்தாட்சிகளே மருத்துவ உலகில் இல்லை. பல மருத்துவர்களும் இன்று தங்களுடைய வாழ்வில் தியானங்களைக் கடைப்படிப்பது மட்டுமல்லாமல் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கும் பரிந்துரை செய்கின்றார்கள்.
தியானங்களை நீங்கள் செய்வதன் மூலமாக விழிப்புணர்வற்ற நிலையில் நிபந்தனைகளைச் சரிசெய்யும் சக்தியைப் பெறுகின்றீர்கள். (தியானம்) ஞானக் கருத்துக்களைத் தொடர்ந்து கேட்பதன் மூலம் (நித்யம்) விழிப்புணர்வு நிலையில் இருக்கும் நிபந்தனைகளை சரிசெய்யும் புத்தியைப் பெறுகின்றீர்கள்.
நித்யமும், தியானமும் ஒன்று சேர்ந்தால் ஆனந்தம் தானாகவே மலரும். தடைகளையே படிக்கற்களாக்கி ஆனந்தமாய் வாழ்வீர்கள்.
ஆனந்தமாய் இருங்கள்.
வாழ்க்கைக்காக என்ன சம்பாதித்தீர்கள்?
வாழ்க்கைக்காக என்ன செய்தீர்கள்?
25 வருடம் கழித்து நீங்கள் படித்து முடித்து வாழ்க்கையைச் சந்திக்க போகிறீர்கள், வாழ்க்கைக்கு, பணத்தையும் வசதிகளையும் தேவையான அளவு தயார் செய்து வைத்துவிட்டீர்கள்! ஆனால் வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
ஒரு மனிதனை புரிந்து கொள்வதற்கு என்ன கற்றுக் கொண்டீர்கள்? எதுவுமே புரிந்து கொள்ளாமல் எப்படி காலடி எடுத்து வைக்கப்போகிறீர்கள்?
இப்படித்தான் நாம் எல்லோருமே மிகப்பெரிய அபாயத்தில் இருந்தாலும், அபாயத்தில் இல்லாதது போல், சுதந்திரப் பறவைகளைப் போல் திரிந்து கொண்டிருக்கிறோம்.
இது மிக மிகத் தவறு,
கோபம் என்னும் உணர்வு ஒருபக்கம் எழுகின்றது. கவலை, என்னும் உணர்வு மறுபக்கம் வந்து முட்டுகிறது. துக்கம் என்னும் உணர்வு பிடித்து ஒரு பக்கம் இழுக்கின்றது. இது எல்லாவற்றிற்கும் நடுவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நமது வெற்றிக்கு எது தடைக்கல்லாக இருக்கிறது என்பதை எவ்வளவு விரைவில் தெரிந்து கொள்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது வெற்றியின் ரகசியம்.இது தெரிந்துவிட்டால் தடைக்கல்லும் படிக்கல்லே !
Nithyananda Dhyanapeetam
(Dhyanapeeta Charitable Trust)
Nithyanandapuri, Kallugopahalli, Off. Mysore Road, Bidadi - 562 109. Bangalore District, Karnataka, INDIA. Ashram : +91-80-27202801 / 27202084 Fax : +91-92430 48957 [email protected] www.nithyananda.org