மனதை தயார்படுத்தும் நுட்பம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு தத்துவப் பேராசிரியர் “நாம் அனைவரும் பல்வேறு விஷயங்களில் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறோம் நம்மால் அதைவிட்டு வெளியே வரவே முடியாது” என்று நிபந்தனைகளைப் பற்றி விரிவாக வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் மாணவர்களுக்கோ அந்தக் கருத்துக்களில் உடன்பாடு இல்லை. “நாங்கள் மிகவும் சுதந்திரமானவர்கள், எது வேண்டுமானாலும் நாங்கள் செய்வோம், நீங்கள் கூறுவதுபோல் எங்களுக்கு எந்த விதமான நிபந்தனைகளும் கிடையாது” என்று சொன்னார்கள்..
அதற்குப் பேராசிரியர், “இல்லை, உங்களுக்கும் அதேபோலக் கட்டுப்பாடுகள் உள்ளது. உங்கள் மனம், மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. நீங்களும் சில கட்டுப்பாடுகளில் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் உங்களால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை” என்று பேராசிரியர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் மாணவர்கள் அதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. “சரி, தகுந்த நேரம் வரும்போது நானே சொல்கிறேன்” என்று வகுப்பு முடிந்ததும் பேராசிரியர் விடைபெற்றுச் சென்றார்.
அடுத்தநாள் காலை மாணவர்கள் அனைவரும் தேநீர் அருந்த, கல்லூரிக்கு அருகில் இருந்த கடைக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் போது எண்ணெய் வாளியையும், முட்டைகள் நிரம்பிய வாளியையும் இரண்டு கைகளில் தூக்கிக்கொண்டு ஒரு முதியவர் நடந்து வந்தார்.
அவரைப் பற்றி ஏற்கெனவே பேராசிரியருக்குத் தெரியும். எனவே மாணவர்களிடம், “அனைவரும் அவரைக் கவனமாகப் பாருங்கள்” என்று சொன்னார். முதியவர், மாணவர்கள் பக்கத்தில் வந்தவுடன், பேராசிரியர், ‘அட்டென்ஷன்’ எனச் சப்தமாகச் சொன்னார். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அதுவரை பாதுகாப்பாய்ச் சுமந்து கொண்டு வந்தவர், இரண்டு வாளியையும், சட்டென்று கீழே போட்டு விட்டு நேராக நிமிர்ந்து நின்று சல்யூட் அடித்தார்.
ஏனென்றால் அவர் 20 வருடம் இராணுவத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர். அவரது உணர்வற்ற மனதில் (Unconscious Mind) ‘அட்டென்ஷன்’ எனும் வார்த்தையைக் கேட்டதும், வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் சல்யூட் அடித்துவிட்டார். ‘அட்டென்ஷன்’ என்றால் அந்த உடல் அப்படிப் பிரதிபலிக்கும் அளவிற்குப் பதிந்துவிட்டது.
அப்பொழுது அந்தப் பேராசிரியர் மாணவர்களிடம் “இதற்குப் பெயர்தான் நிபந்தனைக்குட்பட்ட நிலை” என்று சொன்னார். மாணவர்களும் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டார்கள்.
இதுபோன்று நமக்குள் நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளது. நீ பெண், நான் ஆண் என்பதே கட்டுப்பாடுகள்தான். இது போன்று சமுதாயம் பல வேலைகளை நம்மைச் சுற்றிச் செய்து வைத்திருக்கிறது. இந்த நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் என்பது, நமது மனம் என்னும் சாஃப்ட்வேரில் நிறைய ஒளிந்து கொண்டிருக்கின்றது.
தியானம் செய்யச் செய்ய இந்தக்
கட்டுப்பாடுகள் என்னும் ஒவ்வொரு
அடுக்குகளும் கீழே இறங்கிக் கொண்டே
இருக்கும். உங்கள் மனம் லேசாகி நெகிழும்
தன்மையுடன் காணப்படும். அதன்பிறகு மனம்
மிகச் சுலபமாகி தயாராகிவிடும்.
ஒரு மாணவன் தன்னுடைய வாழ்க்கையில்
சாதிக்க உடல் நலம், மன நலம்,
ஆரோக்கியமான உறவுகள் இது மூன்றும்
மிகவும் அவசியம்.