முன்னுரை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உண்மையிலேயே நம்முடைய மனம்தான் சமுதாயம். மனமே இல்லாத பொருளை இருப்பதாகக் காட்டி நம்மை ஆசைகளிலும், அச்சத்திலும் அலைக்கழிக்கிறது. நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையான நிம்மதியின்மைக்கும், துக்கத்திற்கும் நம்முடைய ஆசைகளும், அச்சங்களும்தான் ஒரே காரணம்.
"அப்படியென்றால் ஆசைதான் இவ்வளவு துக்கத்திற்கு காரணமா?"
நிஜமான ஆசைகளும், அச்சங்களும் எப்போதும் நம் வாழ்க்கையில் துக்கங்களை உருவாக்குவதில்லை.
நம்முடைய வாழ்க்கையில் இரண்டு விதமான ஆசைகளும், துக்கங்களும் இருக்கின்றன. நிஜமான ஆசைகள் உங்கள் உடலை இயக்கும் உந்து சக்தியாகவும், நிஜமான அச்சங்கள் நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளும் தற்காப்பு எண்ணங்களாகவும் இருக்கும்.
இரண்டாவது வகை... போலித்தனமான ஆசைகள் மற்றும் போலித்தனமான அச்சங்கள். சமுதாயம் நம்மீது திணித்துவைக்கும் எண்ண ஓட்டங்களேயின்றி வேறில்லை.
துன்புறுத்தும் ஆசைகளிலிருந்தும் எண்ணவோட்டத்திலிருந்தும் வெளிவருவது எப்படி? அதற்கு பரமஹம்ஸர் அளிக்கும் வாழ்வியல் தீர்வுகளை இப்புத்தகத்தில் தொகுத்தளித்திருக்கின்றோம்.
தடைக்கற்களைப் படிக்கற்களாக்குங்கள்
மனம் ஒரு சாஃப்ட்வேர்
சேலத்தில் நிகழ்ந்த ஒரு தியான சத்சங்கத்தில் கல்லூரி இளைஞர் ஒருவர் இப்படி கேட்டார், “என்னுடைய மனம் என் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. நான் எவ்வளவோ முயற்சி செய்தும் மனதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறேன். தொடர்ந்து தோல்வியையே சந்தித்து கொண்டிருக்கின்றேன். இது எதனால்? அதற்கு அலைபாயும் மனம்தான் தடையா?” என்று கேட்டார்.
அவருடைய குழப்பம்தான் பெரும்பாலானவரின் சந்தேகமும் என்பதால் “மனம் என்றால் என்ன?” என்று முதலில் பார்ப்போம்.
இந்த மனதைப் பற்றி என்ன நினைத்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள அனைவரும் ஒரு நிமிடம் கண்களை மூடி மனம் எங்கிருக்கிறது என்று பாருங்கள். மனதைக் கண்டுபிடியுங்கள்.
இப்போது நாம் சொல்லும் பேச்சை நம் உடல்
நிச்சயம் கேட்கும். “கையைத் தூக்குங்கள்,
கீழே இறக்குங்கள்” என்று சொன்னால்
நிச்சயம் நம்மால் இதைச் செய்யமுடியும்.
ஏனென்றால் நாம் சொல்வதை நமது உடல்
கேட்கின்றது.
நாம் சொல்லும் எல்லாவற்றையும் இவ்வளவு
திடமான உடல் கேட்கும்பொழுது மனம்
மட்டும் நாம் சொல்வதை ஏன் கேட்பதில்லை?
ஏனென்றால் மனம் நமது கட்டுப்பாட்டில்
இல்லை. மனம் நம் கட்டுப்பாட்டில்
இல்லையா? அல்லது நாம் மனதின்
கட்டுப்பாட்டில் உள்ளோமா? என்பதுதான்
நமது பிரச்சினை.
> ஒரு அடுக்கின் மீது ஒரு
> அடுக்காக, அழுத்தங்களால், நம்
> மனம் தடித்துப்போய்
> இருக்கிறது. அதற்குள் மனம்
> நிபந்தனைகளாலும்,
> விதிமுறைகளாலும் மாட்டி, சிக்கி
> விழித்துக்கொண்டுள்ளது.
> அதைவிட்டு அதனால் வெளியில்
> வரவே முடியாது.
இப்போது ஒரு பெரிய நகரத்தைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் சாப்ட்வேரில் லோட் செய்து விடுகின்றனர். இந்த நேரத்திற்குத் தான் வரவேண்டும், இந்த நேரத்திற்குத்தான் போகவேண்டும் என்ற விதிகளையும், விதிமுறைகளையும், ஒழுங்குபடுத்துதலையும் கம்ப்யூட்டர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்று நிர்ணயித்து விடுகிறார்கள். இதுபோன்ற ஒருமுறை நிர்ணயித்துவிட்டால், அதிலிருந்து நாம் தப்பிக்க முடியுமா?.
கம்ப்யூட்டரில் எப்படி இருக்கின்றதோ அதைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம்மால் அந்த விதிமுறைகளில் இருந்து மீளவே முடியாது. அதுபோல்தான் நம் மனமும். மனம் என்பது இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஒரு பரிசுத்தமான சாஃப்ட்வேர். அந்த சாஃப்ட்வேரில் என்ன திட்டங்கள் பதிவு செய்து வைக்கின்றோமோ அதன்படிதான் அது வேலை செய்யும்.
இப்போது நம்முடைய மனம் என்ற சாஃப்ட்வேரை யார் உருவாக்கி இருக்கிறார்கள் என்று பார்ப்போம். முதல் விஷயம், நாம் அதை உருவாக்கவில்லை. அப்படியென்றால் நம்மை வளர்த்த பெற்றோர்கள், சுற்றியுள்ள உறவினர்கள், சமுதாயம், ஆசிரியர்கள் இவர்கள்தான் சேர்ந்து அதை உருவாக்கியிருக்கிறார்கள். நம்முடைய சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அதைப்போல்தான் அந்த சாஃப்ட்வேர் உருவாகியிருக்கும்.
ஒருமுறை விதிமுறைகள் உருவாக்கப்பட்டவுடன் எப்படி அந்த மொத்த நகரமும் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததோ, அதேபோல் இந்த மனம் என்ற சாஃப்ட்வேரின் கட்டுப்பாட்டில் நாம் வந்து விட்டோம். ஆனால் ஒருமுறை குறிப்புகள் சேர்க்கப்பட்டு, அதில் தவறாகப் பதிவாகிவிட்டது என்றால் நாம் பார்த்துச் சரி செய்யும் வரை தவறாகவே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்.
அப்படியென்றால் சாஃப்ட்வேர் அப்படியேதான் இயங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நம்மால் சரியான குறிப்புகளைக் கொடுத்து சாஃப்ட்வேரை மீண்டும் மாற்றி, திருத்தியெழுதி ஒழுங்குபடுத்த முடியும்.
மனதை ஒழுங்குபடுத்துவது ஒரு பெரிய காரியமே அல்ல. அது மிகவும் எளிதான ஒரு செயல். ஆனால் அதை .எப்படி ஒழுங்குபடுத்துவது? அந்தக் காரியத்தைச் செய்வதற்கு முன் மனதின் ஒரு முக்கியமான தன்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் எல்லோருடைய மனமும் சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. ஒரு அடுக்கின் மீது ஒரு அடுக்காக, அழுத்தங்களால், நம் மனம் தடித்துப்போய் இருக்கிறது. அதற்குள் மனம் நிபந்தனைகளாலும், விதிமுறைகளாலும் மாட்டி, சிக்கி விழித்துக்கொண்டுள்ளது. அதைவிட்டு அதனால் வெளியில் வரவே முடியாது.
எந்த சூட்சும முறைகளையும் பயன்படுத்தாதவரை மனம் அப்படியேதான் இயங்கிக் கொண்டிருக்கும். எப்படி சாஃப்ட்வேர்க்குத் தன்னையே மாற்றிக் கொள்ளும் தன்மை இல்லையோ, அதே போன்றுதான் மனதிற்கும் தன்னையே மாற்றிக் கொள்ளும் தன்மை அதற்குக் கிடையாது. ஏனென்றால் நிபந்தனைக்குட்பட்டே மனம் இயங்குகிறது.
இந்த நிபந்தனைக்கு உட்பட்ட நிலையைப் பற்றி விளக்கிக் கூறவேண்டும் என்றால் ஒரு சிறிய கதையின் மூலம் விளக்கலாம்.