ஆசைப் பாம்புகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆசை தவறா... ஆசையில்லாமல் எப்படி வாழ்வதாம்? ஆசை தவறுதானே... அப்பப்பா ஆட்டிப் படைக்கிறதே இந்த ஆசைகள்... இப்படி ஓசைப்படாமல் உள்ளே புலம்புவர்களுக்கு மருந்திடும் இசைமிகு வார்த்தைகள்...
குரு சிஷ்யன்
‘ஆசை தவறா’
‘இல்லை தவறில்லை’
‘அன்று ஆசைப்படுவது தவறென்றீர்களே!’
‘அன்று மட்டுமில்லை
இன்றும் சொல்கிறேன்
ஆசைப்படுவது தவறு’
‘அப்போ! கொஞ்சநேரம்முன்
ஆசை தவறில்லை
என்றீர்களே’
‘இப்போதும் சொல்கிறேன் ஆசை தவறில்லை’
‘ஐய்ய்யோ!
என்ன சாமி குழப்பமாயிருக்கிறதே ஒன்றுமே புரியலையே!’

மீண்டும் சொல்கிறேன் கேள்!
ஆசை தவறில்லை
ஆசைப்படுவது தவறு'
‘... ... ...’
‘இப்பிரபஞ்சத்தில்
நீ வாழ உரிமையிருக்கிறது
அதேபோல்
ஆசைக்கும் வாழ
உரிமையிருக்கிறது
‘தெய்வத்தாய்’ தடுப்பதில்லை!
‘என்ன சொல்கிறீர்கள்?
ஆசையை
ஒரு தனிப் பொருளாய்ச்
சித்தரிக்கிறீர்கள்’
‘ஆம்!
நெருப்பு போல்
காற்று போல்
சக்திபோல்
ஆசையும் தனியே!
இருந்தும் இல்லாதிருக்கும்
அது
வாழ்கிறது’
‘... ... ...’
‘மந்தத் தன்மையிலிருப்பவன்
வலியச் சென்று
ஆசைகளை ஏற்றிக் கொள்கிறான்.
மனப் போதைக்காக -
ஏறியதும் அவை
ஆட்டிப்படைக்கின்றன அவனையே!’
விழிப்புணர்வு குறையப்
பெற்றிருப்பவனுக்குள்
வீரியமான ஆசைகள்
புகுந்து விடுகிறது.
சில நேரம்
புகுத்தப்படுகிறது.
இது புரியா மனிதன்
இந்த ஆசைகளைத்
தன் ஆசைகளாய்த்
தத்தெடுத்து
பால் வைத்து
முட்டை வைத்து
வளர்க்கிறான்! வளர்கிறது!
ஆசைப்படுகிறான்.
ஆசைகளுக்காய்
வாழ ஆரம்பித்து
தனக்காய்
வாழப் பிறந்ததை
மறந்து விட்டான்.
‘... ... ...’
‘அதனால் தான்
ஆசைப்படுவது தவறு
ஆசை தவறில்லை.
உனக்காய் வாழ
உனக்கென
ஒரு சில ஆசைகள்
எடுத்து வந்தாய் - நீ
உடல் எடுக்கும்போது.
அந்த ஆசைகள்
அனுபவிக்கப்பட வேண்டும்.
அனுபவித்ததும்
ஆசைப் பாம்புகளால்
பின்னப்பட்ட வலையிலிருந்து
விடுதலையடைவாய்
சுதந்திரமடைவாய்
ஆனந்தமடைவாய்’
‘அப்படியா சொல்கிறீர்கள்!
எனக்காய் வாழ
நான் எடுத்து வந்த
ஆசைகளை
ஆசைப் பாம்புகளிலிருந்து
இனங்காணுவது எப்படி?’
‘எளிது மிக எளிது!
எடுத்து வந்த ஆசைகளில்..
எது உன்னை
ஒருமுறையாவது
முழுதிருப்தியுறச்
செய்தது?
எது உன்னை
மீண்டும் மீண்டும்
'என்னை அனுபவி'
'என்னை அனுபவி'
எனத் தூண்டவில்லை?
அதுவே! அதுவே! உன் ஆசைகள்'
ஒரு தாவோ கீதம்...
ஆசைகள் விடாது
கொக்கிப் பிடிக்கும் உடும்புகள்
நீ உதறாத வரை
நீ உலுங்காத வரை.
கவனி! கவனி! கவனி!
உடும்பும் உலுக்கப்படும்
நீயும் சுதந்திரம் பெறுவாய்.

உன்
ஆசை
நிஜ
ஆசை
உலகம்
உன்னுள்
புகுத்திய
ஆசைகளே
ஆசைப்
பாம்புகள்
46