தனியாய்ச்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
செய் புரட்சி
'தாவரங்கள்
விழித்துக்கொண்டே
தூங்குகிறதா? - இல்லை
தூங்கிக்கொண்டே
விழித்திருக்கிறதா?'
கேட்ட பகுத்தறிவாளனிடம் குரு,
'தெரிந்தென்ன பயன்?
விழித்துக்கொண்டே
தூங்கும் உனக்கு?'
என்றாவது
பகுத்தாயா உன் அறிவை!
உலகைப் பகுத்து அறி!
யார் குறை சொன்னது?
உன்னைப் பகுக்காமல்
மற்றவரைப் பகுக்கப்
புறப்படுவதேன்
என்றாவது யோசித்தாயா?
முறைப்படுத்து
பகுத்தறிவுப் பயன்பாட்டை
முறைபடுவாய்
முறைக்கும் குணம்
வெறிக்கும் மனம்
நெறிக்குள் வரும்
தானாய்...
சமுதாயப் புரட்சிக்கு
நாட்டிய அடிக்கல் நல்லதே
யார் குறை சொன்னது?
இதைவிட முக்கியமானது
தனிமனிதப் புரட்சி
விட்டுவிட்டாயே அதை!
வெளியே விழித்து
உள்ளே தூங்குவதால்
துக்கம் வழியும்
இதயத்தை இதப்படுத்து!
செய் தனிமனிதப் புரட்சி!
பகுக்காதே!
வகுக்காதே!
மற்றவர்களைப்
பகு
வகு
உன்னைப்
புகு
புது
சுக வாழ்வுக்குள்'
எனச் சொன்னார்.
