KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/யாரை ஏமாற்ற...?Sign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

யாரை ஏமாற்ற...?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒருவர் புலம்பினார்...

‘என்ன செய்வது
கடவுள் கொடுத்து விட்டான்
பத்து குழந்தைகளை’

அவரிடம் சொன்னேன்...

பிள்ளை இல்லாவிட்டால்,
பெண் மலடி என்பது அக்காலம்.
ஆண்??? என்பது இக்காலம்
பிள்ளைகள் நிறைய பெற்றால்,
‘கடவுள் கொடுத்தான்’ என்பது எக்காலமும்
கடவுளா கொடுத்தான்?

நல்ல
நிகழ்வுகளுக்கு
நான் காரணம்
என நம்புவனே
கெட்ட நிகழ்வுகளுக்கு
அடுத்த ஆளைக்
காரணங்காட்டி
கஷ்டப்படுவான்!
நிஜத்தில்...
நல்லதெல்லாம்
கடவுளாலும்
கெட்டதெல்லாம்
கள்ள மனதாலும்
அரங்கேறுகின்றன.