யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!
என்ன பதில் சொல்வீர்கள்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
⇨ இன்னும் கேட்டுக்கொண்டேயிருந்தால் எப்படி?
கொடுத்ததைக் கொண்டு கொண்டாடினாயா?
இப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தால்...
எப்போதுதான்
கொண்டாடுவாய்?
உத்தேசமாகவாவது சொல்!
என - நீங்கள் வேண்டிக் கொள்ளும்போது
கடவுள் கேட்டால்
என்ன பதில் சொல்வீர்கள்?

கேட்டதையெல்லாம்
கொட்டிக் கொடுக்கும்
சக்தி
படைத்தவன்
கடவுள்
என நம்பும் மனிதன்
எதை
எப்போது
எப்படித் தரவேண்டும் என்ற
புத்தி
படைத்தவன்
கடவுள்
என நம்ப மறுக்கிறான்
16