KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/இறைவன்Sign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

இறைவன்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேட்கும் கேள்வி

⇨

சொர்க்கம் சென்றால்,
இறைவனைப் பார்த்தால்,
இது நடக்கும்.

‘யாருக்கு
என்னென்ன செய்தாய்?’
எனக் கேட்க மாட்டார்

‘நீ என்ன செய்தாய் உனக்கு’
என்றே கேட்பார்
முதல் கேள்வியாய்

நீ ஒன்றுமில்லையென சொன்னால்
‘ஈவு இரக்கமில்லாதவனே!’
எனத் திட்ட மறக்க மாட்டார்.

பின் குறிப்பு :

உங்களுக்குத்தான் வாழ்கிறீர்கள் என நினைக்கிறீர்கள். அது சுயநலம்! என்பர் உம் அன்பர். காரணம், ‘நீங்கள் செய்யும் சேவையெல்லாம்’ உங்களுக்கு என நினைத்து, உங்களையே உறிஞ்சி வாழும் ‘உயிர்குடிப்பான்’ அகங்காரத்திற்கே செய்கிறீர்கள்!

சுயநலம் தாண்டி
சுயம் நலமாக ஏதாவது செய்யுங்கள்!
அப்படிச் செய்தால்...

‘தியானமா செய்தாய்... நல்லது கண்ணே!’
என்பார் இறைவன்
சொர்க்கத்தில்
உங்களைச் சந்திக்கையில்.