Tension மறைந்து இனிமையுணர்வு பொங்கும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நித்திராஜ் புதிதாகத் திருமணம் முடிந்து ஹனிமூனைக் கொண்டாடுவதற்காக சுற்றுலா சென்றிருந்தார்.
ஒரு பெரிய ஆற்றில், சின்னப் படகில் நித்திராஜும், அவரது மனைவியும் சந்தோஷமாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத திருப்பத்தில் படகு திடீரெனக் கவிழ்ந்து விடுவதுபோல் தள்ளாட ஆரம்பித்தது. மனைவி பயத்தில் அலற உடலெல்லாம் வியர்த்து விட்டது. ஆனால் நித்திராஜோ எந்தவிதப் பயமும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.
"எப்பவேணும்னாலும் படகு கவிழ்ந்து விடும் போலிருக்கிறது. ஏன் சிரிக்கிறீங்க. உங்களுக்கு சாவைப் பற்றிய பயம் இல்லையா?" என்று மனைவி கேட்டார்.
திடீரென நித்திராஜ், மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து, மனைவியைக் கொல்லப்போவதாக மிரட்டினார். அவரின் மனைவி பயப்படவில்லை. மாறாக அவர் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
"நீ ஏன் சிரிக்கிறாய்? உனக்கும் சாவைப் பற்றிய பயமே இல்லையா?" என்று கேட்டார் நித்திராஜ்.
"எனக்கெப்படி பயம் வரும். நீங்களோ என்னை மிகவும் நேசிப்பவர். என்னை அன்புடன், பாதுகாப்பவர். உங்களால் எப்படி என்னைக் கொல்ல முடியும்? அப்படி நீங்கள் ஏதாவது செய்தாலும் என்னுடைய நல்லதிற்காகத்தான் செய்வீர்கள். அதனால்தான் பயப்படாமல் சிரித்துக் கொண்டிருந்தேன்.” என்று சொன்னார் மனைவி.
உடனே நித்திராஜன், "அதேபோல்தான், கடவுள் நம் எல்லோரையும் மிகவும் ஆழமாக நேசிப்பவர். நம் எல்லோரையும் அன்புடன் அரவணைப்பவர், பாதுகாப்பவர். அப்படியே நமக்கு வேறு எதையாவது செய்தாலும், நம் நன்மைக்குத்தான் செய்வார்.

நம்முடைய
அத்தியாவசியத்
தேவைகளை
எல்லாம் பார்த்துக்
கொள்ளும் மாபெரும்
சக்தி இருக்கிறது
இந்தப் பூமிக்கு நம்மை அனுப்பி வைத்த அவருக்கு, நமக்கு எப்போது எதைச் செய்ய வேண்டும், அதையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியாதா என்ன?" எனக் கேட்டு முடித்த போது, மனைவியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது. இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அளப்பறிய சக்தியுண்டு.
வாழ்வில் நமக்கு ஏற்படும் தடுமாற்றங்கள், பிரச்சினைகள், பரிதவிப்புகள் போன்ற எல்லாவற்றையும் அந்த ஒரு சக்தியைக்கொண்டே எளிதில் தாண்டி வந்து விடலாம்.
கடவுள் நம்பிக்கை பற்றி பலர் என்னிடம் கேட்பதுண்டு. அப்போது... "கடவுளா? நம்பிக்கையா?" "எது பெரியது” என்ற கேள்வி எழும்போது, "கடவுளின் மேல் வைக்கும் நம்பிக்கையைத் தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம்.
இந்த நம்பிக்கை ஊற்றெடுப்பதற்கான சக்தியாக, சக்தி வடிவமாக கடவுள் இருப்பார்” எனச் சொல்வதுண்டு.
மரம் முளைக்கின்றது, பறவைகள் பறக்கின்றன, மழை பெய்கின்றது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான காரியங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. நாம் இதற்கு ஏதும் செய்யவில்லை. நம்மை மீறிய ஒரு சக்தியால்தான் நடைபெறுகின்றது. அந்தச் சக்திதான் இறைசக்தி.
தன்னுடைய தேவைகளை அம்மா கவனித்துக் கொள்வாள் என்ற ஒரே காரணத்தினால்தான் குழந்தை ரிலாக்ஸ் ஆக இருக்கின்றது. இல்லையெனில் குழந்தையால் நிம்மதியாக இருக்க முடியாது. அதேபோல் நம்முடைய அத்தியாவசிய தேவைகளையெல்லாம் பார்த்துக் கொள்ளும் மாபெரும் சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கையை இழந்து விட்ட ஒரு மனிதனால்தான் ரிலாக்சாக இருக்க முடியாது. டென்ஷனின் மூலக்காரணம் வாழ்க்கை மீதான அவநம்பிக்கைதான். அவநம்பிக்கையைப் போக்கி விட்டால் வாழ்வு இனிக்க ஆரம்பித்து விடும்.
ஆத்ம தியானம்
நாம் ரிலாக்சாக இல்லாதிருப்பதும், நம்பிக்கையை இழப்பதும் தான் நரகம். அப்படி இருக்கும் போதுதான் நமக்குள் டென்ஷன் உருவாகும். அதிருப்தி பிறக்கும்
“எங்கம்மா என்னைப் பார்த்துப்பா!” எனும் குழந்தையின் நம்பிக்கைதான் குழந்தையைச் சொர்க்கத்தில் வாழ வைக்கிறது.
நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், பிரபஞ்சத்தையே இயக்கும் சக்திதான் நம்மையும் இயக்குகிறது.
இறைசக்தி மற்ற எல்லாவற்றையும் அருமையாய் பார்த்துக் கொள்வது போலவே, நம்மையும் பார்த்துக் கொள்ளும் என்ற ஆழமான புரிந்து கொள்ளுதலுக்குள் நுழையுங்கள்... நரகம், சொர்க்கமாகும். அதிருப்தி, பூரண திருப்தியாகும். டென்ஷன், பரிபூரண இளைப்பாறுதலாகும்.
இது நிகழ்ந்து விட்டால் நித்திராஜனைப் போலவே... வாழ்க்கை எனும் கடலில் எவ்வளவுதான் எதிர்பாராத அலைகள், அவசர நெருக்கடிகள் எழும்பினாலும் நித்திராஜனைப் போல நிம்மதியாக, நிதானமாக இனிமையான உணர்வோடு இருப்பீர்கள்.