KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/வலி தியானம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

வலி தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வலியைப் பரவசமாய் மாற்றும் தியானம் வலி தியானம்.

இந்தத் தியானம் மிகவும் சக்திவாய்ந்த தியானம்.

யார் வேண்டுமானாலும் செய்யலாம். சில நிமிடங்கள் மட்டுமே போதும்.

வலி ஏற்பட்ட உடனேயே கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களின் மொத்த விழிப்புணர்வையும் வலியிருக்கும் இடம் நோக்கிக் குவியுங்கள்.

விழிப்புணர்வோடு வலியிருக்கும் இடத்தை நீங்கள் ஊடுருவ, ஊடுருவ வலியின் பரப்பளவு சுருங்க ஆரம்பிக்கும். அதேநேரத்தில் வலியின் அளவு குறையும். தொடர்ந்து விழிப்புணர்வோடு வலியிருக்குமிடத்தை பார்க்கப் பார்க்க சுருங்கி, சுருங்கி ஒரு புள்ளியாக திடீரென ஒரு கட்டத்தில் பளிச்சென பரவசமாய் உடலுக்குள் பரவ ஆரம்பிக்கும்.

“அட! இவ்வளவு பரவசமாய் பரவும் இடத்திலா வலியை உணர்ந்தேன். இந்த இனிமையான உணர்வையா வலியாகப் பார்த்தேன்” என ஆச்சரியப்படுவீர்கள்! செய்து பாருங்கள்.