பயத்தை எளிதில் போக்கலாம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“என்ன செய்தாலும் இந்த எண்ணங்கள் ஓய்வதே இல்லையே... அதுவும் சில சமயங்களில் எண்ணங்கள் என்னைக் கசக்கி விடுகின்றன. முக்கியமாகச் சொல்லவேண்டுமானால் மரண பயம். என்னுள் பயத்தைக் கிளப்பிவிடும். இந்த எண்ணங்கள் வந்தால் என்னுடைய நிம்மதி அத்தோடு பறிபோய்விடுகிறது. அன்றைய தினம் அவஸ்தையில்தான் முடிகின்றது.
இதிலிருந்து எனக்கு விமோசனம் உண்டா?” என்ற கேள்வியை நித்ய தியான முகாமில் ஒரு IT மாணவர் கேட்டிருந்தார்.
அப்போது அவருக்குச் சொன்ன பதில், “நீங்கள் நினைப்பது போல உங்களின் மரண பயத்திற்கு உங்களின் மீது எந்த விதமான ஆதிக்கமும் இல்லை...
கல்லை நீங்கள் கையில் எடுக்கும் வரை உங்களைக் கடிப்பதற்கு தயாராயிருக்கும் நாயானது, கல்லை, நீங்கள் கையில் எடுத்த மாத்திரத்தில் அங்கேயிருந்து ஓடிவிடும்.
உங்களின் பயமும் அப்படித்தான். கவனத்தைக் கையிலெடுங்கள். பயமும் ஓடிவிடும்.
ஒரு வேளை கல்லைக் கையிலெடுக்காமல் இருந்தால் அந்த நாய் உங்களைக் கடித்துவிடலாம். கடிக்குமளவிற்கு வல்லமையோடு இருப்பதாகத் தெரியும் நாயையே ஒரு சிறு கல்லால் ஓட்டி விட முடியும்.
அதே போலத்தான் உங்களின் பயமும். கவனத்தையும், விழிப்புணர்வையும் நீங்கள் கையிலெடுத்த மாத்திரத்தில் அது அங்கேயிருந்து ஓடிவிடும். அதற்கு மேல் அது உங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தாது” என்று அன்று அவர் சொன்ன வரிகளைத்தான் IT மாணவரின் கேள்வியைப் படித்ததும் நினைவு கூர்ந்து சொன்னேன்.
இப்போது பலரின் வாழ்வில் நேரிடையாக உதவப் போகும் முக்கியமான உள்ளுலக அறிவியலை Inner world science பார்ப்போம்.
ஆச்சாரியர் ஒருவரோடு நிகழ்ந்த இனிமையான உரையாடல் ஒன்று.

தங்களின் பெயர் கெட்டுப்
போய் விடக் கூடாது
என்பதற்காகவும்,
மற்றவர்களிடம் நல்ல
பெயர் வாங்க வேண்டும்
என்பதற்காகவும் மக்கள்
படும்பாடு இருக்கிறதே
அது சொல்லி மாளாது.
உங்களின் அந்தஸ்து பற்றிய
பயம்தான் அது.
ஆச்சாரியரிடம் கேட்டேன் “மிகப்பெரிய பயம் எதுவாக இருக்க முடியும்?” அவர், “மரணத்தைப் பற்றிய பயம் தானே!” என்றார்.
“இல்லை
மரணத்தைத் தாண்டிய பயம் இருக்கின்றது”
“மரணத்தை தாண்டிய பயம் என்ற ஒன்றும் இருக்கின்றதா?”
“ம்....... இருக்கின்றது. மரணம் பற்றிய பயமாவது எதிர்காலம் பற்றியது. அது உங்களை வலுவாக பாதிக்கப் போவதும் எதிர்காலத்தில்தான்.
ஆனால் தினம் தினம் மனிதனைச் சாகடிக்கும் பயம் இருக்கின்றது.
பலர் தங்களின் வாழ்வையே இந்தப் பயத்திற்காக குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்கள்.”
“அப்படியென்ன பயம்? அது என்னால் கண்டு பிடிக்க முடியவில்லையே”
“உங்களின் அந்தஸ்து பற்றிய பயம்தான் அது. தங்களின் பெயர் கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவும், மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் படும்பாடு இருக்கிறதே அது சொல்லி மாளாது. தன் அந்தஸ்தையும், தன் பெயரையும் கட்டிக் காக்கத் துடிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரிவதே இல்லை".
"எந்த உண்மை"
"இப்போது மட்டும் உங்களை மற்றவர்கள் நல்லவர்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்களா என்ன? உங்களை நல்லவர்களாக நினைப்பவர்கள், நீங்கள் அவருக்கு முன் நல்லவர்தான் என நிரூபிக்காவிட்டால்கூட உங்களை நல்லவராக மட்டும்தான் அவர்களால் பார்க்க முடியும்.
அதேபோல உங்களை நல்லவர்கள் என நம்பாதவர்களிடம் உங்களைப் பற்றி எவ்வளவுதான் நல்லவிதமாக எடுத்துச் சொன்னாலும் அது நடக்காது"
"அட! இந்த உண்மையைக் கேட்ட பிறகு அந்தஸ்தைக் காப்பாற்ற மனிதர்கள் செய்வதெல்லாமே வேலையில்லாத வேலையைப் போலல்லவா தெரிகிறது".
"ஆமாங்க!"
அந்தஸ்து, பெயர், புகழ், பயம் என்பதெல்லாம் அவை உங்களிடம் இருக்கும்வரை இருக்கும். உங்களிடமிருந்து அவை போகும்போது அவற்றை யாராலும் தடுக்க முடியாது.
இந்த வாழ்வில் அறிவியல், கலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்ட மனிதர்கள்தான், தன் அந்தஸ்தைக் காப்பாற்றுவதற்காக தன் ஆயுளையே அடகு வைக்கவும் தயாராயிருப்பார்கள்.
மற்றவர்களின் பேச்சும், ஏச்சும் தங்களின் பெயரைப் பாதித்து விடக் கூடாதே! என்ற ஒரு பயத்தைக் கையில் வைத்துக் கொண்டு, ஒரு நாளின் ஒவ்வொரு படியையும் பயந்து பயந்துதான் அணுகுகின்றார்கள். பேசுவதையும், சிரிப்பதையும் கூட இதனால் அளந்து அளந்தே தான் செய்கின்றார்கள்.
உங்களை நல்லவர்களாக நினைப்பவர்கள், நீங்கள் அவருக்கு முன் நல்லவர்தான் என நிரூபிக்காவிட்டால்கூட உங்களை நல்லவராக மட்டும்தான் அவர்களால் பார்க்க முடியும். இந்தப் பயத்தை ஒருவர் தாண்டி விட்டாரென்றால் மரண பயம் என்பதெல்லாம் அவரின் கால் தூசிக்கு சமமாகாது.
பயத்தைத் தாண்டுபவர் பலம் வாய்ந்தவராகி விடுவார்'' என்று ஆச்சாரியரிடம் சொல்லி முடித்தேன்....
பயத்திற்கே நீங்கள் பயப்படும்வரைதான் உங்களை பயப்படுத்தும் சக்தியிருக்கிறது.

பயத்தை போக்கும் தியானம்
எந்த ஒரு உணர்விலும் உங்களால் தொடர்ந்து இருக்க முடியாது. உயிரையே உலுக்கக்கூடிய மரண பய உணர்வாக இருந்தாலும்கூட அதனாலும் தொடர்ந்து வெகு நேரம் உங்களுடைய உள்ளுலகில் தாக்குப் பிடிக்க முடியாது.
இந்த ஒரு உதாரணத்தை ஆராய்ந்து பாருங்கள். மேல் சொன்ன உண்மை ஆழமாய் புரிய வரும்..... தன் மிக நெருங்கிய உறவினரை இழந்த ஆழ்ந்த துக்கத்தில் குமுறி அழும் அதே நபர் தான், தன் துக்கத்தையும் மீறி அந்த உறவினரின் இறுதிச் சடங்குகளைப் பற்றி யோசித்தாக வேண்டும்.
அப்படியென்றால்... இறுதிச்சடங்குகளைப்பற்றிஅவர்சிந்திக்கும்அந்தநொடிகளிலெல்லாம் துக்க உணர்விலிருந்து வெளிவந்துதான் சிந்தித்திருக்க முடியும். துக்கத்தின் உச்சியில் இருக்கும்போது வேறு வேலையைப் பற்றிச் சிந்திக்க முடியாது.
அதேப்போல் இறுதிச் சடங்கு பற்றிச் சிந்திக்கும்போது துக்கத்திலிருந்து கீழ் இறங்கி ச கஜமாக சிந்திக்க வேண்டும்.
துக்கமாயிருக்கும் போது சகஜமாயிருக்க முடியாது. சகஜமாயிருக்கும் போது துக்கமாயிருக்க முடியாது.
நிஜத்தில் என்ன நடக்கின்றதென்றால் ஆழமாகப் பார்த்தால்..... துக்கமும், இறுதிச் சடங்கு பற்றிய தெளிவான முடிவுகளும் மாறி மாறி, ஒன்றோடொன்று எந்தவிதத் தொடர்புமில்லாமல் மேலெழுந்து அடங்குகின்றன என்பது புரிய வரும்.
சூழ்நிலை காரணமாகவோ, வேறு ஏதேனும் ஒரு காரணமாகவோ மட்டும் துக்கம் எனும் உணர்விற்கு அந்தத் தனிநபர் அதிக முக்கியத்துவம் தருவதனால் அவரின் மிக ஆழமான துக்கம்கூட தெளிவான இன்னொரு முடிவால் எளிதில் மாற்றப்படக் கூடியதே.
நம்மை உலுக்கிக் கொண்டிருக்கும் துக்கத்தைக் கூட, அடுத்து வரும் சிறு எண்ணமானது மாற்றிவிடும் எனும் உண்மையைப் புரிந்து கொண்டால் பெரிய தெளிவு பிறந்துவிடும்.
அதே போலத்தான் உங்களின் பயமும். பயத்திற்கு நீங்கள்தான், முக்கியத்துவம் தருகின்றீர்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து எப்போதோ வெளி வந்திருப்பீர்கள்.
பயப்படும்போதெல்லாம் பயப்படுவதைத் தொடராமல் வேறு ஏதாவது வேலையைச் செய்ய ஆரம்பியுங்கள். பயம் ஓடிப்போகும்.
எந்தப்பயம் வந்தாலும் அதை இனிகையாளும் கலையைக் கற்றுக்கொண்டிருக்கின்றீர்கள். வாழ்வில் பிரயோகித்துப் பாருங்கள். பலம் புரியும்.