KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/முதல் வாழ்க்கைSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

முதல் வாழ்க்கை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஞானம்

Nithyananda

பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும்?

இறைவன் பள்ளி கொள்ளுமளவுக்கு இனிமை நிறைந்ததாக இருக்க வேண்டும்.

மாணவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்ன செய்ய வேண்டும்?

அது முடியாது. அது தவறு. கட்டுப்படுத்தவே கூடாது.

கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எவ்வளவு தூரம் முயற்சி செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு அவர்கள் நேருக்கு மாறாக செயல்பட ஆரம்பிப்பார்கள்.

"ஒழுக்கத்தை மாணவர்களிடம் அதிகரிக்க என்னதான் வழி?"

அப்படிக் கேளுங்கள், இது சரியான கேள்வி.

ஒழுக்கத்தை அதிகரிக்க அவர்களின் சுதந்திரத்தை அதிகரிியுங்கள்.

"அச்சோ! என்ன இது? சுதந்திரத்தை அதிகரித்தால் மாணவர்கள் தலை கால் புரியாமல் ஆடமாட்டார்களா?

ஒழுக்கம் என்பது தானாய் வரவேண்டிய ஒன்று. பிறரால் வற்புறுத்தப்பட்டு வரவேண்டிய ஒன்றல்ல.

தன்னை சுதந்திரமாய் உணரும் ஒருவருக்குள்தான் ஒழுக்கம் மலர முடியும்.

கட்டுப்பாடுகளாலும், கெடுபிடிகளாலும் உருவாக்கப்படும் ஒழுக்கம் ஒழுக்கமல்ல. அது சமுதாயரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிமைத்தனம். அது சில நேரங்களில், பல மாணவர்களின் உன்னதமான தனித்துவங்களையும், படைப்பாற்றல்களையும் மலர விடாமலேயே கசக்கி விடுகின்றன.

Nithyananda

தன்னை
சுதந்திரமாய்
உணரும்
ஒருவருக்குள்தான்
ஒழுக்கம் மலர
முடியும்.

மாணவர்கள் மலர்வதற்கு உதவ வேண்டும். அவர்களை கசக்குவதற்கு உதவக் கூடாது.

சரி, அதையெல்லாம் விடுங்கள்... உங்களிடம் ஒரு குழந்தையைத் தந்தால், அந்தக்குழந்தையை எப்படி வளர்ப்பீர்கள்?

சொர்க்கத்தில் வளர்ப்பேன். நான் அதில்தான் வளர்ந்தேன்.

"சொர்க்கத்தில் வளர்ப்பீர்களா! எப்படி அது?" 100 சதவீத சுதந்திரம்தான் சொர்க்கம்.

என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாத பெற்றோர்களால் தான் எனக்கு அந்த சொர்க்கம் கிடைத்தது.

நான் பள்ளியில் கற்றுக் கொண்டதை விட வீட்டில் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.

என் புத்தகங்கள் கற்றுத் தந்ததை விட, என் சுதந்திரமயமான வாழ்வுதான் எனக்கு நிறைய கற்றுத் தந்தது.

எனவே நான் வளர்ந்த சொர்க்கத்தை என்னிடம் தரப்படும் குழந்தைக்குத் தருவது மிக எளிதுதான். அவர்கள் ஆனந்த சக்தியிலேயே வளர்ந்து ஆனந்தத்திலேயே மலர்வார்கள்.

"குருகுலக் கல்வி முறையை, நல்ல முறை,'என ஒரு சொற்பொழிவில் சிபாரிசு

செய்கிறீர்களே, அதில் அப்படியென்ன மகத்துவம் ஒளிந்திருக்கிறது?

நல்ல கேள்வியைக் கேட்டீர்கள்.

அது வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்ட வேண்டிய நேரம்தான்

இன்றைய மாணவர்கள் அனைவரும் ஒருவித பயத்திலும், ஒரு வித அழுத்தத்திலுமே வளர்கிறார்கள்.

இந்தத் தொடர் பயமும், அழுத்தமும் வளரும் குழந்தைகளுக்கு மிகக் கெடுதியானது. இது அவர்களின் உயிராற்றலையே, குறைக்க ஆரம்பிக்கும்.

பயப்படும்போதும், அழுத்தத்திற்குள்ளாகும் போதும் உயிராற்றல் உறைந்திருக்கும் ஸ்வாதிஷ்டானம் உலுக்கப்படுகிறது. இது மனிதனின் வளர்ச்சிக்கு பதில், தளர்ச்சிக்கே வித்திடும்.

அதென்ன ஸ்வாதிஷ்டானம்?

தொப்புளுக்கு ஒரு அங்குலம் கீழே உள்ள சக்தி மையம்தான் (சக்கரம்) ஸ்வாதிஷ்டானம். இந்தச் சக்கரம் பயப்படும் போதெல்லாம் காயப்படுகிறது.

மேலும், இந்தச் சக்கரத்தில்தான் மனிதனின் உயிராற்றலானது வேரூன்றியிருக்கிறது.

ஸ்வாதிஷ்டானம் உலுக்கப்படாமல் வளர்க்கப்படும் ஒரு குழந்தை நேரடியாக மாபெரும் தலைவனாகவோ, மாபெரும் மகானாகவோ மாறிவிடும். இக்குழந்தைகளுக்குள் பொங்கும் மாசு மருவற்ற தைரிய சக்தி எடுத்ததையெல்லாம் ஜெயிக்கும் சாதனையாளனாக அக்குழந்தைகளை மாற்றி விடும்.

சாதாரண பயத்திற்குள் இவ்வளவு இருக்கிறதா?

> நான் பள்ளியில் கற்றுக் கொண்டதை விட வீட்டில் > கற்றுக்கொண்டதுதான் அதிகம். 'ஐய்யோ! இன்னைக்கு அப்பா சொன்ன வேலையை செய்து முடிக்கலையே' என நாளை எதிர்கொள்வதும்,

யம்மா! இன்னும் ஹோம்வொர்க் முடிக்கலையே. ஸார் அடிப்பாரே... ஸ்கூலுக்கு போகணுமா? என காலை எழுவதும், 'பரீட்சை அதற்குள் வந்துடுத்தே! ஒழுங்கா படிக்கலையே... மார்க் குறைந்தால் நல்ல சீட் கிடைக்காமலே போய் விடுமே...', என சஞ்சலப்பட்டு ஒரு மாணவர் ஏங்கும் ஒவ்வொரு நொடியும் இனி தவிர்க்கப்பட வேண்டும்.

portrait

இனி வரும் காலங்களிலாவது நாமெல்லாம் சேர்ந்து சுதந்திரம் மிகுந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

குருகுலத்தில் ஸ்வாதிஷ்டானம் உலுங்காமல்
வளர்வதற்கான சூழலைத்தான் முதலில்
உருவாக்குவார்கள்.

“மறைந்துபோன குருகுலத்திலிருந்து மக்களுக்கு உதவக்கூடிய கருத்துக்கள் இன்னும் இருந்தால் சொல்லுங்கள்”.

“குருகுலத்தில் காலையில் பயத்தில் எழுந்திருக்க மாட்டார்கள், ஆனந்தத்தில் எழுந்திருப்பார்கள். குருகுல ஆசிரியர் நண்பராக இருப்பார். பயிலும் பள்ளி ஆனந்தக் கோயிலாக இருக்கும். அந்த வளர்ப்பில் ஒழுக்கம் என்பது தானாய் பழகும். அப்படி வளரும் குழந்தைகள் நேர்மையானவர்களாக மலர்வதோடு மிகுந்த புத்திசாலிகளாகவும், வாழ்க்கையைக் கொண்டாடுபவர்களாகவும் இருப்பார்கள்.

நடந்ததெல்லாம் போகட்டும், இன்றைய குழந்தைகளுக்கு என்ன செய்யலாம்? அவர்களின் ஸ்வாதிஷ்டானத்தை பலப்படுத்த வழி இருக்கிறதா?

இருக்கிறதே!

குழந்தைகளுக்கு குருகுலக் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். இல்லை, இந்த தியானத்தை செயல்படுத்துங்கள்.

சுதந்திர தியானம்

சுதந்திரம் என்ற பெயரில் ரொம்பச் செல்லமும், பொழுதுபோக்கு என்ற பெயரில் மனத்தைப் பாழாக்கும் விஷயங்களும் கிடைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு நிஜ சுதந்திரத்தை தர ஆரம்பிப்போம்.

இன்றைய சமுதாயம் தலைகீழாக மாறியிருப்பதால், குழந்தைகளுக்கு சுதந்திரத்தை மட்டுமே தருவதோடல்வாமல் சுதந்திரத்தைக் கையாளத் தேவையான வாழ்க்கையைப் பற்றிய ஞானம் கிடைப்பதற்கான வழிவகைகளைச் செய்யுங்கள்.

நிஜ சுதந்திரம் என்பது சுதந்திரமயமான சூழலும், அதை சரியாய் கொண்டாடத் தேவையான ஞானமும் சேர்ந்தது.

இல்லா விட்டால் தந்திரம் கொண்ட மனம், சுதந்திரத்தைக்கூட தன் மலர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல், தன் வீழ்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளும். அதுதான் மேலைநாடுகளில் நடந்திருக்கிறது.

முழுச் சுதந்திரத்தோடு வளர்க்கப்படும் குழந்தைகளில் பலர் கெட்டுப்போவதற்கான காரணம், சுதந்திரத்தைக் கையாளும் ஞானம் அவர்களுக்குத் தரப்படாமல் போனதுதான்.

நம் குருக்குலக் கல்வி சுதந்திரத்தையும், ஞானத்தையும் சேர்ந்தே தரும்.

எனவே நிஜ சுதந்திரத்தைத் தர, அதைக் கையாளும் வாழ்க்கை ஞானத்தை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்.

'இன்றிலிருந்து மற்றவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதை நிறுத்துவேன். என்னால் முடிந்த அளவிற்கு என் சுதந்திரத்தையும் காப்பாற்றிக் கொள்வேன்' என சங்கல்பம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதுதான் முதல் வாழ்க்கை ஞானம்.

இதைச் செய்தால் தியானம் தன்னால் நிகழும். ஞானம் படிப்படியாய் மலர ஆரம்பிக்கும்.

Portrait of Swami