KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/மூன்று முக்கியமான தியான சூத்திரங்கள்.Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

மூன்று முக்கியமான தியான சூத்திரங்கள்.

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தியான சூத்திரம் 1:

புரியாதவரைதான் புதிர்.

புரியாத ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். புரிந்துகொள்ள, புரிந்துகொள்ள எவ்வளவு பெரிய புதிராய் இருந்தாலும் அது சோப்புக் குமிழ்போல உடைந்து விடும்.

தியான சூத்திரம் 2:

புதிதாய் தெரியும் எதையும் விட்டு வைக்காதீர்கள். புதிய துறை, புதிய மனிதர்கள், புதிய சூழல் என்று உங்களின் வளர்ச்சிக்கு தேவையான, ஆனால், தடையாய் இருக்கும் எதையும் விட்டுவைக்கும் வரைதான் அவை உங்களைப் பயமுறுத்தும்.

தெரியாதவற்றைத் தெரிந்து கொள்வதும், பழக்கமில்லாதவற்றை பழக்கமாக்கிக் கொள்வதும் பயத்தைத் தவிடுபொடியாக்கிவிடும்.

தியான சூத்திரம் 3:

இயலாமைகளைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தி, உங்களிடம் இருக்கும் பலங்களைப் பார்த்து உற்சாகம் பொங்க வாழ ஆரம்பித்தாலே நிறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.

குறைகளால் நின்ற வாழ்வு,

> புதிராய் தெரியும் எதையும் விட்டு வைக்காதீர்கள். நிறைகளால் துள்ளிக் குதித்து ஓட ஆரம்பிக்கும்.

ஆத்ம தியானம்

உங்களின் பலவீனம்தான் உங்களுடைய வாழ்வின் திருப்புமுனை.

பலவீனத்தை விட்டுவைத்தால் அது மேலும் மேலும் உங்களைப் பலவீனப்படுத்தும்.

பலவீனத்தைத்தாண்டி உழைத்தால், அது மேலும், மேலும் உங்களை பலப்படுத்தும்.

வாழ்வில் ஜெயித்தவர்களெல்லாம், தங்களின் பலவீனங்களைப் பலமாக்கியவர்கள்.

வாழ்வில் தோற்றவர்களெல்லாம், தங்களின் பலவீனங்களைப் பலமாக்காமல் விட்டுவிட்டவர்கள். பலவீனங்களைப் பலமாக்குங்கள், பலம் வாய்ந்தவராவீர்கள்!