யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* அழகு?
அது கவிதைகளின் வர்ணனைகளில் வாழ்கிறது. ஆனால், நிஜ அழகு இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
* நிஜ அழகு எங்கு இருக்கிறது?
அழகு என்ற வார்த்தையைத் தாண்டிய உலகின் ஒவ்வொரு புள்ளியிலும் அழகு கொட்டிக் கிடக்கிறது.
* தியானம் அழகை அதிகரிக்குமா?
நிச்சயமாய் அதிகரிக்கும். அதைத் தாண்டியும் எடுத்துச் செல்லும்.
* அந்த அழகையும் தாண்டியது என்ன? தேஜஸ்.
* தேஜஸ்!?
முகப்பூச்சால் மினுமினுக்கும் முகப்பொலிவு தான் அழகு (Beauty).
அகப்பூச்சால் மினுமினுக்கும் முகப்பொலிவுதான் தேஜஸ், (Grace).
* அதென்ன அகப்பூச்சு?
குழந்தைகளிடமும், ஞானிகளிடமும் மேக்கப் இல்லாமலே வெளிப்படும் தேஜஸுக்குக் காரணம் உள்ளுக்குள் இருந்து வற்றாமல் பொங்கும் பூரிப்புதான். தியானம் உங்களுக்குள் இந்தப் பூரிப்பைத் தான் அதிகப்படுத்துகிறது.
இந்த அகப்பூச்சை மட்டும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டால் எப்போதும் அழகாயிருப்பீர்கள்.

கடவுள் ஒரு இன்ஜினியர் அல்ல. அவர் ஒவ்வொருவரையும் ஓவியங்கள் போல தீட்டுகிறார். சிலைகள் போல வடிக்கிறார்.
* ஏன் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்?
காரணம், கடவுள் ஒரு இன்ஜினியர் அல்ல.
ஒவ்வொருவரையும் ஓவியங்கள் போலத் தீட்டுகிறார். சிலைகள் போல வடிக்கிறார்.
எனவே தான் விதவிதமாய்ப் படைக்கிறார். கடவுள் ஒரு ரசனைமிகு கலைஞன்.
எனவே தான் விதவிதமாய்ப் படைக்கிறார்.
அதனால் தான் கடவுள் ஒவ்வொரு மனிதரையும் அவரவரின் சுய விருப்பு வெறுப்புப்படி தனித்தனி மனிதர்களாய் படைக்கிறார். எனவேதான் ஒருவரைப் போலவே இன்னொருவரை இந்த உலகில் நீங்கள் கண்டுபிடிக்கவே முடியாது.
* வீராப்பானவர்கள்?
கோழைகள்.
* கோழைகள்?
ஏமாற்றுபவர்கள். முன்னேறவிரும்பாத சோம்பேறிகள்.
- வீரர்கள்?
நிச்சயம் சண்டைக்காரர்களோ, வாள் சண்டை வீரர்களோ அல்ல.
- பின் யார்?
சோம்பேறித்தனத்தை ஏறி மிதித்துத் தாண்டி வந்து கொண்டேயிருப்பவர்கள்.
- யார் வேண்டுமானாலும் சாதிக்க ஒரு சூத்திரம் சொல்லுங்கள்?
உங்களால் "எது முடியாது", என்று மனம் சொல்கிறதோ அதை முதலில் முடித்துக் காட்டுங்கள். வென்றவர்கள் எல்லாம் இதைச் செய்தவர்கள். தோற்றவர்களெல்லாம் இதைக் கோட்டை விட்டவர்கள். முடியாதவற்றை முடித்துக் காட்டும்போது உங்களின் மேலேயே உங்களுக்கு நம்பிக்கை அதிகமாகி விடும். எல்லாவற்றையும் சாதிக்கும் சக்தி பெறுவீர்கள்.
- வன்முறைகள் அதிகமாய் நிகழ்வது ஏன்?
ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள அமைதியற்ற தன்மை அதிகரிக்கும் போதுதான் அது வன்முறையாக வெளிப்படுகிறது. மனைவியை அடிப்பதிலிருந்து, அடுத்தவர்களை அழிப்பது வரை நிகழும் எல்லாவற்றிற்கும் இந்த உள்ளுலக அமைதியற்ற தன்மைதான் காரணம். அது அமைதியானால் எங்கும் அமைதி இப்போதே சாத்தியம்தான்.
- பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்த முடியுமா?
முதலில் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் நிகழும் கலவரங்களை முடிவுக்கு கொண்டுவர உழையுங்கள். தியானியுங்கள்.
> ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள அமைதியற்ற தன்மை > அதிகரிக்கும் போதுதான் அது வன்முறையாக வெளிப்படுகிறது.
ஆத்ம தியானம்
அமைதி என்பது மனிதனின் அமைதி பற்றிய எல்லா அனுபவங்களுக்கும் அப்பாற்பட்டது.
ஒரு மனிதனுக்குள் அமைதியை சொட்டுச் சொட்டாய் சேர்க்கும் நிமிடங்களின் தொகுப்பைத் தான் தியானம் என்றழைக்கிறேன்.
நீங்கள் வாயை மூடியிருந்தால் கூட உங்களின் ஆழ்மனம் வாயை மூடுவதில்லை.
நிஜ அமைதியை உங்களுக்குள் சேகரிக்க அருமையான தியானமொன்றை தருகிறேன்.
அமைதி தியானம்
பேசாமல் இருக்கும்போது மட்டும் இதைச் செய்யுங்கள். வாயை மூடிய பின்புதான் உங்கள் மனத்தின் பேரிரைச்சலையே கேட்க முடியும்.
இந்த இரைச்சலை அமைதியோடு கவனியுங்கள். வேறு எதுவும் செய்ய வேண்டாம்.
ஒரு கட்டத்தில் உங்களின் முயற்சி இல்லாமலேயே கவனிக்க ஆரம்பித்து விடுவீர்கள். உள்ளுக்குள்ளே அமைதி சேகரமாக ஆரம்பிக்கும்.
இது மட்டுமே நிகழ்ந்தால் இது மயான அமைதி.
இந்த அமைதியையும் கடந்து செல்ல வேண்டும்.
பேசாமலிருக்கும் போது மட்டுமே செய்த தியானத்தை, பேசும் போதும் செயல்களைச் செய்யும் போதும், உண்ணும்போதும் செய்ய ஆரம்பியுங்கள்.
உள்ளே அமைதியற்றிருந்தபோது, உங்களிடமிருந்த சக்தியைத் தடுமாற்றங்களாகவும் கொந்தளிப்புகளாகவும் மட்டுமே வெளிப்படுத்தியிருப்பீர்கள்.
இப்போதுதான் ஆழ்ந்த அமைதியைப் பெற்றுவிட்டீர்களே!
அப்போது தடுமாற்றங்களாகவும், கொந்தளிப்புகளாகவும் வெளிப்பட்ட சக்தியை, எதனாலும் குன்றாத உற்சாகமாகவும், எல்லோரையும் உற்சாகமாக்கும் உற்சாகமாகவும் ஆரம்பியுங்கள்.
உங்களின் உத்வேகமே, உங்களினுள்ளே தங்கும் அமைதியை, வெளியே பொங்கும் ஆனந்தமாக மாற்றி விடும்.