KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/எல்லாத் தடைகளையும் தகர்க்கும் தியானம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

எல்லாத் தடைகளையும் தகர்க்கும் தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait of spiritual teacher

கடனமேல் கடன்வாங்கி குடும்பமே பிளாட்பாரத்தில் வந்து தங்குமளவுக்கு வாழ்வு நொடிந்து போனதை எண்ணி வருந்தியபடியே நடந்து வந்து கொண்டிருந்தார், அந்த மீன் பிடிக்கும் தொழிலாளி.

ஒரு கோயிலின் முன்பு வந்ததும் இப்படியொரு எண்ணம் அவருக்குள் வந்தது...

"தெய்வங்கள் இருப்பது உண்மையா?

ஏதோ தேவதைகள் இருப்பதாகவும், அவர்கள் மனிதர்களைச் சந்தித்தால் வரங்கள் தருவதாகவும் கேள்விப்படுகின்றோமே! இதெல்லாம் உண்மையா?" என்று யோசித்தவாரே நடந்து வந்து கொண்டிருந்தவரின் முன், ஜொலிஜொலிக்கும் தங்கத்தேர் ஒன்று வானிலிருந்து இறங்கியது,

அதிலிருந்து மிக அழகிய, வைர நகைகள் அணிந்த தேவதை ஒன்று இறங்கியது.

தேவதையைப் பார்த்ததும், "இன்றோடு என் வாழ்வில் உள்ள எல்லா தடைகளும் நீங்கியது.என்னிடம், "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று கேட்கப் போகின்றது. இன்னும் சில நொடிகளில் வாழ்வே வசந்தமாகப் போகின்றது... ஆஹா! ஆஹா! எல்லாம் உண்மைதான். எதுவும் கதையில்லை... எல்லாம் நிஜம்தான்..." என்று வண்ண வண்ணக் கனவுகளில் பறந்து கொண்டிருந்த தொழிலாளியின் அருகில் வந்த தேவதை கேட்டதாம்,

“ஏம்பா! ரொம்ப தூரம் பிரயாணம் பண்ணிட்டேன். ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவது உன்னிடம் இருக்கிறதா?'' இப்படி தேவதை தன்னிடம் பிச்சை கேட்கும் என்பதைச் சற்றும் எதிர்பாராத தொழிலாளி ஆடிப்போய்விட்டார்.

இருந்தாலும், தேவதையின் பசியைப் பார்த்ததும் அன்புபொங்க தன் குடும்பத்திற்காக வாங்கிச்சென்று கொண்டிருந்த ஐந்து ரொட்டிகளில் ஒரு ரொட்டியை எடுத்துத் தந்தார்.

தேவதையின் பசியைப் பார்த்ததும் அன்புபொங்க தன் குடும்பத்திற்காக வாங்கிச்சென்று கொண்டிருந்த ஐந்து ரொட்டிகளில் ஒரு ரொட்டியை எடுத்துத் தந்தார்.

தேவதையின்
பசியைப் பார்த்ததும்
அன்புபொங்க தன்
குடும்பத்திற்காக
வாங்கிச்சென்று
கொண்டிருந்த ஐந்து
ரொட்டிகளில் ஒரு
ரொட்டியை எடுத்துத்
தந்தார்.

ரொட்டியை முழுமையாய் சாப்பிட்டு முடித்த தேவதை, “இன்னும் பசிக்கிறது'' எனச் சொல்லி கை நீட்டியது. தொழிலாளி இன்னொரு ரொட்டியை எடுத்து அதில் பாதி ரொட்டியைத் தந்தார். அதை ஒரே வாயில் சாப்பிட்ட தேவதை இன்னும் வேண்டுமென கையை நீட்டியது.

இதற்குமேல் தொழிலாளியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரின் அன்பு பறந்தது. “வரம்தர வேண்டிய நீ, என்னிடம் உள்ளதையெல்லாம் பறிக்கப்பார்க்கிறாயே'' என்று உள்ளுக்குள் திட்டிக்கொண்டே வேறு வழியில்லாமல் அடுத்த பாதி ரொட்டியை எடுத்துத் தந்தார்.

அதையும் சாப்பிட்ட தேவதை மீண்டும் ரொட்டி கேட்டது.

“என்ன கஷ்டமப்பா இது!'' என்று உள்ளுக்குள் சலித்துக்கொண்டவாறு மூன்றாவது ரொட்டியை வெளியே எடுத்து தேவதையிடம் நீட்டினார். தேவதை ரொட்டியைத் தொட்டதும் மறைந்துபோனது.

“அட! இங்கேதானே தேவதை இருந்தது? தங்க ரதம் அவ்வளவு பெரியதாய் இருந்ததே? எங்கே...?'' என்று தேடினார், அங்கலாய்த்தார், ஆச்சரியப்பட்டார்.

“என் கண் முன்னால்தானே இரண்டு ரொட்டியை சாப்பிட்டது. மூன்றாவது ரொட்டியைத் தொட்டதும் மறைந்துவிட்டதே! ஒருவேளை நான் சலித்துக்கொண்டதில் அது கோபங்கொண்டிருக்குமோ?. இல்லை, தேவதையைச் சந்தித்ததாக நினைப்பதே ஒரு கனவு தானா!'' எனச் சந்தேகப்பட்ட தொழிலாளி, தன்னுடைய பைக்குள் இருக்கும் ரொட்டிகள் குறைந்திருக்கிறதா, இல்லையா என்று ஊர்ஜிதப்படுத்த பையைத் திறந்து பார்த்தார். அதிர்ந்தார்.

காரணம் உள்ளுக்குள் இருந்த கடிதம்...

"என் அன்பிற்குரிய மீன்தொழிலாளிக்கு, உன் இனிய தேவதை சொல்வது... அன்போடும், கரிசனத்தோடும் நீ தந்த முதல் ஒன்றறை ரொட்டிக்கு தேவலோகக் கணக்குப்படி வரமளித்திருக்கிறேன். நன்றி உன் அன்பிற்கு."

இப்படிக்கு, உன் தேவதை.

"என்ன வரம் இது!" என்று ஆவலோடு அங்குமிங்கும் தேடினார். வரம் எதுவும், பரிசு எதுவும் கண்களுக்குத் தென்படவில்லை.

"என்ன வரமாயிருக்கும் அது!" என்று யோசித்தவாறே வீட்டை அடைந்த தொழிலாளியைச் சுற்றிக்கட்டிப் பிடித்துக் கொண்ட குழந்தைகள், "அப்பா பசிக்குது." என்று தேவதையைப் போலவே கைகளை நீட்டினார்கள்.

மீதமிருந்த மூன்று ரொட்டிகளையும் குழந்தைகளுக்குத் தருவதற்காக தட்டில் கொட்டினார்... குடும்பமே அதிர்ந்தது!

தட்டில் விழுந்தது, "மூன்றறை ரொட்டிகளும், ஒன்றறை தங்க ரொட்டிகளும்!"

மிகவும் அர்த்தம் பொதிந்த கதை அது.

நிஜ அன்பு தங்கத்திற்கு இணையானது. நிஜக் கருணை வைரத்திற்கு இணையானது.

ஒன்றறைத் தங்க ரொட்டிகள் விழுந்ததும், "அச்சச்சோ! இப்படியெல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தால் எல்லாவற்றையுமே தந்திருப்பேனே." என்று மீன் பிடிக்கும் தொழிலாளி புலம்பினாராம்.

நிஜ அன்பு தங்கத்திற்கு இணையானது. நிஜக் கருணை வைரத்திற்கு இணையானது புலம்புவதால் எதுவும் நடக்காது. எதையும் மாற்றிவிட முடியாது. ஆனால் அன்பினால் புடம் போட முடியும். அன்பினால் எதையும் மாற்ற முடியும். எதையும் சாதிக்க முடியும்.

மற்றவர்களின் மீது அன்பு எனும் ரசத்தைப் பிழிந்துவிட நீங்கள் தயாரானால், அது ஒன்று போதும். அது உங்களைத் தங்கமானவராக்கிவிடும்.

ஆத்ம தியானம்

அன்போடு ஒருவருக்கு ஒரு மடங்கு உதவினால், அது அவருக்கு இரண்டு மடங்கு பலனைத் தரும்.

காரணம், அன்பு எல்லா எதிர்மறைச் சக்திகளையும் எரிக்கும் சக்தி கொண்டது என்பதுதான்.

கடந்த காலத்தில் நீங்கள் எவ்வளவோ பாவங்கள் செய்திருந்தாலும் சரி, அதை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாலும் சரி, இன்றோடு அந்தக் கவலைகளெல்லாம் தீர்ந்தது.

நீங்கள் அன்பு பொங்க வாழும் ஒவ்வொரு நிமிடமும், உங்களின் கர்மங்கள், அதாவது கெட்ட சம்ஸ்காரங்கள் எரிய ஆரம்பிக்கின்றன. தடைகள் மறைய ஆரம்பிக்கின்றன.

ஜென் ஞானி ஒருவரிடம், “அன்புதான் மிக உயர்ந்த சக்தி என்று நீங்கள் சொல்கின்றீர்களே. எப்படி அதைச் சொல்கின்றீர்கள்?” என்று கேட்டபோது அவர் சொன்னார்.

“ஒரு மடங்கு வெளிச்சத்தை வரவிட்டால், அது பத்து மடங்கு இருளைப் போக்கிவிடும். அன்பு அவ்வகையைச் சார்ந்தது.

அன்பு எல்லா எதிர்மறைச் சக்திகளையும் எரிக்கும் சக்தி கொண்டது.”

அன்பு எல்லாத் தடைகளையும் கரைக்கும் சக்தி வாய்ந்தது. உடலின் தடை நோய். மனத்தின் தடை கவலை. உணர்வின் தடை மந்தம். வாழ்வின் தடை துர்அதிர்ஷ்டம்.

அன்பின் இயல்பே முதலில் அது அதிர்ஷ்டங்களை உங்களுடைய வாழ்வில் சேர்க்கும் நபர்களை ஈர்க்கும் என்பதுதான்.

அன்பாயிருக்கும்போது மந்தமோ! கவலையோ! துளிக்கூட எழாது.

அன்பு மிகுதியால், "அட! இவர்களெல்லாம் இவ்வளவு கஷ்டப்படுகின்றார்களே!" என்று கருணை பொங்க எண்ணினால்கூட, அது மனிதரை மந்தமாக்கும் கவலையாய் இருக்காது.

மாறாக, 'அந்தக் கஷ்டங்களையெல்லாம் போக்குவது எப்படி?' என எழும் ஆக்கப்பூர்வமான சக்தியாகவும், உற்சாகம் பொங்க வாழும் சக்தியாகவும் அந்த அன்பு எழுந்தருளும்.

அன்பாய் தொடும் ஒரு தொடுதலே ஒருவரின் பலவருட துக்கத்தையும், தலைவலிகளையும், இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் தன்மைகளையும் கரைத்துவிடும்.

ஒருவரின் அன்புத்தொடுதல் இன்னொருவரை இரண்டு மடங்கு குணமாக்கும் என்றால், அவரைப் பத்து மடங்கு குணமாக்கும்.

எனவே அன்பு எனும் ஒரு தன்மை அதிகரித்தால் போதும். அது எல்லாத் தடைகளையும் தகர்க்கும் தியானமாகிவிடும்."

"எப்படி இந்தத் தியானத்தைச் செய்வது?"

"தனியாக தியானமெல்லாம் தேவையில்லை.

அன்பாயிருப்பதே தியான உணர்வுதான். அன்பு பொங்க ஒவ்வொரு நிமிடமும் வாழ்வதே பெரும் தியானம்.

சுருங்கச் சொன்னால்... அன்பே தியானமாகும்.

தொடர்ந்து அன்பு பொங்க வாழ்ந்து பாருங்கள், அது எவ்வளவு பெரிய தியானம் என்பது புரிய வரும்."

Nithyananda