உங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஏக்கங்கள் வரங்களாகும்

உங்களின் ஏக்கங்களை நிஜமாக்க உதவும் சூத்திரத்தைத் தரும் அருமையான கதை ஒன்று...
காட்டுக்குள் சென்று கொண்டிருந்த வியாபாரிக்குப் பெருத்த ஆச்சரியம். காரணம் மேலோகத்தில் இருக்கும் கல்பதருவை அங்கே அவர் பார்த்ததுதான்.
“மேலோகத்தை விட்டு பூலோகத்திற்கு இது வந்தது எப்படி?”
“கல்பதரு மரம் எப்படி இருக்கும் என்று பெரியவர்கள் சொன்னபடியே ஒரு அச்சுக்கூட மாறாமல் இருக்கின்றதே!” என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த வியாபாரி...
“ரொம்ப தாகமாகவே இருக்கே, ஒரு கப் ஜூஸ் குடித்தால் நல்லாயிருக்குமே” என்று யோசிக்க யோசிக்க..... பளபளக்கும் வெள்ளிக் கிண்ணத்தில் மாம்பழ ஜூஸ் அவரின் கையிலிருந்தது.
“என்ன இது! நாம் யோசித்து முடிப்பதற்குள் கையில் வெள்ளிக் கிண் ணத்தில் ஜூஸ்... நிஜமாகவே இது கல்பதரு தானோ?” என்று யோசி த்துக் கொண்டே, மிகவும் சுவையாய் இருந்த ஜூஸைக் குடித்து முடித்தார்.
“ரொம்பக் களைப்பாயிருக்கே, படுக்க வசதியாய் இருந்தால் ஒரு குட்டித் தூக்கம் போடலாமே,” என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே... ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்ட, இலவம் பஞ்சு மெத்தை போடப்பட்ட சொகுசுக் கட்டில் அவருக்கு முன்னால் தோன்றியது.
“அடடா! இது நிஜமாகவே கல்பதரு மரம் போலத்தான் தெரிகிறது,” என்று யோசி த்தார்.
மனித வாழ்வில் எவ்வளவுதான் தன்னைச் சுற்றி பல பிரமிப்புகளையும், அற்புதங்களையும் இறைசக்தி நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாலும், அதை முழுமையாக நம்பாமல், ‘இதையெல்லாம் பார்க்கும் பொழுது நம்மைத் தாண்டிய ஒன்று இருப்பது போலத்தான் தெரிகிறது. அதை வேண்டுமானால் ‘இறைவன்’ என்று சொல்லலாம்’ என்று நம்பும் மூளைப் பெருத்த குதர்க்க மனத்தைப் போலவே வியாபாரியும் யோசித்தார். குதர்க்க மனம் எதையும் திறந்த உள்ளத்தோடு பார்க்காது.

வாழ்க்கையையே
பாழாக்கிவிடும்
அபாயம், குதர்க்க
மனத்திடம் உண்டு.
எதற்கெடுத்தாலும் ஆதாரங்களையும், நிருபணங்களையும் தேடும் குதர்க்க மனத்தால், தன்னைவிட உயர்ந்த சக்திகளை அனுபவிக்கவே முடியாமல் போய்விடும்.
அதுமேலும் மேலும் சந்தேகங்களைக் கிளப்ப வாழ்வின் நிம்மதியைக் கேள்விக் குறியாக்கிக் கொண்டே செல்லும் எதையும் அனுபவிக்கவிடாது. கடைசியில் வாழ்க்கையையே பாழாக்கிவிடும் அபாயம், குதர்க்க மனத்திடம் உண்டு.
அதேபோல் புதுப்புது சந்தேகத்தோடு கல்பதரு மரத்தடியில் இருந்த பஞ்சு மெத்தையில் சுகமாய் படுத்த வியாபாரி, “அப்பப்பா! என்ன சுகமாயிருக்கிறது.
இப்ப மட்டும் நம் கால்களையும், கைகளையும் யாராவது அழுத்தி விட்டால் ரொம்ப நல்லாயிருக்குமே” என யோசித்து முடிப்பதற்குள்ளாகவே நான்கு பேர் அவரின் கால்களையும் கைகளையும் அழுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட வியாபாரி, “நிஜமாகவே இது கல்பதரு மரம் தான்” என்று உணர்ந்து நிம்மதியாய் கண்களை மூடி உறங்கிப் போனார்
ஆழ்ந்து தூக்கத்தில் இருந்த வியாபாரிக்கு திடீரென விழிப்பு வந்தது. கண் விழித்து சுற்றி முற்றிப் பார்த்த வியாபாரிக்கு, “காட்டுக்குள் தன்னந்தனியாய் தூங்கிக் கொண்டிருக்கின்றோமே... ஒருவேளை, புலி வந்து, நம்மை அடித்துக் கொன்று விட்டால் என்ன ஆகும்?” என்று யோசித்த ஷணத்தில் புலி வந்தது. கதை முடிந்தது!
கல்பதருவின் சக்தி பாய்ந்தால் ஒருவரின் எந்த எண்ணமும், எந்தக் கனவும், எந்த ஏக்கமும் நிஜமாகிவிடும் என்ற சத்தியத்தை உணர்த்தும் அருமையான கதையிது.
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இந்த கல்பதரு சக்தி இருக்கிறது. அதைக் கண்டுகொண்டு ஆனந்தமாய் வாழ்பவர்கள் தான் நித்ய முக்தர்கள்!.
‘எப்படி அந்தக் கல்பதரு சக்தியைக் கண்டுகொள்வது? எப்படி அந்தச் சக்தியை சரியான விதத்தில் பயன்படுத்துவது?’ என்று சொல்வதுதான் உங்களுக்கான இந்த ஆத்ம தியானம்.
ஆத்ம தியானம்
ஒரு புரொஜக்டரின் முன்னால் வைக்கப்படுகின்ற படச்சுருளில் உள்ள உயிரற்ற படங்கள் திரையில் உயிர்பெற்று படமாக ஓடுகின்றது.
அதுவரை இறந்துபோன பாம்புபோல பெட்டிக்குள் இருந்த படச்சுருள், புரொஜக்டரின் ஒளியில் வைக்கப்பட்டதும் திரையில் உயிர் பெற்று நிஜமாகின்றது, படமாக ஓடுகிறது.
அதேபோலத்தான் மனம் உருவாக்கி வைத்திருக்கும் கனவுகளும், ஏக்கங்களும். நேரடியாகத் தங்களை நிஜமாக்கிக் கொள்ளும் சக்தி அவற்றிற்குக் கிடையாது.
ஆன்மசக்திக்கு முன்னால் வைக்கப்படும் எண்ணங்களும், கனவுகளும் தங்களை நிஜமாக்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.
கனவுகளையும், ஏக்கங்களையும் நிஜமாக்க வல்ல ஆன்ம சக்திதான் உங்களுக்குள்ளேயே இருக்கும் கல்பதரு.
எனவே எச்சரிக்கை தேவை. மனத்தூய்மை தேவை.
எதிர்காலத்தில் உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ எந்த வகையிலும் பாதிப்புகளையும் ஏற்படுத்தாத கனவுகள் தானா? வரங்கள் தானா அவை? என்று ஆராய்ந்தாலே மனம் தூய்மையாகிவிடும்.
கனவுகளைத் தூய்மைப்படுத்தி விடும், ஆன்மாவைத் திறக்க உதவும் மூன்று வலிமை வாய்ந்த தியான யுக்திகள்.
- சங்கல்பம்
- பிரார்த்தனை
- தீக்ஷை
சங்கல்பம்
இதற்கு உங்களுடைய கனவுகளையும், ஏக்கங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். “வெகு நாளாய் பாடாய்ப் படுத்தும் இந்த ஏக்கங்கள் நிஜமாக வேண்டும்” என்று நினைக்க வைக்கும் சங்கல்பத்தை ஆழப்படுத்துவதனாலேயே ஆன்ம சக்தியைத் தொட்டு விட முடியும்.
பிரார்த்தனை
சங்கல்பம் ஆழமாகும்போது ஒரு கட்டத்திற்கு மேல் நம்மைத் தாண்டிய சக்தியின் உதவி தேவை என்ற புரிய ஆரம்பிக்கும். சங்கல்பம் பிரார்த்தனையாக மலரும். ஆன்ம கதவு தானாய் திறந்து கொள்ளும்.
தீக்ஷை
தானாகவே வெகு பிரயர்த்தனப்பட்டு தன் ஆன்மாவைத் திறக்க முயற்சிப்பது சாதனை.
ஒரு ஞானகுருநாதரின் உதவியோடு வெகு எளிதாக, இதயம் உருகும் பிரார்த்தனை மூலமாக உங்களின் ஆன்மாவைத் திறப்பது தீக்ஷை.
இந்த மூன்று முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் உங்களின் கல்பதருவை அடையலாம். ஆன்மாவைத் திறக்கலாம்.
ஆன்மா திறக்க... சக்தி பொங்க... ஏக்கங்கள் பூர்த்தியாகும்.