வேண்டுதலெல்லாம் நிறைவேறும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கடவுளை வழிபடுபவர்களுக்கே, “ஏன் கடவுளை வழிபடுகிறோம்?'' என்பதின் தாத்பரியம் புரிவதில்லை. வழிபாட்டின் தாத்பரியத்தைப் புரிந்து கொண்டால் கடவுளை வழிபடாதவர்கள் கூட வழிபட ஆரம்பித்து விடுவார்கள்.
“கடவுள் வழிபாட்டைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?'' என்று நிருபர் ஒருவர் என்னிடம் கேட்ட போது,
“என் கருத்தைச் சொல்லும்முன், Science behind the worship அதாவது கடவுள் வழிபாட்டின் தாத்பரியத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.'' எந்தக் கடவுளை வழிபடுகிறீர்களோ, அந்த கடவுளாக நீங்கள் மாற வேண்டும்.
அந்தக் கடவுளின் நிலைக்கு நீங்கள் உயருவதற்காக உருவாக்கப்பட்டவையே வழிபாடுகள்'' எனச் சொன்னேன்.
ஜென் ஞானி ஒருவரிடம் குடும்பஸ்தர் ஒருவர் இப்படிக் கேட்டார்,
“பலகாலமாக இந்தக் கடவுளை வழிபடுகின்றேன். இப்போது என் வாழ்க்கையில் பிரச்சினைகள் பல வந்து விட்டதால், பல பரிகாரங்களைச் செய்து விட்டேன். அவை சரியானது. இருந்தும் புதுப் புது பிரச்சினைகள் உருவாகியபடியேதான் இருக்கிறது.
இதற்கு மாற்றுப் பரிகாரம் ஏதும் இருக்கிறதா?''
"மாற்றுப் பரிகாரம் தேவையில்லை. கடவுளை மாற்று." என்றார்.
ஒவ்வொருவரும் கடவுளை கடவுளாகப் பயன்படுத்துவதே இல்லை. அவரை ஒரு மேஜிக் மேனாகவே எதிர்பார்ப்பதால்தான், நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க கடவுள் வருவாரா! எனக் காத்திருக்கிறோம்.
இன்னொரு விஷயம், ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு தனிப்பட்ட சக்தியுண்டு. உங்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற வேண்டுமானால்

ஒவ்வொருவரும்
கடவுளை
கடவுளாக
பயன்படுத்துவதே
இல்லை.
கூட, உங்களின் சக்தியோடு தொடர்புடைய சக்தி படைத்த கடவுளால்தான் அது முடியும். ஜென் ஞானி கடவுளை மாற்று எனச் சொன்னது எதனால் என்பது இப்போது புரிகிறதா?
சிவன் ஞானத்தை அருளும் கடவுள். வெங்கடாசலபதி செல்வத்தை அருளும் கடவுள். சுப்பிரமணியர் தைரியத்தைத் தரும் கடவுள்.
இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த சக்திகள் உண்டு.
இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் உங்களின் இஷ்ட தேவதையை உங்களின் சக்திகுறைபாட்டின் அடிப்படையில்தான் தேர்வு செய்கிறீர்கள்.
பயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் காளி, துர்க்கை போன்ற தெய்வங்களைத்தான் தேர்வு செய்வார்கள்.
பணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் லட்சுமி, குபேரர் போன்ற தெய்வங்களைத்தான் தேர்வு செய்வார்கள்.
ஞானத்தையும், ஆனந்தத்தையும் தேடுபவர்கள் தட்சிணாமூர்த்தி, ஆனந்தேஷ்வரர் போன்ற தெய்வங்களைத்தான் தேர்வு செய்வார்கள்.
கடவுள் வழிபாட்டின் முதல் நோக்கம், உங்களின் சக்திக் குறைபாட்டை சரிசெய்வது, இரண்டாவது நோக்கம், உங்களுக்குள் அதே சக்தியை பலமடங்கு பொங்கச் செய்து உங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் அதே கடவுள் நிலையை உருவாக்குவது.
"இந்தியாவில் உருவ வழிபாடு என்பதே கிடையாது, உருவத்தின் மூலமாகத்தான் வழிபாடு உண்டு" என்று ஒரு சொற்பொழிவில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனாலும், நம் நாட்டில் தெருவுக்குத் தெரு கோவில்கள் இருக்கின்றன. நம் மக்கள் அங்கு சென்றுதான் வழிபடுகிறார்கள். விஷயம் இப்படியிருக்க உருவ வழிபாடே கிடையாது என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்." என அதே நிருபர் தொடர்ந்து கேட்டார்.
"இப்போதும் சொல்கின்றேன். உருவ வழிபாடே கிடையாது. சரி, உங்களின் அனுபவத்திலிருந்து சொல்லுங்கள். கோவிலுக்குச் சென்று மூலவிக்ரகத்தின் முன்பு நின்று வேண்டும்போது முதலில் என்ன செய்வீர்கள்?"
"கைகளைக் கூப்பி, கண்களை மூடுவேன்."
"பாருங்கள்... நீங்களே சொல்லிவிட்டீர்கள்."
மூலவிக்ரகத்திற்கு முன் நின்று வழிபாடு என ஆரம்பிக்கும் போதே, நீங்கள் செய்யும் முதல் செயல் கண்களை மூடுவது. உருவத்திலிருந்து உங்களைத் துண்டித்துக் கொள்கிறீர்கள். உருவத்தின் மூலமாக ஆரம்பிக்கின்றீர்கள். அதன் பிறகு, செய்யும் இரண்டாவது செயல், உள்ளுக்குள் ஆழ்ந்து மூழ்கி இறைசக்தியிடம் உருகி வேண்டுவீர்கள்.
அப்போது என்ன நடக்கிறது என்று தெரியுமா?
எப்படி உங்களின் வேண்டுதல்கள் நிஜமாகிறது என்று தெரியுமா?"
"எப்படி? அதை விளக்க முடியுமா!" என ஆச்சர்யமாகக் கேட்டார்.
> "இந்தியாவில் உருவ வழிபாடு என்பதே கிடையாது, உருவத்தின் மூலமாகத்தான் வழிபாடு உண்டு"
ஆத்ம தியானம்
அவருக்கு அளித்த பதில்தான் இந்தத் தியானம்...
"எவ்வளவு தூரம் பக்தியில் உருகுகிறீர்களோ, அவ்வளவு ஆழமாக உங்களுக்குள் நுழைவீர்கள். அதற்குத் தகுந்த சக்தி மாற்றங்கள் நிகழும்."
"ஒருவேளை ஆனந்தத்தைப் பெறுவதும், சகல சௌபாக்கியங்கள் பெறுவதும் உங்களின் வேண்டுதலாக இருந்தால், அதற்கான கடவுள் ஆனந்தேஸ்வரர். இந்தச் சந்நிதியில் உங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி பொங்கிக் கொண்டேயிருக்கும்.
நீங்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள் ஆழமாக உருகுகின்றீர்களோ, அந்த அளவுக்கு அந்தச் சக்தியோடு உங்களை இணைத்துக் கொள்கின்றீர்கள்.
அந்த அளவிற்கு சக்தியானது உங்களை ஆக்கிரமிக்கும். எல்லா சௌபாக்கியங்களும் வாழ்வில் பொங்க ஆரம்பிக்கும். அதற்கான சக்தி படைத்தவராக உங்களை மாற்றுவதே வழிபாடு.
வெங்கடாசலபதி சந்நிதியில் வேண்டிக் கொண்ட உங்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதும், உங்களின் உள்ளுலகிற்குள் நீங்கள் உருகி நுழையும் அளவைப் பொறுத்ததுதான்" எனச் சொல்லி முடித்தேன்.
உள்ளுக்குள் நுழைவதுதான் தியானம். கடவுள் வழிபாடு உங்களின் வாழ்வை வளமாக்கும், இன்னொரு இனிய தியானம். ஆத்மாவைத் தொடுமளவுக்கு உருகுங்கள். அந்தக் கடவுளாகவே மாறுவீர்கள்.