KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/நீங்களும் ஞானியாயிருக்கலாம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

நீங்களும் ஞானியாயிருக்கலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு விஞ்ஞானிக்கு வந்த வினோதமான ஆசை...

கதவு மூடியிருக்கும் போதும் தன் செல்லப் பூனைகளுக்கு, அவற்றின் கூண்டுக்குள்ளிருந்து விரும்பும் போதெல்லாம் வெளியே சென்று வரும் சுதந்திரம் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

உடனே தச்சரைக் கூப்பிட்டு தன் விருப்பப்படி ஒரு புது கூண்டை உருவாக்கச் சொன்னார். முன்புறம் கதவும், பின்புறம் தாய்ப்பூனை வெளியே போய் வருவதற்குத் தேவையான ஓட்டையிடப்பட்ட புதுக் கூண்டை நியூட்டனின் ஆலோசனைப்படி உருவாக்கினார்.

கூண்டைச் செய்யச் செய்ய தச்சருக்குச் சிரிப்பு வந்தது. காரணம், "ஏன் இந்த விஞ்ஞானிகளெல்லாம் இப்படி வினோதமாகவே யோசித்து வைப்பார்கள்!

முன்னால் கதவும், பின்னால் அதற்கு இணையான ஓட்டையும் போடுவதற்கு பதில், கூண்டை பூட்டாமல் விட்டுவிட்டாலே போதுமே... எப்போது வேண்டுமானாலும் வந்துபோகும் சுதந்திரம் பூனைக்கு இருக்குமே... ஏன் இப்படி யோசிக்கிறார்கள்?

மெத்தப் படித்துவிட்டால், எளிமையாக யோசிப்பது எப்படி? என்பதையே மறந்து விடுவார்களோ..." என்று பலவாறு யோசித்தவாறே தச்சர், அந்தக் கூண்டை உருவாக்கிக் கொண்டிருந்தாராம்.

தன் சக ஆராய்ச்சியாளரோடு அங்கு வந்த விஞ்ஞானி, தன்னுடைய புதிய கண்டுபிடிப்புப் பற்றியும், பூனைக்குக் கூட சுதந்திரம் தருவதைப் பற்றி தான் ஆழ்ந்து சிந்தித்ததையும் விவரித்துக் கொண்டிருந்தார்.

தச்சருக்கு ஒரே எரிச்சல், “அட என்னங்க! எதுக்கு இரண்டு வேலை? முன்னாடி ஒரு கதவாம், பின்னாடி ஒரு துவாரமாம்...” என்று உள்ளுக்குள் முணுமுணுத்தபடி வேகவேகமாய் ஆணி அடித்துக் கொண்டிருந்தார்.

portrait

அப்போது விஞ்ஞானி தச்சரிடம் திரும்பி, “ஆங்! புது ஐடியா. தாய் பூனை வருவது பற்றி யோசித்த நாம், அதன் இரண்டு குட்டிகள் வருவதைப் பற்றி யோசிக்கவேயில்லை. தாய் பூனைக்காக உருவாக்கிய பெரிய துவாரத்திற்குப் பக்கத்திலேயே, அதனுடைய இரண்டு குட்டிகளும் உள்ளே போய் வெளியே வருவதற்கு இரு சிறு துவாரங்களையும் உருவாக்கு” என்று பெருமிதத்தோடு சொன்னார்.

தன்னுடைய
வாழ்க்கைப்
பாதையை உலுக்கிப்
பார்க்கக்கூடிய ஒவ்வொரு
சம்பவத்தையும் திறந்த
மனத்தோடு பார்க்கும்
பக்குவத்தை வளர்த்துக்
கொண்டால், வளர்ந்து
கொண்டேயிருப்பீர்கள்.

உடனே தச்சர், “ஏன் சார்? பெரிய துவாரத்தின் வழியாகவே சிறிய பூனைகளால் நுழைய முடியாதா என்ன?” என்று கேட்டதில் அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டார்களாம்.

இந்த நிகழ்ச்சி விஞ்ஞானியை மிக ஆழமாக தன்னுள் திரும்பிப் பார்க்க வைத்தது.

“சின்ன விஷயத்தை ஏன் இவ்வளவு சிக்கலாக்கினோம்?” என ஆராய வைத்தது. அந்த ஆராய்ச்சி பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது.

விஞ்ஞானியின் வாழ்வில் நிகழ்ந்தது போல, ஒவ்வொருவரைச் சுற்றியும் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

தன்னுடைய வாழ்க்கைப் பாதையை உலுக்கிப் பார்க்கக்கூடிய ஒவ்வொரு சம்பவத்தையும் திறந்த மனத்தோடு பார்க்கும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டால், வளர்ந்து கொண்டேயிருப்பீர்கள்.

வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களை எதிர்ப்பவர்கள், தனியாய் நரகத்திற்குச் செல்ல மாட்டார்கள். நரகத்திலேயே வாழ்வார்கள்.

NSP தியான முகாமில் பக்தரொருவர், "உயர்ந்த உணர்வு நிலையை அடையுங்கள்" என்று நீங்கள் அடிக்கடி சொல்வது மிகவும் புதுமையானதாக இருக்கின்றது. "மனதை கட்டுப்படுத்துங்கள். எழுந்து நில்லுங்கள். யோகத்தின் உச்சியைத் தொடுங்கள்..." எனும் போதனைகளைத்தான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இதுவரை தொடப்படாத பகுதியை நீங்கள் தொட்டிருப்பது எதனால்?

"உயர்ந்த உணர்வுநிலை என்றால் என்ன? அதை அடைவது எப்படி? என விளக்கிச் சொல்லுங்கள்" எனக் கேட்டார். அவருக்கு பதில் அளிக்கையில்,

புதிதாய் எதையும் சொல்லவில்லை.

அப்பரும், சுந்தரரும், ஆண்டாளும், ஔவையும் ஆடிப்பாடி பக்திப் பரவசத்தில் வாழ்ந்திருந்த உயர்ந்த நாடு நம் தெய்வத் திருநாடு.

உயர்ந்த உணர்வு நிலையிலேயே வாழும் மக்கள் அரிதாகி விட்டதால்தான் அதை மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கின்றது.

"வீட்டுக்கு ஒரு ஜீவன் முக்தர் வாழ்ந்த காலமெல்லாம் நம் நாட்டிலும் இருந்திருக்கின்றது."

"அப்படியா?"

"வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். மெய் சிலிர்த்துப் போவீர்கள். உங்களுடைய உறவுக்கார கிராமங்களில் கேட்டுப் பாருங்கள்... இன்னும் கூட உங்களில் பலருக்கு நினைவில் இருக்கலாம்.

உங்களின் கொள்ளுப்பாட்டியோ, தாத்தாவோ நான் இந்தத் தேதியில் இறக்கப்போகிறேன் என்று சொல்லிவைத்து, எந்தத் துன்பமும் இல்லாமல் இனிமையாக இறந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

``` 'வீட்டுக்கு ஒரு ஜீவன் முக்தர் வாழ்ந்த காலமெல்லாம் நம் நாட்டிலும் இருந்திருக்கின்றது.' ``` அப்படி யாராவது ஒருவர் உங்களின் மூதாதையராக இருந்ததைக் கேள்விப்பட்டிருந்தாலும் சரி, சந்தோஷப்படுங்கள். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

காரணம், ஒரு ஞானியின் வாரிசு நீங்கள்.

அந்த ஆசீர்வாதம் உங்களோடேயிருக்கும்.

ஜீவன் முக்தர் என்றால்...

உடலில் இருக்கும்போதே பூரணமாக வாழ்ந்து ஞானமடைந்து விட்டவர்கள்.

ஜீவன் முக்தர்கள் தான் உயர்ந்த உணர்வு நிலையிலேயே வாழ்பவர்கள். உயர்ந்த உணர்வில் வாழ்வதால் அவர்களின் எதிர்காலம், உடலைவிட வேண்டிய நேரம் முதற்கொண்டு உணர்ந்து வைத்திருப்பவர்கள்.

ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு சொல்லிலும் இனிமையாக வாழும் இவர்களுக்கு, இறப்புக்கூட இனிப்பாய்தான் இருக்கும்" என்று சொன்னேன்.

உயர்ந்த உணர்வு நிலையை மலர்த்திக்கொள்வது, உயர்ந்த உணர்வு நிலையிலேயே வாழ்வதென்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய ஆனந்தப் பரவச சொர்க்கம்.

ஆத்ம தியானம்

நன்றாய் யோசித்துப் பாருங்கள்... ஆராய்ந்து பாருங்கள்... இந்த நிமிடம் கூட உங்களின் ஏதோ ஒரு குணம் உங்களுக்குள் கொப்பளித்துக் கொண்டிருக்கும்.

கோபம், கவலை, பொறாமை, சாதிக்கும் வெறி, காமம் என்ற ஏதாவது ஒரு குணம் குமுறிக் கொண்டேயிருக்கும்.

‘தினுசு தினுசாய் உங்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் இந்த எரிமலைகளை எப்போது அகற்றப் போகின்றீர்கள்? எப்படி அகற்றப் போகின்றீர்கள்?’

உங்களின் இந்தத் தேடலுக்கான பதில்தான் இந்த ஆத்ம தியானம்

குமுறிக் கொண்டிருக்கும் குணங்களுக்குத் தேவை முறிவு மருந்துதானே அன்றி, அந்த குணங்களைத் திருப்திப்படுத்தும் தீனிகள் அல்ல.

குமுறும் குணங்களை முறித்து, ஆரோக்கியமான உணர்வைப் பூக்க வைக்கும் இரண்டு மருந்துகள்.

முதல் மருந்து

“ஆழ்ந்த பக்திப்பூர்வமானப் பிரார்த்தனை உணர்வை மீண்டும் மீண்டும் மேலெடுத்து வாருங்கள்.“

எப்போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு குணம் கொப்பளிக்க ஆரம்பிக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் இந்த மருந்தை உள்ளுக்குள் உருவாக்குங்கள்.

பக்திப்பூர்வமான பிரார்த்தனை உணர்வு உங்களுக்குள் எழும் குமுறல்களை சாந்தப்படுத்துவதோடு, உங்களுக்குள் ஆரோக்கியமான உணர்வுகளை எழும்பச் செய்யும்.

இரண்டாவது மருந்து

இன்னொரு மருந்து...

நன்றி நவிழ்தல்

உங்களுக்குள் திரும்பிப் பார்க்கலாம் என்ற நினைவு வரும்போதெல்லாம், ஆழ்ந்த நன்றியுணர்வுக்குள் மூழ்குங்கள்.

யோசிக்குமளவுக்கு மூளையையும், உடலையும், வாழ்வையும் இன்னும் இயற்கை நமக்காய் விட்டு வைத்திருக்கும் காரணத்திலிருந்து, நீங்கள் அனுபவமாக்கும் ஒவ்வொரு நல்ல நிகழ்வுக்கும் காரணமாயிருக்கும் நிறுவனங்கள், நிபுணர்கள், நண்பர்கள் வரை ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லுங்கள்.

‘கோபப்படும்போது எப்படி நன்றி சொல்ல முடியும்? ’என யோசிக்காதீர்கள். கோபம் வருவது தெரியுமளவிற்கு நல்ல மனநிலையில் நீங்கள் இருக்கின்ற காரணத்திற்காகவே

நன்றி சொல்லுங்கள். நன்றியுணர்வு மாபெரும் மருந்து. அது எல்லாவற்றையும் குணமாக்கிவிடும்.

கட்டுரையை மீண்டும் படித்துக் கடைப்பியுங்கள். ஆரோக்கியமடைவீர்கள். ஆனந்தமயமாவீர்கள். அழகாவீர்கள்.

Author portrait