KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/யாராலும் இனி உங்களை அசைக்க முடியாதுSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

யாராலும் இனி உங்களை அசைக்க முடியாது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"எதிர்பாராத நேரத்தில் எதையாவது பேசி நம்மைத் துக்கப்பட வைத்து விடுகிறார்கள். ஒரு சின்ன வார்த்தையில் நம்மைச் சோர்வடைய வைத்து விடுகிறார்கள். இதிலிருந்து வெளிவர வழி இருக்கிறதா?" என்ற தேடுதலுடைய ஒவ்வொருவருக்குமான கட்டுரை இது.

ஒரு சின்னக் கதை...

சந்தைக்குச் சென்று, நல்ல வலுவான கழுதை ஒன்றை வாங்கிக் கொண்டு தந்தையும் மகனும் தங்களின் ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்த வழியாகச் சென்ற இருவர், "என்ன மனிதர்கள் இவர்கள்? இவ்வளவு வலுவான கழுதையை வைத்துக் கொண்டு நடந்தே செல்கிறார்களே!" என்று பேசிக் கொண்டு சென்றார்கள்.

"ஆமாம்பா, நாம் ஏன் இப்படி நடந்து செல்ல வேண்டும்?" என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு, இருவரும் கழுதையின் மேல் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.

கொஞ்ச தூரம் சென்றதும், எதிரில் வந்த மூன்று பேர், இவர்கள் இருவரையும் வினோதமாகப் பார்த்தார்கள் "என்னதான் கழுதையாக இருந்தாலும், அதன் மீது ரெண்டு பேரா ஏறிக்கொள்வது? என்ன மனிதர்கள் இவர்கள்?" என்று சலித்துக் கொண்டார்கள்.

"ஒரு கழுதையின் மேல் இரண்டு பேர் ஏறிக்கொள்வது தவறுதான்" என்று சொல்லி, தன்னுடைய மகனை மட்டும் கழுதையின் மேல் அமரவிட்டு இறங்கி விட்டார்.

அடுத்து வந்த பெண்மணி, "என்ன அநியாயம் இது? முதியவரை நடக்க வைத்து விட்டு, இளைஞன் இப்படி ஒய்யாரமாய் அமர்ந்து வருகிறானே! கலிகாலம்" என்று திட்டி விட்டுச் சென்றார்.

"ஆமாம்பா, நான் நடந்து வந்து கொள்கிறேன். நீங்கள் நல்லா உட்கார்ந்து கொண்டு

portrait

மற்றவர்களின்
விமர்சனத்துக்கு
முக்கியத்துவம்
அளித்தால்
இப்படித்தான்
வாழ்க்கையே
தலைகீழாகி விடும்.

வாங்க" என்று சொல்லி தன் தந்தையை அமரவிட்டு இறங்கிக் கொண்டார்.

அடுத்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் 'சின்னப் பையனை நடக்க விட்டு, இவ்வளவு பெரிய மனுஷன் உட்கார்ந்து கொண்டு வருவது என்ன நியாயம்? கொஞ்சம் கூட கரிசனம் என்பதே இல்லை.. என்ன மனிதர்கள்'என்று சொல்லிக் கொண்டே சென்றார்கள்.

இதைக் கேட்ட இருவரும், "அப்பா, கழுதையை சும்மா விட்டு நாம் நடப்பதும் தவறு, இரண்டு பேரும் கழுதை மேல் அமர்வதும் தவறு. இரண்டு பேரில் ஒருவர் ஏறிக்கொள்வதும் தவறு.

அப்படியென்றால் என்னதான் செய்வது?"

"சரி இப்படித்தான் செய்ய வேண்டும்..." என்று சொல்லிவிட்டு இருவரும் கழுதையை தங்களின் தோள் மீது தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.!

எதிரில் வந்தவர்களெல்லாம் "நடத்தி கூட்டி வரப்பட வேண்டிய கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்களே, என்ன மடத்தனமான மனிதர்கள் இவர்கள்?" என்று வினோதமாய் பார்த்துச் சொல்லி சென்றார்கள்!

மற்றவர்களின் விமர்சனத்துக்கு முக்கியத்துவமளித்தால் இப்படித்தான் வாழ்க்கையே தலைகீழாகி விடும்.

ஒவ்வொருவரும், ஒவ்வொரு நோக்கத்தோடு, மற்றவர்களின் மேல்

விமர்சனங்களை வீசுவது என்பது பரவலாகி விட்ட சமூக நோய்.

மற்றவர்களின் தப்புதாளத்திற்கெல்லாம் ஆட்டமாடினால், வாழ்க்கையே ஆட்டமாடி விடும். அப்படி ஆட வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு உண்மையை ஆழமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்...

"யாருக்கும் யாரையும் குறை சொல்வதற்குத் தகுதியில்லை.

ஒரு மனிதராக மாற நீங்கள் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களோ அப்படித்தான் அவர்களும்.

ஞானமடையாதவரை, அவரும் தடுமாறிக் கொண்டிருப்பவர்தான்"

நீங்கள் என்ன செய்தாலும் விமர்சனங்கள் ஓயப்போவதே இல்லை. எனவே, நீங்கள்தான் ஓய்வடைய வேண்டும்.

இதிலிருந்து விடுபட ஒரேயொரு வழி...

‘எது தர்மம்? எது நியாயம்?’ என்ற ஆராய்ச்சியோடு மட்டும் மற்றவர்களின் விமர்ச னத்தை அணுகுங்கள்.

நியாயமற்ற விமர்சனங்களை முழுமையாகக் கண்டுகொள்ளாமல் விடுவதும், தவிர்ப்பதும் தர்மம், புத்திசாலித்தனம்.

மற்றவர்களின் விமர்சனங்களை நீங்கள் உங்களுக்குள்ளேயே விமர்சித்துக் கொண்டே இருப்பதுதான் துக்கத்தைத் தரும். விமர்சனங்களை விமர்சிப்பதிலிருந்து விடுபடுங்கள். மனச்சோர்வு இல்லாமல் வாழ்வீர்கள். இதற்கு நேரடியாய் உதவும் தியானம்தான் இந்த வார ஆத்ம தியானம்.

நியாயமற்ற விமர்சனங்களை முழுமையாகக் கண்டுகொள்ளாமல் விடுவதும், தவிர்ப்பதும் தர்மம், புத்திசாலித்தனம்.

ஆத்ம தியானம்

உங்களைத் துக்கத்தில் ஆழ்த்த எந்த மனிதருக்கும் உரிமையில்லை. சுய வளர்ச்சிக்காக, சுய முன்னேற்றத்திற்காக நீங்கள் உங்களை உள்ளே திரும்பிப் பார்ப்பதற்காக மட்டும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு மதிப்பளிக்கலாம், தவறில்லை.

இந்த நிமிடத்திலிருந்து உங்களை நோக்கி வரப்போகும் ஒவ்வொரு விமர்சனத்தையும், தியான உணர்வோடு நிதானமாகச் சந்தியுங்கள்.

‘முதல் விஷயம் மற்றவரின் விமர்சனங்களைப் பார்த்துத் தடுமாறுவதற்குப் பதில், உணர்வுப்பூர்வமாக ஒரு பொறுப்புணர்வோடு எதிர்கொள்ளுங்கள். அடுத்து அதிலிருந்து உங்களின் வளர்ச்சிக்குத் தேவையான செய்தியை மட்டும் எடுத்துக் கொண்டு, நிம்மதியாக அடுத்த வேலையைத் தொடருங்கள்.’

தியான உணர்வோடு ஒவ்வொரு சிறு விமர்சனத்திற்கும் இதைச் செய்து பாருங்கள்... யாராலும் இனி உங்களை அசைக்க முடியாது.

இந்த அணுகுமுறையால் உங்களின் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு மாற்றங்களையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொண்டு வாருங்கள்.

உங்களின் படிப்படியான வளர்ச்சியைக் காணலாம். இனி, மற்றவர்களின் விருப்பம்போல் உங்களின் வாழ்வு அமைவது மாறி, உங்களின் விருப்பம் போல உங்களின் வாழ்வு அமைய ஆரம்பிக்கும்.