KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/ஆனந்தம் பெருகட்டும்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

ஆனந்தம் பெருகட்டும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

உண்மை (Truth) புதிதல்ல.

அது மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகிறது.

நான்கைந்து துறைகளில் Ph.D- க்கள் வாங்கிய மிஸ்டர். வாக்கரின் வாழ்வில் நடந்த சம்பவம் இது...

அவருக்கு வயது நாற்பத்தைந்தைத் தாண்டிவிட்டது. வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளைப் பற்றியும், மணிக்கணக்காய் பேசத் தெரிந்த மேதா வாக்கருக்கு, தன்னுடைய வாழ்வின் மிக முக்கியமான ஏதோ ஒன்றை இழந்து கொண்டிருப்பதை ஆழமாய் அவர் உணர்ந்ததால், தான் பிறந்த கிராமத்தில் தனது வயதான தாத்தாவைப் பார்க்கச் சென்றார்.

அவர் ஒரு ஜென் ஞானி.

நொந்துபோய் வரும் தன் பேரனைப் பார்த்த மாத்திரத்தில் ஞானி கேட்டார், “ஏனப்பா, வயது இவ்வளவு ஆகிவிட்டதே, இப்போதாவது கற்க ஆரம்பிக்கலாமில்லையா?”

“என்னது! இதற்கு மேல் கற்க வேண்டுமா...?” என அதிர்ச்சியோடு கேட்டார் மேதாவி.

“ஆம்! இனிதான் ஆரம்பிக்க வேண்டும்” என்றார் ஞானி.

“இனி கற்க எதுவுமில்லை எனுமளவுக்கு கற்றபின்னும் நிம்மதியில்லை என்பதுதான் என்னுடைய பிரச்சளையே. நீங்க என்ன தாத்தா மேலும் கற்கச் சொல்கிறீர்கள். இன்னும் எதைக் கற்க வேண்டும்?”

“Learning the unlearning” - அதாவது, கற்றுக்கொண்டேயிருப்பது என்பது மூளையை நிரப்பிக்கொண்டிருக்கும் செயல். unlearning என்பது திறந்த இதயத்தோடு இருக்கும் விகல்பமற்ற குழந்தையின் சகஜநிலை.

portrait

'நீங்கள்
ஆனந்தமயமானவர்'
என்பது
இறுதியான
உண்மை.
விவாதத்திற்கு
அப்பாற்பட்ட
சத்தியம்.

மூளையறிவு நிச்சயம் வேண்டும். அது உலகில் போராடுவதற்கு!

அதேபோல்,

இதய உணர்வும் நிச்சயம் வேண்டும், அது உலக வாழ்க்கையை வாழ்வதற்கு!

போராடத் தெரிந்தால் மட்டும் போதாது.

ஆனந்தமயமாய் வாழவும் கற்க வேண்டும்.

அதைக் கற்றுக்கொள்ள இதுவரை நாம் கற்றுக்கொண்ட எல்லா அறிவையும் ஒரு மூலையில் தூக்கி வைத்துவிட்டு, எதையும் புதிதாய்க் கற்றுக்கொள்ளும் குழந்தையின் உற்சாகத்தோடு கற்றுக்கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி...

'நீங்கள் ஆனந்தமயமானவர்' என்பது இறுதியான உண்மை. விவாதத்திற்கப்பாற்பட்ட சத்தியம். ஆனால், அதை நீங்கள்தான் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரு ஜென் ஞானியிடம் பேசிக் கொண்டிருந்த பேராசிரியர் கேட்டார்.

"பெரிய பெரிய ஒழுக்கவாதிகள், நன்னெறியாளர்கள்கூட அவரவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்தால், அது அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது. அருமையாய் பேசும் அவர்கள் அருமையானவர்களாக இல்லையே ஏன்?"

ஞானி, “இதைப் புரிந்து கொள்ள ஒரு சின்ன கதை...

ஒரே கடலில் இருந்து எழும்பிய இரண்டு அலைகள் பேசிக்கொண்டன. முதலில் எழும்பிய அலை, பெரிய அலை.

கொஞ்சம் நேரங்கழித்து எழும்பிய அலை சின்ன அலை.

சின்ன அலை, “நான் ஏன் இவ்வளவு பொங்குகிறேன்?”

பெரிய அலை, “நீ கடலோடு ஒன்றியில்லாமல் இருப்பது தான் காரணம்.

கடலை விட்டு கரையை நோக்கி தானாய் வர ஆரம்பித்ததுதான் நீ செய்த முதல்பாவம்.

அதனால் தான் பொங்கி எழுகிறாய்...

ஒழுக்கத்தோடும், கட்டுப்பாட்டோடும் வாழ். சரியாகிவிடுவாய்" என வறட்டு போதனை செய்து அந்தச் சின்ன அலையை குற்றஉணர்வில் ஆழ்த்தியதாம், சின்ன அலையை விட பெரிதாய் எழும்பி இருந்த அந்தப் பெரிய அலை.

ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். வயிற்றுவலியில் இருப்பவர்தான், வயிற்று வலியில் இருந்து வெளிவருவது பற்றிய காரணக் காரியங்களைப் பற்றி அலசி ஆராய்வார். மற்றவர்களை, "இதைச் சாப்பிடாதே! அதைச் சாப்பிடாதே!" எனத் திட்டுவார்.

வயிற்று வலியைக் கடந்து வந்த ஒருவரால்தான் வயிற்று வலியில் இருந்து எப்படி வெளி வருவது? என்ற நுட்பங்களைக் கற்றுத்தர முடியும்.

உங்களின் குறைகளிலிருந்தும், குற்றங்களிலிருந்தும் வெளி வருவதற்கானத்

> வயிற்று வலியைக் கடந்து வந்த ஒருவரால்தான் வயிற்று வலியில் > இருந்து எப்படி வெளி வருவது? என்ற நுட்பங்களைக் கற்றுத்தர > முடியும்.

தீர்வுகளைத் தராமல், உங்களைக் குற்றஉணர்ச்சியில் ஆழ்த்த முயற்சிப்பவர்களை நம்பாதீர்கள். எதிரிகளிடமிருந்தல்ல, முதலில் இவர்களிடமிருந்துதான் நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

தீர்வு தராமல் வரட்டு போதனைகளை மட்டுமே தருபவர்கள்தான் பெரிய அலைகள். அவர்களைப் பற்றிக் கண்டுகொள்ளவேண்டியதே இல்லை. அவ்வளவுதான்." எனச் சொல்லி முடித்தார்.

portrait

ஆனந்தமயமானவர்
எப்போதும்
அருமையானவராகவே
இருப்பார்.

ஆனந்தமயமானவர் எப்போதும் அருமையானவராகவே இருப்பார்.

அருமையான மனிதராக இல்லாத ஒருவர், நிச்சயம் ஆனந்த மயமானவராக இருக்க வாய்ப்பில்லை.

உங்களின் வாழ்வில் சந்தித்த இதுபோன்ற மனிதர்களோடு நிகழ்ந்த கஷ்டங்கள், துக்கங்களை நினைத்துக்கலங்காதீர்கள். அவற்றை கலைத்து விடுங்கள். அவர்களை முழுமையாய் மன்னியுங்கள். இது துக்கங்களைக் கலைப்பதோடல்லாமல், ஆனந்தத்தை உங்களுக்குள் கரைத்துவிட ஆரம்பிக்கும்.

மன்னித்தல் ஒரு மாபெரும் தியானம்.

QMP தியானமுகாமில், "11 நிமிடங்கள் செய்த 'மன்னிக்கும் மருந்து' எனும் தியானம் என்னுடைய 12 வருட துக்கத்தையே கலைத்துவிட்டது. துக்கத்தால் கரைந்த நான், இப்போது ஆனந்தத்தில் அல்லவா கரைய ஆரம்பித்துவிட்டேன்! இதன் ரகசியமென்ன?" என பக்தரொருவர் கேட்டார்.

"உங்களின் துக்கம்கூட உங்களின் இன்னொரு மூளையறிவுதான்".

"துக்கம் மூளையறிவா?"

"ஆம். மூளையில் பல செய்திகளைப் பதித்து வைத்திருப்பது போலத்தான், உள்ளுக்குள் துக்கங்களையும் பதித்து வைத்திருக்கிறீர்கள். ஓயாமல் ஊர்ந்து கொண்டிருக்கும் பூச்சிகளைப் போன்று, மூளையில் ஊர்ந்து கொண்டிருக்கும் 'ஞாபகத்துணுக்குகள்'தான் துக்கங்கள்.

மன்னித்தல் மருந்து மட்டுமல்ல - மாபெரும் தியானமும் கூட.

மன்னிக்கும் போது உங்களையுமறியாமல் ஆத்மாவைத் திறக்கிறீர்கள்.

ஆத்மாவைத் திறக்கும்போதே மூளையும் மனமும் தன்னால் திறந்து கொள்ளும்.

அப்போது ஆத்ம சக்தியும் பெருகும். இப்போது மூளையை விட்டு துக்கங்கள் இறங்கிச் சென்றுவிட்டதால் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இனிய நிலைமையையும் சேர்த்துதான் ஆனந்தப் பெருக்கு என உணர்கிறீர்கள்” எனச் சொன்னேன்.

“நல்ல தியானம். நாம் எல்லோரும் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து இது!” எனச் சொன்னார்.

‘உங்களுக்குள் ஆனந்தம் பெருக, ஆத்மா திறக்கப்பட வேண்டும்.’

ஆத்மாவைத் திறக்க பயன்படும் நூற்றுக்கணக்கான சாவிகளில் இருந்து இக்கால மனிதனுக்கு நேரடியாய் பயன்படும் முக்கியமான சிலவற்றை மட்டும் தேர்வு செய்து தருகிறேன்.

ஆத்ம தியானம்

பெரியவர்கள் சிறியவர்களை,
அறிவாளிகள் பாமரர்களை,
பெற்றோர்கள் பிள்ளைகளை,
மதபோதகர்கள் பக்தர்களை...

குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தக் கூடாது. அவற்றிலிருந்து நாம் வெளிவர அவர்கள் உதவ வேண்டும். மீறிச் செய்தால் அவர்கள் பெரியவர்களல்ல. கவலையை விடுங்கள்.

உங்களுக்கு நீங்களே சுதந்திரமளியுங்கள்.

அவர்களைக் காப்பாற்றும் அதே இறைவன் நிச்சயம் உங்களையும் காப்பாற்றுவார். இது சத்தியம்.

எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தான்.

Portrait