வாழ்வே வசந்தமாக வேண்டுமா!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சீடன்: நீங்கள் கடவுளா?
ஞானி: நீங்கள் மனிதரா!
அழகான உரையாடல் ஒன்றைப் படித்தேன்...
ஒருவர் தன் நண்பரிடம், “ஒரு வேலையைச் செய்வதற்கு எத்தனை விதமான முறைகள் உள்ளன?” என்று கேட்டார்.
அதற்கு அந்த நண்பர், “மொத்தம் மூன்று முறைகள் இருக்கிறது” என்றார்.
உடனே அவர் கேட்டார், “அந்த மூன்று முறைகளைச் சொல்லுங்களேன்?”.
அதற்கு நண்பர் சொன்னார்.
“ஒன்று நீங்களே அந்த வேலையைச் செய்துவிடுவது. அப்படி செய்தால் அந்த வேலை நடந்துவிடும்.
அப்படியில்லையென்றாலும் யாராவது ஒரு ஆள் வைத்து செய்வது. அப்படியென்றாலும் அந்த வேலை நடந்துவிடும்.
மூன்றாவது, ‘இதைச் செய்யாதே!’ என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த வேலை நடந்து விடும்!” என்று பதில் சொன்னார்.
நாம் சொல்வதற்கு நேர்மாறாகச் செய்வதில் பிள்ளைகளுக்கு ஒரு பெரிய சுகம் இருக்கத்தான் செய்கிறது.
எதனால் இப்படி ஒரு வினோதமான சுகத்தை, சிறுவயதிலிருந்தே மனிதன் அனுபவிக்கத் துவங்குகிறான் என்பதைப் புரிந்துகொண்டாலே, உங்களின் பல வாழ்க்கைத் தடைகள் நீங்குவதற்கான வழி திறந்து கொள்ளும்.
குழந்தை எதிர்க்காது.
சிறுவன் எதிர்ப்பான்.
வாலிபன் அத்து மீறி நடப்பான்.

தர்க்கமாயிருக்கும்
வரை பிரச்ச
னைகள் வராது.
அது குதர்க்கமாகும்
போதுதான்
பிரச்சனை
ஆரம்பிக்கிறது.
காரணம் குழந்தையின் மனம் எளியது. குழந்தை வளர வளர, அதன் logic (தர்க்கம்) வளர ஆரம்பிக்கிறது. எதையும் பிரித்துப் பார்ப்பது. எதையும் அலசிப்பார்ப்பதுதான் logic (தர்க்கம்). தர்க்கமாயிருக்கும் வரை பிரச்சனைகள் வராது. அது குதர்க்கமாகும் போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
பிள்ளை நம்மை எதிர்த்துப் பேச ஆரம்பித்ததுமே...
"பிள்ளை வளர்ந்துட்டான்பா...
என்ன கேள்வி கேட்கிறான், தெரியுமா?
அட! எவ்வளவு தைரியமா பேச ஆரம்பிச்சிட்டான்!" என நாம் பெருமைப் படுவதுண்டு. இது தர்க்க வளர்ச்சி. இது இயற்கை. வரவேற்கத்தக்கது.
ஆனால், அது குதர்க்கமாகும் போதுதான் "பிள்ளையா இது... குட்டிச் சாத்தான். இதை பெத்ததுக்கு ஒரு உரலையோ, உலக்கையையோ பெத்திருக்கலாம்!" என நோக ஆரம்பிக்கிறார்கள் மனிதர்கள்.
"முடியாது!", "அப்படித்தான் செய்வேன்", "நான் ஏன் இதையெல்லாம் செய்யவேண்டும்?" போன்ற எண்ணங்களும், பேச்சுக்களும்தான் குதர்க்கத்தின் விதைகள்.
மனோதத்துவத்தை ஆராய்ந்து பார்க்கும் போது "முடியாது, முடியாது" என ஒரு மனிதன் சொல்லும் ஒவ்வொரு முறையும், அவனுக்குள் ஒருவித சுவையை அது உருவாக்குகிறது என்கிறார்கள்.
எனவே அது ஒரு போதையைத் தர ஆரம்பித்துவிடுகிறது. இங்குதான் குதர்க்கத்தன்மை உருவாகிறது.
அந்தச் சுவையை அனுபவிப்பதும் அதனால் வளர்வதும் நீங்களல்ல. உங்களுக்குள் இருக்கும் அகங்காரம். இது, தேளைத் தோளில் விளையாட விடுவதற்குச் சமம்.
எதிர்ப்பது ஒருவரை வீரனாக வெளியுலகில் காட்டுகிறது. எதிர்ப்பவர் தன்னை ஒரு வீரனாக உள்ளுலகில் உணர்கிறார். எனவே அது ஒரு போதையைத் தர ஆரம்பித்துவிடுகிறது. இங்கு தான் குதர்க்கத் தன்மை உருவாகிறது.
எப்பொழுதெல்லாம் நம்மால் பலபேருக்கு, 'இல்லை! No!' என சொல்ல முடிகின்றதோ அப்போதெல்லாம் நாம் ஒரு பெரிய மனிதனாக மாறிவிட்டதாக உணர்வோம்.
உதாரணத்திற்கு, உங்களின் இளம்பிராயத்தையே எடுத்துக்கொள்வோமே, "நான் ஆண்மகனாகவும், ஒரு சுதந்திரமான மனிதனாகவும் மாறிவிட்டேன்" என்பதைக் காட்டுவதற்காகவே நம் தந்தையிடமும், வீட்டிலிருப்பவர்களிடமும், காரணமில்லாமலே பலவற்றிற்கும் "NO, NO' என மறுப்பு தெரிவித்திருப்போம்.
இங்குதான் ஒரு உண்மையை ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டும். மறுக்கும் தர்க்கம், சில இடங்களில் உபயோகப்படலாம். அப்போது தர்க்கரீதியாக நீங்கள் ஆழ்ந்து முடிவெடுத்து 'No' சொல்வது வேறு.
ஆனால், தர்க்க ரீதியாக பிடிபடாமலேயே, மற்றவர்களின் உணர்வு தெரியாமலேயே எடுத்த எடுப்பிலேயே மறுப்பதுதான் தவறு.
தர்க்க ரீதியாக பிடிபடாமலேயே, மற்றவர்களின் உணர்வு தெரியாமலேயே எடுத்த எடுப்பிலேயே மறுப்பதுதான் தவறு.
குதர்க்கம் முற்ற ஆரம்பிக்கும் போதுதான் கேள்வியில் கூட குதர்க்கம் கொப்பளிக்க ஆரம்பிக்கிறது. இப்படிப்பட்டவர்களின் உரையாடல்கூட குதர்க்கமாகிவிடுகின்றது. குதர்க்கங்கள்தான் மனிதர்களையும் வாழ்க்கையையும் குதறி வைத்து விடுகின்றன.
குதர்க்கவாதிகளால் யதார்த்தமான வாழ்க்கையை வாழவே முடியாது.
மனைவி அவருடைய உறவினர்களின் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்கும்போது கண்மூடித்தனமாக மறுப்பதிலிருந்து, ஏதாவது புதிய கருத்தையோ, தியானத்தையோ,

குதர்க்கங்களைத்
தாண்டிவிட்டால்
வாழ்வே
வசந்தமாகிவிடும்.
ஆனந்தமயமான வாழ்க்கை முறையையோ பற்றி நாம் பேச ஆரம்பிக்கும் போது, அதை எடுத்த எடுப்பிலேயே குதர்க்கமாய் கிண்டலடித்துப் பேசுவதுவரை, குதர்க்கமாய் கேள்வி கேட்டு வைப்பதுவரை நிகழ்பவையெல்லாமே குதர்க்கம் முற்றியதால் வந்த புற்றுநோய்கள்தான்.
"இப்படிப் பேசுபவர்களெல்லாம் குதர்க்கவாதிகள்" என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியும்.
ஆனால் இது அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தாலும் அவர்களின் குதர்க்கம் அவர்களுக்கு புரியுமா?
அவர்களின் குதர்க்கம் உங்களுக்குப் புரிந்த அளவிற்கு அவர்களுக்குப் புரியாதில்லையா?
அதே போலத்தான் நமக்கும்???
உங்களைவிட உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தெளிவாய்த் தெரியும் உங்களின் குதர்க்கங்களைக் கண்டுபிடிப்பதும், அழிப்பதும் லேசுபட்ட காரியமல்ல.
தியானத்தால் மட்டுமே இவற்றை எளிதாய் அழிக்க முடியும்.
குதர்க்கங்களைத் தாண்டிவிட்டால் வாழ்வே வசந்தமாகிவிடும்.
ஆத்ம தியானம்
உங்களையே ஒரு சர்வே எடுத்துப்பாருங்கள். ஒருநாளில் எத்தனை முறை மறுக்கிறீர்கள் என்று பாருங்கள்.
"Yes..., Yes..." எனச் சொல்வதைவிட "No... No..." சொல்வது அதிகமாய் இருக்கும் வரை நம்மையுமறியாமல் கொப்பளிக்கும் குதர்க்கங்கள் ஓயாது.
ஒவ்வொரு முறை மறுக்கும் போதும், உங்களுக்குள் இருக்கும் ஜீவசக்தி குறைந்து கொண்டேயிருக்கும்.
அதைத் தாண்டி, முடிந்த அளவிற்கு எல்லாவற்றிற்கும் "Yes" சொல்லக் கற்றுக் கொண்டு, முடிந்த அளவிற்கு உங்களிடம் வரும் எல்லா கோரிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்துப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுமளவிற்கு, ஜீவசக்தி உங்களுக்குள் பொங்க ஆரம்பிக்கும்.
இந்த நிமிடத்திலிருந்து "No" சொல்லும் குணத்திற்கும் "No" சொல்லிவிடுங்கள்.
‘தவிர்க்கவே முடியாத காரணங்களைத் தாண்டி, எதையும் மறுக்காமல், நீங்களே முன்வந்து மற்றவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆரம்பியுங்கள்.’
அது நிகழ, இந்த அதிசயம் நிகழக் காண்பீர்கள்.
அது... நீங்கள் தவிர்த்தாலும், உங்களுக்குள்ளிருந்து ஆனந்தமயமான உணர்வாக, ஜீவசக்தியானது பொங்கிக் கொண்டேயிருக்கும்.