KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/வாழ்வின் இடிபாடுகளையெல்லாம் ஈடுகட்டிவிடலாம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

வாழ்வின் இடிபாடுகளையெல்லாம் ஈடுகட்டிவிடலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சுமோ பயிற்சியில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்த ஒரு இளைஞர், இளம் துறவியாக அந்த ஜென் மடாலயத்திற்குள் நுழைந்தார். ஏற்கனவே அங்கு துறவிகளுக்குத் தலைவராக இருந்தவரும், சுமோ பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்தான்.

ஆனால் இளைஞர் பட்டரீதியாக தேர்ச்சி பெற்றவர் என்பதினால் ஆஸ்ரமத்திற்குள் மிடுக்கோடும் துடுக்குத்தனத்தோடும் திரிந்தார். அங்கிருந்தவர்களில் பலர் தன்னை விட வயதில் பெரியவர்களாக இருந்தாலும் கூட, சுமோ கலையில் தான் பெரியவன் என்ற ஒரு எண்ணத்தால், மட்டுமரியாதை சிறிதும் இல்லாமல் எல்லோரிடமும் மூர்க்கத்தனத்தோடு நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

அவரைக் கண்டாலே ஆஸ்ரமத்தில் உள்ள அனைவரின் வயிற்றிலும் பீதி கவ்வியது. ஆனால் துறவிகளின் தலைவர் மட்டும் எதற்கும் கலங்கவில்லை. பல நேரங்களில் அவர் தன்னுடைய தலைவர் என்ற உணர்வு சிறிதும்கூட இல்லாமல், அவரைக்கூட எடுத்தெறிந்து பேச ஆரம்பித்துவிட்டார், அந்தப் புது இளைஞர்.

இவை அனைத்தையும், துறவிகளின் தலைவர் அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தார். ஒருநாள் ஏதோ ஒரு குறையைக் காரணம் காட்டி துறவிகளின் தலைவரை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்ட ஆரம்பித்தார் புது இளைஞர்.

கோபம் கொப்பளிக்க இவர் திட்டிக்கொண்டிருந்தாலும் அவர் மகிழ்ச்சி பொங்கும் புன்னகையோடு, நடக்கும் அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

எரிந்து விழ வேண்டிய இடத்தில் இனிமையாய் புன்னகைத்துக் கொண்டிருந்தவரைப் பார்த்ததில் திட்டிக்கொண்டிருந்தவர் குழம்பியே போனார். அதற்கு மேல் திட்ட முடியாமல் திக்குமுக்காடி அமைதியாகி அங்கிருந்து சென்றுவிட்டார்.

அப்பொழுது அங்கிருந்த இன்னொரு சீடர் மூத்த துறவியிடம் "என்ன இது? எல்லோரையும் திக்குமுக்காட வைக்கும் அவரையே திக்கு முக்காடச் செய்துவிட்டீர்களே!" என ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.

மூத்த துறவி சிரித்துக்கொண்டே அந்தத் தெருவின் முனையில் இரு காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தை நோக்கிக் காண்பித்து "அங்கே பார்! புரியும்" என்றார்.

அடுத்தவர்கள் தரும் பரிசுகளான கோபம், வெறுப்பு ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் தனிநபரின் விருப்பமே!

அங்கே திரும்பிப் பார்த்துவிட்டு ஒன்றும் புரியாத விழிகளோடு "புரியவில்லையே!" எனக் குழப்பமாக சொன்ன சீடரிடம் கேட்டார். "அந்தக் காதலன், தன் காதலியிடம் ஏதோ ஒன்றைக்கொடுக்க முயற்சி செய்கின்றான். தெரிகின்றதா?"

"ஆமாம், அவன் கையில் ஏதோ ஒரு பரிசுப் பொருள் வைத்திருப்பது போல் தெரிகிறது"

ஏதோ கோபம் காரணமாக காதலன் எவ்வளவுதான்
கொடுக்க முயற்சி செய்தாலும், காதலி அந்தப்
பரிசுப்பொருளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.

மூத்த துறவி கேட்டார், "அந்தப் பெண் அந்தப் பரிசை வாங்காத வரை அந்தப் பரிசுப்பொருள் யாருக்குச் சொந்தம்?"

"நிச்சயம் அது அந்தக் காதலனுக்குத்தான் சொந்தம்" என்று சொன்னார்.

அப்போது... அந்த பதிலைக்கேட்டு சிரித்துக்கொண்டே சொன்னார்.

"அதேதான் சற்றுமுன் நிகழ்ந்த கதையிலும். அவன் மூர்க்கத்தனத்தையும், கோபத்தையும் என்னிடம் தருவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நான் அதை வாங்கிக்கொள்ளவேயில்லை.

அதனால்தான் நான் திக்குமுக்காடுவதற்குப் பதிலாக, அவன் திக்குமுக்காடிவிட்டான். அவன் கோபத்தினால் வெளிவந்த வார்த்தைகளை எனக்கு அளித்தபோது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவனுக்குத் தானே சொந்தம்.. இல்லையா?" என்றார்.

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால், உண்மையில் நாங்கள்தான் வம்பை விலைக்கொடுத்து வாங்குகிறோமா?"

"உண்மை மட்டுமல்ல, அதுதான் சத்தியம்.

உங்களைச் சுற்றியும், உங்களுக்குள்ளும் எது நடந்தாலும் அது நீங்கள் அதன் மீது வைத்திருக்கும் ஈடுபாட்டைப் பொறுத்தது. எதிர்பாராத வம்பில் ஒருவர் மாட்டிகொள்வது கூட அவர் அதில் காட்டும் ஈடுபாட்டைப் பொறுத்தது" என்று ஒரு தியான சத்சங்கத்தில் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் இப்படிக் கேட்டார்.

"எந்த வம்பிலிருந்தும் எப்படி விடுபடுவது என்றுதான் எந்த ஒரு மனிதரும் முயற்சி செய்வார். விஷயம் இப்படியிருக்க எங்களுக்கு ஏற்படும் வம்புகளுக்கு, எங்களின் ஈடுபாடுதான் காரணம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" என்று கேட்டார்.

அப்போது உதாரணத்திற்காக சொல்லப்பட்ட கதையிது... ஒரு கல்லூரி மாணவி தன் அக்காவிடம் சென்று புகார் செய்தாராம்.

"அக்கா... நான் எப்போது போய் வெளியே நின்றாலும் எதிர்வீட்டுப் பையன் என்னைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். அவன் ரொம்ப மோசம்"

> உங்களைச் சுற்றியும், உங்களுக்குள்ளும் எது நடந்தாலும் அது நீங்கள் > அதன் மீது வைத்திருக்கும் ஈடுபாட்டைப் பொறுத்தது.

அதற்கு அக்கா கேட்டார், "நீ எப்போது வெளியே சென்று நின்றாலும் அவன் உன்னைத்தான் பார்க்கிறான் என்பது உனக்கு எப்படி தெரிந்தது? அதுவும் வைத்தக் கண் வாங்காமல் பார்த்தான் எனும் புள்ளிவிபரத்தை உன்னால் எப்படித் தர முடிந்தது?"

தங்கையால் பதிலே பேச முடியவில்லை.

அக்கா சொன்னார், "நீ பார்ப்பதை இன்றிலிருந்து நிறுத்து. அவன் தன்னால் ஓய்ந்து

portrait of a young ascetic

உங்கள்
ஈடுபாட்டையும்
நீங்கள்
நினைத்தால்
இன்றே
இப்பொழுதே
மாற்றியமைக்க
முடியும்.

போவான். அதற்கு மேல் அவன் தொடர்ந்தாலும் அது உன்னை பாதிக்காது. ஏனென்றால் அது உனக்கு தெரியவே தெரியாது".

சில நேரங்களில் வெளிப்படையாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் நாம் காட்டும் ஈடுபாடுதான் நம்மை நோக்கி நிகழ்வுகளை ஈர்க்கிறது.

நல்ல காரியங்களில் வெளிப்படையான ஈடுபாட்டையும், வம்புக்காரியத்திற்கு மறைமுகமான ஈடுபாட்டையும் மனிதர்கள் காண்பிக்கிறார்கள்.

ஈடுபாட்டைச் சரிசெய்வதன் மூலம் வம்பு தும்புகளை ஈடுகட்டிவிடலாம். ஈடுபாட்டைச் சீரமைப்பதனாலேயே வாழ்க்கையின் பல இடிபாடுகளைச் சீரமைத்து விடலாம்.

மூத்த துறவியின் ஈடுபாடு 24 மணிநேரமும் சாந்த தன்மையை நோக்கியே இருந்தது.

புதிதாய் வந்த இளைஞரின் ஈடுபாடு முழுவதும் மூர்க்கத்தனத்தோடு இருந்தது.

உங்களுடைய ஈடுபாட்டையும் நீங்கள் நினைத்தால் இன்றே இப்பொழுதே மாற்றியமைக்க முடியும். ஈடுபாடு திரும்ப, இனிமை அரும்பும்.

ஆத்ம தியானம்

Time management பற்றி விளக்கிக் கொண்டிருக்கும்பொழுது ஒருவர் கேட்டார், “குழப்பம் என்றால் என்ன?”

ஒன்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு ஈடுபாடுகள் ஒரே நேரத்தில் மனத்தில் வெளிப்பட்டால் அதற்குப் பெயர்தான் குழப்பம்.

“தெளிவு என்றால் என்ன?”

ஒரே ஒரு பொருளில்மட்டும் ஈடுபாடு கொண்டிருந்தோமானால், அதற்கு மட்டும் உடலானது வேலை செய்தால் அப்போது பிறக்கும் உணர்வே தெளிவு.

சாதனையாளருக்கும் 24 மணி நேரம்தான். உங்களுக்கும் 24 மணிநேரம்தான் கையிலிருக்கிறது.

நல்ல ஈடுபாட்டைத் தேர்வு செய்து, ஒரு நேரத்தில் ஒரேஒரு ஈடுபாட்டைக் கையாளும் பக்குவத்தையும் நீங்கள் பெற்றுவிட்டால் 24 மணி நேரமும் ஒரேஒரு இலக்கை நோக்கி வாழ்க்கை பாயும். சாதனையின் தூரம் சட்டென்று நெருங்கிவிடும்.

ஒரே நேரத்தில் பல ஈடுபாடுகளை வரஅனுமதிப்பது... மூர்க்கம், கவலை, சோர்வு போன்ற உணர்வுகளில் உங்களை ஆழ்த்தும். பல ஈடுபாடுகளை வரவேற்கும் தன்மை 24 மணி நேரத்தை துண்டு துண்டாக்கிவிடும்.வாழ்க்கை முன்நோக்கிப்பாயாமல் சிதற ஆரம்பித்துவிடும்.

இப்பொழுதே உங்களுடைய ஈடுபாடுகளைப்பற்றி உள்ளும் புறமுமாக முழுமையாக ஆராய்ச்சி செய்யுங்கள்.

இன்றிலிருந்து ஒரு நேரத்தில் ஒரே ஒரு ஈடுபாட்டிற்கு மட்டுமே சக்தியளிப்பது என்று சங்கல்பம் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஈடுபாடும் உங்களை ஆனந்தம் நோக்கி, உற்சாகம் நோக்கி அழைத்துச் செல்லும் ஈடுபாடாக இருக்கிறதா? என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதைச் செய்தால் வாழ்வின் தடைகளையெல்லாம் ஈடுகட்டும் இனிமையான மனிதராகிவிடுவீர்கள்.

அதன் பிறகு... உத்வேகம் பொங்கும்... உற்சாக மனிதராவீர்கள்...