சாதனை சக்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தியானம் செய்பவர்கள்.
தியானம் செய்பவர்களெல்லாம் சாதித்தே தீருவார்கள்.
சாதிப்பவர்களெல்லாம் ஏதோ ஒரு வகையில் தியானம் செய்தவர்கள்தான்.
"மனித குலத்திற்கு ஒரு செய்தி மட்டும் சொல்லுங்கள் என்று சொன்னால், என்ன சொல்வீர்கள்?' என நிருபர் ஒருவர் என்னிடம் கேட்டபோது...
"இந்த உடலில், இந்தப் பிறவியில், இந்த மனத்தைக் கொண்டு ஆசை, அச்சங்களைக் கடந்த மிக உயர்ந்த உணர்வு நிலையை அடைவதுதான், ஒவ்வொரு தனி மனிதனுடைய நோக்கமாக இருக்க வேண்டும்.
அதற்காக அயராது உழைக்க வேண்டும்? இதுவே மனித குலத்திற்கான செய்தி'' என்று பதிலளித்தேன்.
பாவை கல்லூரியில் நடைபெற்ற நித்யானந்த ஸ்புரண தியான முகாமில் இளைஞர் ஒருவர் "சாதனைக்கும், தியானத்திற்கும் நேரடியாக தொடர்பு இருக்கின்றதா?" என்று கேட்டபோது,
"எதைச் செய்தாலும் அதை ஆழ்ந்த ஸ்ரத்தையோடும், ஈடுபாட்டோடும், பக்தியோடும் செய்ய ஆரம்பித்துவிட்டால் அது தியானமாகி விடும்" அது சாதனை நோக்கி உங்களை உந்தித் தள்ளிவிடும்.
வெறும் syllabusஐ மட்டும் படித்துத் தேர்ச்சியடையும் மாணவராக இருக்காதீர்கள். பாடத் திட்டத்தை மட்டும் நன்றாய் படித்து கோல்டு மெடல் வாங்குவது கூட சாதனையல்ல.
நீங்கள் படிக்கும் துறை சம்பந்தப்பட்ட பத்து பதினைந்து புத்தகங்களை வாங்கி உங்களை விசாலமாக்கிக் கொள்ளுங்கள். உங்களின் துறையில் மூழ்கி முத்தெடுங்கள்.

சாதனைகளுக்கு
எல்லாம்
மேலான சாதனை...
தினசரி செயல்களில்
கூட உற்சாகத்தை
எடுத்து வருவது.
ஒருவேளை நீங்கள் ஒரு இன்ஜினீயராக இருந்தால், உலகிலேயே மிகச் சிறந்த இன்ஜினீயர் நீங்கள்தான் என்று சொல்லப்படுமளவுக்கு அந்தத் துறையில் ஊறுங்கள். உயருங்கள்.
"இது ஒரு வாழ்க்கை தியானம். சாதனைக்கு வித்திடும் தியானம்"
சான்றிதழ்களுக்காக படிப்பதோ,
சம்பாதிப்பதற்காக வேலை செய்வதோ
வாழ்க்கையைச் சலிப்படைய வைத்து விடும்.
செய்யும் செயலின் மீது, படிக்கும் படிப்பின் மீது, வாழ்க்கையை வாழும் விதத்தின் மீது, ஆழமான காதல் இருக்க வேண்டும்.
ஆழமான உற்சாகத்தோடு, ஒருவரால் தன்னுடைய தினசரி செயல்களில் கூட ஈடுபாட்டை எடுத்து வர முடிந்து விட்டால்... தெரிந்து கொள்ளுங்கள், அவர் சாதனைகளுக்கெல்லாம் மேலான சாதனையைப் பெற்று விட்டார் என்று அர்த்தம்.
"மனதுக்குப் பிடித்த பெண்ணோடு வாழும் வாழ்க்கை கிடைத்து விட்டால், வாழ்வு சொர்க்கமாகி விடுமல்லவா? எனவே, எனக்குப் பிடித்த பெண்ணை என் வாழ்க்கைத் துணையாக வரவேண்டுமென ஆசிர்வதியுங்கள்" என வாலிபர் ஒருவர் ஜென் ஞானியிடம் கேட்டபோது, அவர் சொன்னார்.
"உங்களுக்குப் பிடித்த பெண்ணே வாழ்க்கைத் துணையாவதைப் போல உங்களுக்கு பிடித்த தொழிலே வாழ்க்கையாவது, மொத்த வாழ்க்கையையும் சொர்க்கமாக்கி விடும்"
ஒரு சர்வே ரிப்போர்ட் படி... தனக்கு விருப்பமில்லாத படிப்பைப் படித்தவர்களும், தனக்கு உற்சாகமளிக்காத தொழிலில் இருப்பவர்களும் தான் அதிக (மன அழுத்தத் திற்கு) டிப்ரஷனிற்கு உள்ளாகின்றனராம்.
மனிதர்கள் எப்போதெல்லாம் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கின்றார்கள் என்றெடுக்கப்பட்ட சர்வேயில், "ஒரு மனிதன் தனக்கு மிகவும் பிடித்த செயல்களைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது சந்தோஷமாயிருக்கின்றான்.
யார் யாருக்கெல்லாம் விரும்பிய தொழில் கிடைத்ததோ அல்லது கிடைத்த தொழிலின் மீது விருப்பம் வந்ததோ அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் வாழ்கின்றார்கள்." என்ற செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு சாதனையாளரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தாலும் இதைக் கண்டுபிடிக்க முடியும். அவருக்கு மிகவும் பிடித்த கனவையோ அல்லது கருத்தையோ நிஜமாக்க முயற்சித்திருப்பார். அது சாதனையாகியிருக்கும்.
தனக்குப் பிடித்த செயலை தன் வாழ்வாகவும், தொழிலாகவும் மாற்றியவர்களால்தான் எத்தனைத் தோல்விகள் வந்தாலும் சோர்ந்து விடாமல், தொடர்ந்து இலக்கு நோக்கி ஓடிக்கொண்டேயிருக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையைத் தொட்ட ஒருவருக்குள்தான் உற்சாகமானது ஓயாமல் ஊறிக்கொண்டே இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையைத் தொட்ட ஒருவராக உங்களை மாற்றக்கூடியதுதான் தியானம். தியானத்தை உங்கள் வாழ்க்கையின் பாகமாக மாற்ற மாற்ற, சாதனை உங்கள் வாழ்க்கையின் பாகமாக மாறிவிடும்.
> தனக்குப் பிடித்த செயலை தன் வாழ்வாகவும், தொழிலாகவும் > மாற்றியவர்களால்தான் எத்தனைத் தோல்விகள் வந்தாலும் சோர்ந்து > விடாமல், தொடர்ந்து இலக்கு நோக்கி ஓடிக்கொண்டேயிருக்க > முடியும்.
சாதனை தியானம்
செய்யும் செயலில் விருப்பமில்லாத மனிதர்தான் பலன்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். செய்யும் செயலில் ஆழ்ந்த காதலைக் கொண்டவருக்கு, செய்யும் செயலே அளவில்லா உற்சாகத்தைத் தருவதால், பலன்களை எதிர்பார்க்க வேண்டிய அவசியமிருக்காது.
இப்படிப்பட்டவரே கர்மயோகி.
பலனை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்வது எப்படி என்பது இப்போது புரிகின்றதா? இன்று உங்களின் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
உங்களாலும் சாதிக்க முடியும். செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... செய்யும் செயல் மீது ஆழ்ந்த விருப்பத்தை எடுத்து வருவதுதான்.
இதை உணர்ந்து செய்தால் இதுவே ஒரு தியானமாகி விடும். சாதனைக்காக சக்தியை உங்களுக்குள் பாய்ச்சும் வேலையை அதுவே பார்த்துக் கொள்ளும்.
