KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/சௌபாக்கியம் பெறுவீர்கள்...!Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

சௌபாக்கியம் பெறுவீர்கள்...!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அருமையான தியானம் ஒன்றோடு கட்டுரைக்குள் நுழைவோம்...

செலவில்லாத ஆன்மீக சாதனை இத்தியானம்.

“கண்களை மூடி செய்யப்போகும் இந்தத் தியானத்திற்கு உங்களின் கற்பனைச் சக்தியையே மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கண்களை மூடி நிமிர்ந்து அமருங்கள்.

உங்களுடைய வாழ்வில் நிகழ்ந்த ஆனந்தமயமான நிகழ்வுகளை உங்களின் உள்ளத்திற்கு எடுத்து வாருங்கள், அதை முழுமையாக வாழுங்கள்.

அப்போது பொங்கும் உணர்வில் ஊறிவிடுங்கள், அதில் கரைந்து விடுங்கள்.

ஆனால் ஆனந்தமயமான எண்ணங்களை விட்டுவிடுங்கள். ஆனந்தமயமான உணர்வுகளை உள் வாங்குவதற்கும் ஒவ்வொரு செல்லும் அதில் உருகுவதற்கும் முழுமையாக அனுமதியுங்கள்.

இது ஒரு மாபெரும் தியானம்”.

சிந்திப்பதிலேயே மனம் சீரழிந்துவிட்டால் தொலைந்து போன வாழ்வை மீட்டுத்தரும் படகாக இத்தியானத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம் இருக்கும்.

சிந்திப்பதற்கல்ல, உணர்வதற்கே ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும்.

சரி... கட்டுரைக்குள் நுழையலாம்.

வானப்பிரஸ்த சன்யாஸி ஒருவர் சத்சங்கம் ஒன்றில் என்னிடம் கேட்டார். “கற்பனைகளையும், கனவுகளையும் தவறு என்று சொல்கின்றீர்கள். ஆனால் கற்பனா சக்தியை (Visualisation) சில தியானங்களில் பயன்படுத்துகின்றீர்கள்.

Nithyananda

இப்படி கற்பனா சக்தியைப் பயன்படுத்தும்போது அது கற்பனைகளாகவும், கனவுகளாகவும் மாறி மீண்டும் மனத்தை அதன் பழைய குழப்ப நிலைக்கும், துக்கநிலைக்குமே கொண்டுவந்துவிடாதா?”

“மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஆனந்தத்தைத் தந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டேயிருந்தால் அது அடுத்தடுத்த எண்ணங்களாகக் கிளைவிட்டு சிக்கலைத்தான் உருவாக்கும்.

மனச்சுகம் எல்லாமே மனச்சுமையாக மாறும் சுபாவம் கொண்டவைதான்.

ஆனால் ஒரு ஆனந்தம் உங்களுக்குள் நிகழ்ந்தபோது, நீங்கள் உணர்ந்த அந்த உயர்ந்த உணர்ந்த நிலை மிக மிக முக்கியமானது.

அந்த நிகழ்வுகளை நினைப்பதுதான் மனச்சுகத்தில் ஆழ்த்தி மனச்சுமையை வரவைக்கும். ஆனால் உணர்வுகள் சுமையாக மாறாது.

அந்த நிகழ்வின்போது இருந்த உணர்வுக்குள் தியான உணர்வோடு நுழைவது, ஏற்கனவே இருக்கும் மனச்சுமையையெல்லாம் கூடக் கரைத்துவிடும்.

எனவே, உயர்ந்த உணர்வு நிலையை அடைவதற்கான ஒரு தோண்டியாக கற்பனா சக்தியைப் பயன்படுத்துவது எல்லாவிதத்திலும் சரியானதே, ஆரோக்கியமானதே”

உணர்வுகளுக்குள்
ஆழ்ந்து சென்று
வெளிவரக் கற்றுக்
கொண்டுவிட்டவர்,
சாதனைகளை
எல்லாம் தாண்டிய
சாதனையைத்
தொட்டுவிட்டார்
என்று அர்த்தம்.

என்று அந்த வானப்பிரஸ்த சன்யாஸிக்குப் பதில் சொல்லி முடித்தோம்.

உணர்வுகளுக்குள் ஆழ்ந்து சென்று வெளிவரக் கற்றுக்கொண்டுவிட்டவர், சாதனைகளையெல்லாம் தாண்டிய சாதனையைத் தொட்டுவிட்டார் என்று அர்த்தம்.

உங்களாலும் அந்தச் சாதனையை அடைய முடியும்.

அதற்குமுன் அருமையான தாவோ ஞானக் கவிதையொன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

“நீ நம்பாவிட்டாலும் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளின் ஒரு பகுதிதான் நீ! முரண்டு பிடித்தாலும், பக்தி கொண்டாலும் நீங்கள் இருவருமே என் அங்கங்கள் தான். உங்களுக்குப் பங்கமே வராது. பக்தி கொண்டால் பரவசமாயிருப்பாய் நீ ! முரண்டு பிடித்தால் துக்கவசமாயிருப்பாய் நீ! எப்படியிருந்தாலும் நீங்களிருவருமே என் பிள்ளைகள்தான் -இப்படிக்கு, கடவுள்.”

நீங்கள் துர்அதிர்ஷ்டசாலியாயிருந்தாலும்,
நீங்கள் முரண்டுபிடிப்பவராயிருந்தாலும்,
நீங்கள் எரிந்து விழுபவராயிருந்தாலும்,
நீங்கள் நோயாளியாயிருந்தாலும்,

எப்படியிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. கலங்க வேண்டியதில்லை. காரணம் நீங்கள் ஒவ்வொருவருமே பிரபஞ்சத்தின் பகுதிகள்தான். ஒவ்வொருவருமே இன்றைய நிலையிலிருந்து முழுமையாக மாறும் சக்தி கொண்டவர்கள் தான்.

நீங்கள் ஒவ்வொருவருமே பிரபஞ்சத்தின் பகுதிகள்தான். ஒவ்வொருவருமே இன்றைய நிலையிலிருந்து முழுமையாக மாறும் சக்தி கொண்டவர்கள் தான்.

சட்டென்று கியரை மாற்றுவது போல உங்களால் மன இறுக்கத்திலிருந்து உள்ளத்தை உருகவைக்கும் பேருணர்வுக்குள் நுழைய முடியும். நோயிலிருந்து ஆரோக்கியத்திற்குள் நுழைய முடியும். துர் அதிர்ஷ்டத்திலிருந்து அதிர்ஷ்டத்திற்குள் நுழைய முடியும்.

இந்த மகா தியானம் உங்களிடம் இருந்தால்!

பிரபஞ்சத்தின் உயர்ந்த உணர்விற்கு உங்களை அழைத்துச் செல்லும் அந்த மகா தியானமே, உங்களுக்கான தியானம்.

ஆத்ம தியானம்

நீங்கள் உங்களை உடல் என்று நம்புவது, ஒரு சொட்டு நீரானது தன்னை ஒரு முழுமையான தனி உருவமாக நம்பி வாழ ஆரம்பிப்பதற்குச் சமம்.

இன்றிலிருந்து இந்தத் தியானத்தை அடுத்த பத்து நாட்களுக்கு சிரத்தையோடு செய்து பாருங்கள். உடல் எனும் சொட்டு, பிரபஞ்சம் எனும் கடலைத் தொட்டுவிடும். எங்குமிருக்கும் ஆனந்த சக்தியோடு நேரடியான தொடர்பு கிடைத்துவிடும். இது ஏழைக்கு கோடீஸ்வர வீட்டுச் சம்பந்தம் கிடைத்ததற்குச் சமம்.

மகா தியானம்

மீண்டும் மீண்டும், "நான் இந்த உடலல்ல" என்று உடலில்லாமல், உடலைத்தாண்டி உணர்வு மய மாக கற்பனை செய்யுங்கள். ஆழ்ந்த பாவனை செய்து உடலில்லாமலேயே வாழ ஆரம்பியுங்கள்.

உங்களின் வாழ்வும், உணர்வும் விரிந்து பரந்து பொங்கிப் பிரவாகிக்க ஆரம்பித்தலே விகாசமடைதல் எனும் சௌபாக்கியநிலை. உடல், மனம் சம்பந்தப்பட்ட எல்லா சங்கடங்களிலிருந்து உங்களுக்கு விடுதலையைத் தந்துவிடும் மகாசக்தி படைத்தது இந்தத் தியானம்.

திரும்பத் திரும்பத் “நான் உடலல்ல, நான் உடலல்ல” என்பதை உணர்ந்து கொண்டேயிருங்கள், அப்படியே வாழ்ந்து கொண்டேயிருங்கள்... நீங்கள் உங்களின் வாழ்வில் சற்றும் எதிர்பார்த்திராத, உங்களால் கற்பனையே செய்து பார்த்திருக்க முடியாத புதிய மலர்ச்சிகளை இத்தியானம் உங்களுக்கு உருவாக்கித் தரும்.

தியானத்தை ஆழ்ந்து செய்யுங்கள், உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் போகும் அனுபவங்களை வைத்து ஒவ்வொரு புத்தகமே எழுதுமளவிற்கு அனுபவங்களைப் பெறுவீர்கள்.

பின் குறிப்பு :

உடலில் இருந்து உணர்வுக்கு எப்படி உங்களை நகர்த்துவது என்பதை அனுபவமாகத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முன்னோட்டம் தேவையென்று நீங்கள் எண்ணினால், கட்டுரையின் முதல் பகுதிக்குச் சென்று, அங்கு தரப்பட்டிருக்கும் தியானத்தை ஒருமுறை முயன்றுபாருங்கள். இந்த விகாச தியானத்திற்குள் நுழைவது மிக எளிதாயிருக்கும்.