KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/நீங்களும் அற்புதங்களை நிகழ்த்தலாம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

நீங்களும் அற்புதங்களை நிகழ்த்தலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

ஒரு சின்னக் கதை...

இருபது சீடர்களோடும், ஒரு சிஷ்யையோடும், இயங்கி வந்த ஜென் மடாலயத்தில் நிகழ்ந்த வித்யாசமான சம்பவமிது.

யாலினி என்ற அந்த சிஷ்யை மிகவும் அழகான யுவதியாயிருந்தாள்.

வாழ்க்கையின் எல்லாச் சிற்றின்பங்களையும் தாண்டி ஞானம் நோக்கிய தவ வாழ்க்கைக்காக வந்த கூட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்த 21 நபர்களைத்தான் தன் மடத்தில் சீடர்களாக அனுமதித்தார், அந்த ஜென் ஞானி.

அதில் ஒரேயொரு சீடன் மட்டும் யாலினியின் அழகில் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்தான்.

பல நாட்களாகத் தன் காதலை மூடிமூடியே வைத்திருந்தான்.

அவனுடைய நடவடிக்கைகளிலிருந்து அவனின் நிலையை உணர்ந்திருந்த யாலினி, தன்னுடைய உயர்ந்த உணர்வு நிலையால் அவனுடைய செயல்களை எதிர்க்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை.

மனத்தில் காதல், மோதல், மோகம், சோகம் போன்ற மன முடிச்சு கள் இல்லாத சுதந்திர நிலையில் இருந்த மற்ற சீடர்கள் யாலினியின் அழகால் துளிகூட ஈர்க்கப்படவில்லை. யாலினி ஒரு பெண் என்ற தனி உணர்வு கூட அவர்களிடமில்லை.

ஆனால் எப்படியோ தன் மனத்தில் ஒரு முடிச்சு விழ அனுமதித்தவன் மட்டும் மாயையில் விழுந்தான். அவனையும் மீறி அது அவனை ஆட்டிப்படைத்தது. அன்று மயக்கம் தலைக்கேற ஒரு ஓலையில் தன் காதலை வெளிப்படுத்தி யாலினியிடம் தந்துவிட்டான்.

மாலை வரை யாலினி எதுவும் சொல்லவில்லை.

மாலை சத்சங்கத்திற்கு எல்லோரும் வந்தமர்ந்து விட்டார்கள். அவனும் வந்திருந்தான். யாலினியும் வந்திருந்தார்.

மனமுடிச்சுகள் என்பவை பெரும்பாலும் நமக்கு நாமே போட்டுக்கொள்பவை தான். இவற்றைத் தாண்டும் கலையைத்தான் ஞான ரஸவாதம் என்கிறேன்.

எல்லோரின் முன்பு எழுந்து நின்ற யாலினி அவனைப்பார்த்து, “என்னைக் காதலிப்பது உண்மையாயிருந்தால் இப்போது என்னை வந்து கட்டித்தழுவு! உன்னுடைய கடிதத்தை ஏற்றுக்கொள்கிறேன்” என்றார். அப்போது அவனுக்குள் ஏற்பட்ட சங்கோஜத்தின் உச்சம் அவனுடைய மனமுடிச்சை அறுத்தெறிந்தது. மயக்கம் தெளிந்தது.

இது போன்ற எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்து மனமயக்கத்தைக் கலைப்பது ஜென் தியான முறைகளில் ஒன்று. யாலினி தந்த அதிர்ச்சியில் மயக்கம் கலைந்து சிரிக்க ஆரம்பித்தான். அந்தச் சிரிப்பு நிற்க வெகுநேரம் பிடித்தது. முழுமையில் மலர்ந்து விட்டார் அந்த ஜென் சீடர். அச்சீடனை வாட்டிய மன முடிச்சுகளைத்தான் சக்திக் கட்டிகள் Energy tumors என்றழைக்கிறேன்.

மனமுடிச்சுகள் என்பவை பெரும்பாலும் நமக்கு நாமே போட்டுக்கொள்பவைதான். இவற்றைத் தாண்டும் கலையைத்தான் ஞான ரஸவாதம் என்கிறேன்.

இன்றைய மனமுடிச்சுகள்தான் பின்னாளில் பிரச்சனைகள் எனும் கேன்சர்களாக வடிவெடுக்கின்றன. இவற்றிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் திறமை பெற்ற ஒருவரை வாழ்வின் எந்தவொரு எதிர்பாராத திருப்பத்தாலும் அசைத்துப் பார்க்கவே முடியாது.

தியான சத்சங்கத்தில் பெண்மணி ஒருவர் கேட்டார், “ நேற்றைய சொற்பொழிவில் கையில் இருக்கும் பூச்சியை சட்டென்று கீழே போடுவதைப்போல, மனத்திலிருக்கும் பிரச்சனைகளைக் கீழே போடலாம், எனச் சொன்னீர்கள். முதலில் கேட்கும்போது சாத்தியம் இல்லாததாகத்தான் தெரிந்தது. ஆனால், பயன்படுத்திய போதுதான் அதன் பலம் புரிந்தது.

இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி நான் பிடித்து வைத்திருந்த பிரச்சனைகளையெல்லாம் கீழே போட்டு விட்டேன். ஆனாலும் மனத்தை ஓயவிடாமல், ஒரு பிரச்சனை மட்டும் வாட்டுகிறது.

உள் பிரச்சனைகளுக்குத் தீர்வு தந்து விட்டீர்கள். வெளிப் பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?" எனக் கேட்டார்.

"என்ன பிரச்சனை சொல்லுங்கம்மா," எனக் கேட்டேன்.

"என் தம்பியே என்மேல் வழக்குப்பதிவு செய்திருக்கிறான். கணவர் காலமாகிவிட்டார். இந்தக் குழந்தையை விட்டுவிட்டு என் பிள்ளையும், மருமகளும் எதிர்பாராத விபத்தொன்றில் இறந்து விட்டார்கள்.

கைவிடப்பட்ட என் நிலையைப் பயன்படுத்தி என்னுடைய சொத்து முழுவதும் அவன் கைக்கு போவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டான்.

நாளைய கோர்ட் தீர்ப்பு அவனுக்குத்தான் சாதகமாகியிருக்கும் எனச் சொல்கிறார்கள்.

பேரனுக்கு சொத்தே இல்லாமல் போய்விடும் என்பதை நினைக்கும் போதெல்லாம் மனத்துக்குள் ஷாக் அடிக்கிறது. உடலே வெலவெலத்துப்போகிறது.

என்ன செய்ய...?"

"நாளைய தீர்ப்பை உங்களால் மாற்ற முடியுமா?" "அதெப்படி முடியும்?" "நீங்கள் கஷ்டப்படுவதால் அதிலிருந்து தப்பிக்க முடியுமா?"

கையில் இருக்கும் பூச்சியை சட்டென்று கீழே போடுவதைப்போல, மனத்திலிருக்கும் பிரச்சனைகளைக் கீழே போடலாம்

“நிச்சயம் முடியாது.”
“இல்லை, தப்பிக்க முடியும்”
“முடியுமா? எப்படி?”

“அங்கே பாருங்கள்” என நான் காண்பித்த இடத்தில் பேரக் குழந்தை ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருந்தான்.

“கஷ்டம் வரப்போவது இவனுக்கு. ஆனால் நான் கஷ்டப்படுகிறேன். இவன் ஆனந்தமாயிருக்கிறான்... என்ன இது?” என்று எழுந்த புது உணர்வுகள் அப்பெண்மணியை புரட்டிப்போட்டது.

portrait

மனரீதியாக
போட்டுக்
கொள்ளும்
முடிச்சுகளே,
மனப்பிடிப்புக்கு
காரணம்.

இதற்குப்புறம் நிகழ்ந்ததுதான் எல்லோருக்கும் மிகவும் ஆச்சர்யத்தைத் தரக் கூடியது.

அதுவரை அழுதுகொண்டிருந்த பெண்மணி, அந்த நிமிடத்திலிருந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்தச் சிரிப்பை அடக்க அவருக்கு வெகு நேரமானது.

கியர் மாற்றுவது போல, துக்கம் ஆனந்தமயமானது எப்படி? எப்படி இந்த அற்புதம் நிகழ்ந்தது.

பதில் ரொம்ப சிம்பிள்.

சிறுவனின் வாழ்வு நிலைப்படி அவனுக்கு வர இருக்கும் ஆபத்து பற்றி அவனுக்குத் தெரியாது. அதனால் சிறுவனின் மனமானது வர இருக்கும் ஆபத்தோடு தன்னை முடிச்சு போட்டுக் கொள்ளவில்லை. முடிச்சுபோட்டுக்கொள்ளாவிட்டாலும் எதிர்காலத்தில் வர இருக்கும் ஆபத்தை சந்திக்கப்போவதும் அவன்தான். ஆனாலும் அவன் நிம்மதியாயிருக்கிறான். அந்தப் பிரச்சனையை நேரடியாய் சந்திக்கப்போவது அப்பெண்ணல்ல என்றாலும், மனரீதியாய் போட்டு வைத்த சிறு முடிச்சு அப்பெண்ணை பாடாய்ப்படுத்தி விட்டது.

“என் மனத்தில் முடிச்சு விழுந்ததால்தான், நான் இவ்வளவு தவிக்கிறேன். முடிச்சு விழாததால் என் பேரன் துள்ளி விளையாடுகிறான். கஷ்டத்திற்குக் காரணம் வெளித் தொல்லை அல்ல. உள் முடிச்சுதான்” என்ற தெளிவு பிறந்த கணத்தில், அப்பெண்மணியின் மனமுடிச்சு அவிழ்ந்து விட்டது. இந்த நெகிழ்ச்சியில் “அட!

இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டேன்'' என சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

திகில் படங்களில் எதிர்பாராமல் திரையில் வரும் காட்சிகள்தான் வயிற்றைக் கலக்கி பீதியில் ஆழ்த்தி உங்களை சத்தமிட வைக்கின்றன.

அதேபோல் அப்பெண் பார்த்த எதிர்பாராத இன்னொன்று...

குழந்தையின் மனரீதியான முடிச்சுகளற்ற சுதந்திரநிலை.

திகில் உங்களைத் தீண்டுவது அஞ்ஞானம். சுதந்திரம் உங்களைத் தீண்டுவது ஞானம்.

திகில் உங்களைத் தீண்டுவதற்கு திரையரங்கு சென்று திரைப்படம் பார்ப்பது என்ற வாய்ப்பை நீங்கள்தான் உருவாக்கித் தருகிறீர்கள். அதேபோல் சுதந்திரம் உங்களைத் தீண்டுவதற்கான தியானச் சூழலையும் நீங்கள் தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

ஞானம் என்பது எதிர்பாராத தருணத்தில் நிகழும் ஒன்றுதான்.

மனிதர்களின் எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளும், அவற்றை அவர் புரிந்து கொள்வதில் தான் ஒளிந்திருக்கிறது.

குழந்தையின் மனரீதியான முடிச்சுகளற்ற சுதந்திர உணர்வு எப்படி அப்பெண்மணியையும் தொற்றிக் கொண்டதோ, அதேபோல் உங்களையும் பல அற்புதங்கள் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

அற்புதங்களைப் பெற முதலில், உங்களை வாட்டும் மனமுடிச்சுகளைப் பட்டியலிடுங்கள்.

பட்டியலிட்டு இது மனமுடிச்சு என்ற ஆழமான முடிவுக்கு வரும்போதே அது தானாகவே அவிழ ஆரம்பித்துவிடும். வாழ்வில் அடுத்தடுத்து வரும் ஏதோவொரு

> மனிதர்களின் எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளும், அவற்றை > அவர் புரிந்து கொள்வதில் தான் ஒளிந்திருக்கிறது. எதிர்பாராத தருணத்தில் உங்களுக்கும் அந்த அற்புதம் நிகழும் வாய்ப்பிருக்கிறது. சிரத்தையோடு செய்து பாருங்கள். ஆனந்தமயமாவீர்கள்.

ஆத்ம தியானம்

ஆத்ம தியானம்

‘க்வா... க்வா...’ என்று பிறந்தபோது பேச ஆரம்பித்து இன்று வரை பேசிக்கொண்டேயிருக்கிறீர்கள்.

உடல் ஓடிக்கொண்டேயிருந்தால், மனம் சோர்வடைந்து விடும், மனம் ஓடிக்கொண்டேயிருந்தால் உயிர் சோர்வடைந்துவிடும். வாயை மூடினால் கூட மனம் பேசுவதை நிறுத்துவதில்லை. தூங்கினால் கூட கனவில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

இதிலிருந்து உங்களுக்கு இளைப்பாறுதல் தேவை.

ஒவ்வொரு மனிதனின் உயிருக்கும் புத்துணர்ச்சி தேவை.

ஒரு நாளில் குறைந்தது அரைமணிநேரமாவது மனத்தை ஓய்வெடுக்க வைக்கும் “ஆத்ம அமைதி” தியானத்தைச் செய்யுங்கள்.

ஆத்ம அமைதி தியானம்

காலை எழுந்ததும் இந்தத் தியானம் செய்வது நல்லது.

முதுகெலும்பு, கழுத்து, தலை ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் இருக்குமாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்களின் உணர்வு முழுவதையும் இதயப்பகுதியில் ஒன்றாக்குங்கள்.

இவ்விடத்தில் ஆத்மாவிற்கான ஒரு ரகசிய நுழைவாயில் இருக்கின்றது.

11 நிமிடங்கள் விழிப்புணர்வு முழுவதையும் மார்புக்கு மத்தியில் ஒன்றாக்குங்கள், அடுத்த சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருங்கள்.

தொடர்ந்து செய்து பாருங்கள். சில நாட்களுக்குள்ளேயே பல நாள் மனச்சோர்வுகள் ஓடிப்போய்விடும். 24 மணி நேரம் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.