தியானப் பூச்செண்டு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- வீடு மனிதன் தங்கும் கோவில்.
- கோவில் கடவுள் தங்கும் வீடு.
- கடவுள் பிரபஞ்சம் தங்கியிருக்கும் ஊஞ்சல்.
- மனிதன் உலகில் வாழும் இன்னொரு உயிர்.
- உயிர் எல்லாவற்றிலும் இருக்கும் கடவுள் தன்மை.
- மெய்ஞானி உள்ளுலக ஆராய்ச்சியாளர்.
- விஞ்ஞானி வெளியுலக ஆராய்ச்சியாளர்.
- தியானி மெய்ஞான விஞ்ஞானி.
- தொழிலாளி தன்னை முதலாளியாக உயர்த்திக்கொள்ளத் துடிப்பாய் முடிவெடுக்காத அப்பாவி.
◆ முதலாளி முதலாளியான பின்னும் தனக்குத்தானே சுதந்திரம் தரத் தயாராயில்லாத அப்பாவி.
◆ கணவன் கணவனாக மாறிய நண்பனாயிருந்தால்கூட, இன்னும் நண்பராக மாறாதவர்!
◆ மனைவி மனைவியாக மாறிய பின்னும், இன்னும் தன் கணவனுக்கே தாயாக மாறாதவர்!
◆ நிஜ கணவன் மனைவி
நண்பனாக மலர்ந்த கணவன்
தாயாக மலர்ந்த மனைவி
◆ பில்கேட்ஸ் வெளியுலக புத்தர்!!!
◆ புத்தர் உள்ளுலக பில்கேட்ஸ்!!
◆ பதஞ்சலி யோக பிதா!
◆ புத்தர் தியான பிதா!
◆ சிவன் ஞான பிதா!
◆ கிருஷ்ணர் ஆனந்த பிதா!
◆ சைவ உணவு உடலுக்கு மட்டுமல்ல, மனத்துக்கும் நல்லது
◆ அசைவ உணவு மனத்துக்கு மட்டுமல்ல, உணர்வுக்கும் உற்சாகமானதல்ல
◆ உடல் இந்த முறை நீங்கள் அணிந்திருக்கும் சட்டை
◆ மனம் எத்தனை முறை நீங்கள் பூமிக்கு வந்தாலும் உங்களோடேயே வருவது.
◆ ஆத்மா
உடல் இறந்த பின்னும் வாழ்வது - மனம்,
மனம் இறந்த பின்னும் வாழ்வது - ஆத்மா!
◆ பிறப்பு காலை கண்விழிப்பது புதுபிறப்பு, பூமியில் பிறப்பது புதுபிறப்பு, ஏன்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு புது எண்ணத்திலும் புதிதாய் பிறக்கிறீர்கள்.
◆ இறப்பு இரவு தூங்குவதும் ஒரு இறப்புதான், உடலை விடுவது ஒரு இறப்பல்ல, அது இடைவேளை! மனம் இறந்தால், பழைய எண்ணங்கள் ஒழிந்தால் அது நிச்சயம் இறப்புதான்.
◆ வாழ்வு நிலையற்றது.
◆ நிலையானது மாற்றம்.
◆ உண்மை விளக்கப்பட முடியாதது.
◆ அன்பு
கிடைக்காதது.
◆ கிடைக்கக்கூடியது
ஆனந்தம்.
◆ சோகம் மனம் போடும் நாடகம்.
◆ ரோகம் உடல் போடும் நாடகம்.
◆ மோகம் வாழ்க்கை போடும் நாடகம்.
◆ தோல்வி வாழ்க்கையை எதிர்ப்பவர்களுக்குக் கிடைப்பது.
◆ அதிர்ஷ்டம் வாழ்க்கையோடு ஒன்றியவர்களுக்குக் கிடைப்பது.
◆ ஞானம் தன்னோடு ஒன்றியவர்களுக்குக் கிடைப்பது.
◆ தியானம்
இருக்குமிடத்தில்
அப்படியே இருங்கள்.
அடுத்த 21 நிமிடத்திற்கு
பாறை போல
சிறு அசைவுக்குக் கூட
இடம் தராதீர்கள்.
-இதைச் செய்யுங்கள்.
தியானம் நிகழும்.
அற்புதங்கள் நிகழும்.
◆ பேய்
ஒரு சாதாரண சக்தி,
நீங்கள் பயப்படாதவரை.
◆ ஜோக் நீங்கள்தான்!
◆ திகில் நீங்கள்தான்!
◆ ஆசீர்வாதம் நீங்கள்தான்!
◆ சாபம் நீங்கள்தான்!
◆ எல்லாம் நானா? எல்லாம் உங்களின் மனம்!
◆ ஆனந்தம்
ஆனந்தம்
ஒன்றுதான்.
அதில்
பல வகைகள் இல்லை.
இது புகுந்த இந்த நிமிடத்திலிருந்து
ஆனந்தமாயிருக்க முடியும்.
- இது நிகழ, கலையாத ஆனந்தத்திலிருப்பார்கள்.
◆ வரம்
பக்தி பொங்க
நன்றியுணர்வோடு
இறைவனிடம் கேட்டால்,
நீங்கள் விரும்பிக் கேட்பதை
தர மறுக்கவே மாட்டார்
இறைவன்.
சரணாகதியுணர்வோடு,
இறைவனிடம் நின்றால்
உங்களுக்குத் தரவேண்டியதைத்
தந்துவிடுவார்
இறைவன்.
பின்குறிப்பு:
எப்போதும்
மனிதனின் விருப்பம்
அவனின் தேவையைவிட,
பலமடங்குகள்
குறைவானதாகவே
இருக்கிறது.
⬥ ஞானம்
கடவுளிடம்
பிரார்த்திக்கிறீர்கள்.
தியானிக்கையில் கடவுளாகவே மாறுகிறீர்கள்,
எதைச் செய்யலாமென முடிவு செய்வது ஞானம்.
பிரார்த்தனை நேரம் கோடீஸ்வரன் கேட்கும்
பிக்ஷைக் காலம்.
நன்றி பொங்கும் நேரம் உங்களை
கோடீஸ்வரனாக்கும் அதிர்ஷ்டகாலம்.
பின்குறிப்பு :
வாழ்க்கையோடு
போராடுவது,
கடவுளோடு
போராடுவது,
அஞ்ஞானம்.
போராடுவதை
நிறுத்துவதே ஞானம்.
