ஆனந்த விழிப்புணர்வு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒவ்வொரு நொடியிலும் உயர்ந்த ஆனந்தமயமான உயர்வு நிலையில் வாழ்வதற்கான வாய்ப்புகள் மீண்டும், மீண்டும் நம்மை தொட்டுத்தொட்டுச் செல்கின்றன. இதை உணராதவர்கள்தான் துக்கத்திலேயே வாழ்கின்றார்கள்.
பாரசூட்டில் கட்டப்பட்ட கல் மேல்நோக்கிச் செல்ல முயற்சித்தாலும், புவியீர்ப்பு விசையானது அக்கல்லை கீழ்நோக்கி இழுத்துக் கொண்டேயிருக்கும்.
உங்களின் உணர்வு ஆனந்தம் நோக்கி உயர்ந்தாலும் மனமானது துக்கத்தை நோக்கி உங்களை இழுத்துக்கொண்டேயிருக்கும். எப்படி இதில் இருந்து விடுபடுவது?
இதற்கு பதில் கண்டுபிடிக்கும் முன், எல்லோருக்கும் உதவும் அர்த்தம் பொதிந்த உரையாடல் ஒன்றை இங்கு பகிர விரும்புகிறேன்.
ஜென்சீடன் : எது தியானம்?
மாணவன் : மீண்டும், மீண்டும் உங்களை ஆனந்தமயமான விழிப்புணர்வு நிலைக்கு எடுத்து வரும் எல்லாமே தியானங்கள்தான்.
ஜென்சீடன் : எது தியானமல்ல?
மாணவன் : துவக்கத்தில் உற்சாகத்தைத் தந்து கடைசியில் சலிப்பையோ, சோர்வையோ தரும் எதுவுமே தியானமல்ல. ஆசையால் தூண்டப்படும் செயல்களும் அச்சத்தால் தூண்டப்படும் செயல்களும் தியானமல்ல.
ஜென்சீடன் : எது ஞானம்?
மாணவன் : ஆசை அச்சம் என்ற இரண்டுமே
சம்ஸ்காரங்கள், எனர்ஜி வைரஸ்கள்.
இவற்றின் பெருக்கத்தை தன்னுள்
குறைப்பதும், இவற்றிடமிருந்து தன்னை
விடுபடுத்திக்கொள்வதும், இவற்றைக்
கூண்டோடு ஒழிப்பதும்தான் ஞானம்.

ஆசையால்
தூண்டப்படும்
செயல்களும்
அச்சத்தால்
தூண்டப்படும்
செயல்களும்
தியானமல்ல.
ஜென்சீடன் : எது ஆனந்தம்?
மாணவன் : எதையோ எதிர்பார்த்து ஓடாமல்.
வாழாமல், எதற்கோ பயந்து ஓடாமல்,
வாழாமல் தனக்குள் பொங்கும் ஆனந்த
விழிப்புணர்விலேயே லயித்திருப்பதும்,
“அந்த விழிப்புணர்வை
ஒவ்வொரு செல்லிலும்
ஒவ்வொரு சொல்லிலும்
ஒவ்வொரு செயலிலும் பாயச்செய்வதும்
ஆனந்தம்.”
ஜென்சீடன் : எது தவம்?
மாணவன் : மேற்சொன்ன உயர்ந்த நிலையில் வாழ்வதும் வாழவைப்பதும் தவம்.
தவம், தியானம், ஞானம் என்பதெல்லாம், தனித்தனியானவை அல்ல.
உயர்ந்த ஆனந்தமயமான உணர்வு நிலையில் வாழ்வதற்கு இவை மூன்றும் ஒருங்கே நிகழவேண்டும். உயர்ந்த உணர்வு நிலையில் வாழும் ஒருவருக்குள்ளிருந்து இவை மூன்றும் ஒருங்கே வெளிப்படும்.
இவரிடமிருந்து வெளிப்படும் பொங்கியோடும் ஆனந்த விழிப்புணர்வு சக்திக்கு எதையும் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு,
பொங்கியோட வேண்டிய ஆனந்த விழிப்புணர்வு தேங்கி நிற்க ஆரம்பிக்கும்போதுதான் ஆரோக்கியம் மங்க ஆரம்பிக்கின்றது, ஆனந்தம் மறைய ஆரம்பிக்கின்றது.
நம்முடைய உடலில் ஏழு முக்கியமான இடங்களில் இந்த ஆனந்த விழிப்புணர்வு செறிந்திருக்கின்றது. அவ்விடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்திமையங்கள் என்றழைக்கின்றோம்,
இதயத்திலிருந்து உடலிலுள்ள ஒவ்வொரு செல்லுக்கும் இரத்த ஓட்டம் பாய்கிறது என்று படித்திருப்பீர்கள்.
ஒவ்வொரு செல்லுக்கும் இரத்த ஓட்டம் பாய்வது போலவே சக்தியோட்டமும் பாய்கின்றது.
ஏழு சக்தி மையங்களில் ஏதாவது ஒரு சக்திமையம் பாதிக்கப்பட்டாலும், மந்தமானாலும் அந்தச் சக்திமையம் சம்பந்தப்பட்ட உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்படும். அந்தப் பாதிப்பைத்தான் நாம் நோய்களாக அனுபவிக்கின்றோம்.
எந்த ஒரு நாள்பட்ட நோயாக இருந்தாலும் அதற்குக் கீழுள்ள ஏதாவது ஒரு சக்திமையத்தில் ஏற்பட்ட சக்தி குறைபாடோ அல்லது சக்தி அடைப்போதான் காரணமாக இருக்கும்...
1. முதுகெலும்பின் நுனியில் உள்ள மூலாதாரம்.
2. தொப்புளுக்கு இரு அங்குலம் கீழேயுள்ள சுவாதிஷ்டானம்.
3. தொப்புளுக்கு ஒரு அங்குலம் மேலேயுள்ள மணிப்பூரகம்.
ஒவ்வொரு செல்லுக்கும் இரத்த ஓட்டம் பாய்வது போலவே சக்தியோட்டமும் பாய்கின்றது. 4. இதய மத்தியில் உள்ள அனாஹதம்.
5. தொண்டை குழியில் உள்ள விசுத்தி.
6. புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா.
7. உச்சந்தலையில் உள்ள சஹஸ்ராரம்.
இந்த ஏழு சக்கரங்களையும் உற்சாகமாய் இயக்கவைக்கும் உபாயம் அறிந்தவர்களுக்கு உபத்திரவமே இருக்காது. அவர் எப்போதும் மிக உயர்ந்த ஆனந்த விழிப்புணர்வு நிலையிலேயே இருப்பார்.

உங்களின் சுபாவம் ஆனந்தமயமானது. உங்களின் நோய்களையெல்லாம் குணமாக்கும் சக்தி உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள விழிப்புணர்வுக்குள் இருக்கின்றது. அதைப் பொங்கியோட அனுமதித்தாலே நோய்களெல்லாம் மறைந்து போகும். நாள்பட்ட நோய் என்பதே நாள்பட்ட சக்திக் குறைபாட்டால் வந்ததுதானே.
சக்திக் குறைபாட்டைச் சரி செய்ய அந்தந்தச் சக்தி மையத்தில் விழிப்புணர்வைப் பாய்ச்சினாலே போதுமானது. 'சின்மயானந்த தியானம்' இதற்கு நேரடியாக உதவும்.
சின்மயானந்த தியானம்
கண்களை மூடி, 'சுபாவத்தினாலேயே நீங்கள் ஆனந்தமயமானவர்' என்பதை உணர்ந்து ஆனந்தமயமான விழிப்புணர்வுக்குள் நுழையுங்கள்.
உடலில் எந்தப் பகுதியில் வேதனையோ, வலியோ, வியாதியோ இருக்கின்றதோ அந்த பகுதிக்கு அருகேயுள்ள சக்கரத்தில் ஆனந்தமயமான அதிர்வுகளை முழுமையாக உணருங்கள். ஆனந்தமயமான அதிர்வுகள் அங்கிருந்து உடல் முழுவதும் பரவுவதையும் ஒவ்வொரு செல்லும் ஆனந்தமயமாவதையும் முழுமையாய் உணருங்கள். குணமளிக்கும் சக்தி பொங்கிப் பாய்வதை உணர்வீர்கள்.
மேற்சொன்ன நுட்பத்தை ஒவ்வொரு நோய்க்குமான தனி தியானமாக செய்யலாம். ஆனால் சின்மயானந்த தியானத்தில் மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரையுள்ள ஏழு சக்கரங்களிலும் படிப்படியாக உங்களின் விழிப்புணர்வு முழுவதையும் ஒன்றாக்குங்கள்.
ஒவ்வொரு சக்கரத்திலும் குறைந்தது ஒரு நிமிடமாவது ஆனந்தமயமான விழிப்புணர்வு நிலையிலிருந்து கவனம் முழுவதையும் அங்கே ஒன்றாக்குங்கள்.
இந்த ஏழு சக்கரப்பயணம், ஆனந்தப் பயணம் மட்டுமல்ல. ஆரோக்கியப் பயணமும் கூட.
இத்தியானத்தின் சிறப்பம்சங்கள்
1. நாள்பட்ட நோய்களுக்கான அருமருந்து
2. சோர்வைப் போக்கும் உற்சாக நுட்பம்.
3. ஆனந்த சுபாவத்தைப் புதுப்பிக்கும் கல்பதரு.
