தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எதை உங்களுடைய வாழ்விலுள்ள பெரிய பிரச்சனையாகக் கருதுகின்றீர்களோ, அதைச் சரி செய்வதற்கு இந்தத் தியானத்தை நேரடியாகப் பயன்படுத்தலாம்.
பிரச்சனைக்குரிய இடம் எதுவோ, அங்கேயே அமர்ந்து இந்தத் தியானத்தைச் செய்யலாம். இல்லை பிரச்சனைக்குரிய நபரையோ, சூழலையோ மனத்திரைக்கு எடுத்துவந்து அந்த இடத்தில் நீங்கள் அமர்ந்திருப்பதாக பாவனை செய்தும் இந்தத் தியானத்தைச் செய்யலாம்.
பிரச்சனையோ, அந்த நபரையோ, அந்த இடத்தைப் பற்றியோ சிறிதும் சஞ்சலப்படாமல், கண்களை மூடி உங்களுக்குள் பொங்கும் உணர்வு மாற்றங்களை சமச்சீராக்குங்கள்.
தினம் 11 நிமிடம் செலவு செய்து உங்களுடைய வெளியுலகத்தையே மாற்றியமைக்கவல்ல, இந்த உணர்வு சமச்சீர் தியானத்தை செய்து வாருங்கள்.
“தியானம் செய்வதால் மழை வருவது மட்டுமல்ல... வாழ்வையே மாற்றியமைக்கலாம்” என்று சில வாரங்களிலேயே அனுபவப்பூர்வமாகச் சொல்வீர்கள்.
சிரத்தையோடு, முழுமையாய் செய்யுங்கள். ஏழே நாட்களுக்குள் பெருத்த முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.