KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/தியானம் செய்தால் மழைவருமா?Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

தியானம் செய்தால் மழைவருமா?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait of Om Swami

ஒரு அழகான ஜென் ஞானியின் கதை.

ஒரு நாட்டில் நீண்ட காலமாக மழை பெய்யவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் மழை பொழியாத ஒரு இடம் அது. பக்கத்து நாட்டில் வசிக்கின்ற ஒரு அபூர்வமான ஜென் ஞானியைப் பற்றிய செய்தி அந்த நாட்டிற்குள் பரவியது.

அந்த ஞானி இங்கு வந்தால் மழை பொழியும் என்கின்ற கருத்து பரவியது.

மக்கள் எல்லோரும் அரசரிடம் சென்று, பக்கத்து நாட்டில் இருக்கும் ஞானியை அழைத்துவ வர வேண்டினர்.

அதேபோன்று அந்த அரசர் பக்கத்து நாட்டிற்குச் சென்று, ஞானியை அழைத்தார். ஞானியும் அழைப்பை ஏற்று அரசரோடு வர ஒப்புக்கொண்டார். ஞானி அந்த ஊருக்குள் வந்து ஒரு அரைமணி நேரம் தியானம் செய்தார். தியானம் செய்து முடிந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது.

மழை ஊரையே நிரப்பியது.

மக்கள் அந்த ஞானியைச் சூழ்ந்துகொண்டு, “எப்படி மழையை வரவழைத்தீர்கள்? என்ன மந்திரம் செய்தீர்கள்? என்ன மாயம் செய்தீர்கள்? உங்களால் எப்படி மழையை வரவழைக்க முடிந்தது? இயற்கையையே ஆளும் கடவுளா நீங்கள்?” என்றெல்லாம் கேட்கத் துவங்கினார்கள்.

ஞானி மிக அழகாகச் சொன்னார்.

"இயற்கையை ஆளும் கடவுள் நான் அல்ல. மழையை வரவழைக்கவோ, செல்ல வைக்கவோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த விஷயம் ஒன்றே ஒன்று மட்டும் தான். எனக்குள் நடக்கும் சக்தி ஓட்டத்தை என்னால் சமச்சீராக்க முடியும்.

எனக்குள் நடக்கும் சக்தி ஓட்டத்தை என்னால் முழுமையாக்க முடியும்.

portrait

ஆனந்த
சக்தியால்
இயற்கையை முடிந்த
அளவிற்குக்
காப்பாற்றி
வைப்பவர்கள்
ஜீவன்முக்தர்கள்.

நான் இயற்கையை கட்டுப்படுத்தும் கடவுள் அல்ல. எனக்குள் நடக்கும் சக்தி மாற்றங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஞானி.

எனக்குள் நடக்கும் சக்தி மாற்றங்களை நான் தெளிவாக்கும் பொழுதே, சுற்றி இருக்கும் இயற்கையின் சக்தி மாற்றமும் தானாகவே தெளிவாகின்றது" என்று பதில் சொன்னார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இயற்கையைச் சமச்சீராக வைத்திருப்பதற்காகவே இப்படி ஞானிகள் பூமியில் பூத்துக்கொண்டே இருப்பார்கள்.

பூமி இப்போதும் உயிரோடு இருக்கின்றது என்றாலே தெரிந்துகொள்ளுங்கள்... இயற்கை வளத்தை மனிதர்கள் எவ்வளவுதான் சீரழித்தாலும், இயற்கையை சமச்சீராக வைத்திருக்க பல ஞானிகள் நாம் வாழும் இதே பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

இயற்கையை சட்டம்போட்டு சரிசெய்ய முடியாது. இயற்கையை ஜீவன்முக்தர்களால்தான் சரி செய்ய முடியும். சமச்சீராக்க முடியும்.

இயற்கையைக் கட்டுப்படுத்துவது ஜீவன் முக்தர்களின் வேலையல்ல.

அவர்களிடமிருந்து, அவர்களின் இருப்பினாலேயே வெளிப்படும் ஆனந்த சக்தியால் இயற்கையை முடிந்த அளவிற்குக் காப்பாற்றி வைப்பவர்கள் ஜீவன்முக்தர்கள்.

ஏற்கனவே ஆங்காங்கே பூமியை அழியவிடாமல் காத்து, பூத்துக்கொண்டிருக்கும் ஜீவன் முக்தர்களிடம் இருந்து நம்முடைய வாழ்விற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான கருத்து.... நம்மாலும், நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையோடு உறவாட முடியும். நம்மாலும் வாழ்வை, இயற்கையை சரி செய்ய முடியும்.

ஆத்ம தியானம்

ஆத்ம தியானம்

தியானம் செய்வதினால் மழை வரவழைப்பது மட்டுமல்ல... அதைத் தாண்டிய பல புதுமைகளையும் உங்களைச் சுற்றி நிகழ்த்த முடியும்.

கையால் ஒரு பொருளை நகர்த்துவது எப்படிச் சாத்தியமோ, அதேபோல் உங்களின் உணர்வால் சுற்றியிருக்கும் வாழ்க்கையில் மாற்றங்களை நிகழ்த்துவதும் சாத்தியம்.

அதனால்தான் அந்த ஜென் ஞானி தனக்குள் இருக்கும் சக்தியைச் சமச்சீராக்கும் பொழுது, இயற்கையான இந்தப் பிரபஞ்ச சக்தியும் சமச்சீராகி இயற்கையிலேயே இந்த வானம் பொழியத் துவங்குகின்றது. ஆகாயம் பூமியை வாழ்த்தத் துவங்கிவிட்டது.

அந்த ஜென் ஞானி இன்னும் ஆழமாக விளக்குகிறார், “இந்த இடத்தில் வந்து அமர்ந்தவுடன் என் மனத்திற்குள் ஏற்பட்ட எண்ணங்களையும், எண்ண ஓட்டங்களையும் ஆழ்ந்த அமைதியாக்கி, அந்த ஆழ்ந்த அமைதிக்குள் எடுத்துச்சென்று உடலுக்கும், எனக்கும் நடுவில் ஒரு இனிமையான, அன்பான, ஆனந்தமான ஒரு தொடர்பை ஏற்படுத்தினேன்.

என்னுள் ஏற்பட்ட உணர்வு மாற்றங்கள், என் உடலோடு மட்டும் நின்று விடாமல் இந்தப் பிரபஞ்சத்தில் உலகத்திற்குள்ளும் பாய்ந்து இந்த இயற்கையையும் சமச்சீராக்கியது” என்றார்.

உணர்வுகளை மாற்றி சக்தியோட்டத்தை மாற்றுவதால் மழை வரவழைப்பது மட்டுமல்ல, நாட்டை வளமாக்குவது மட்டுமல்ல, உங்களையே வளமாக்குவது சாத்தியம்.