உடலும், வாழ்வும் தித்திக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்களுக்கு உதவ ஒரு கூட்டமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
உங்களுக்கு உதவத்தான் உடல்கூட இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் விடுங்கள், பிரபஞ்சம் இயங்குவதே உங்களுக்காகத்தான்.
பெங்களூரு ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த அன்பரொருவர், மிகவும் பணிவாய் கேட்டுக்கொண்டார், "நான் மிகவும் மோசமாய் வாழ்ந்தவன். நானெல்லாம் இந்தத் தியான மண்டபத்திற்குள் தியானம் செய்யலாமா?"
"நோயாளி மருத்துவமனைக்குச் செல்லலாமா?" என திருப்பிக் கேட்டேன்.
"அவர்களுக்காகத்தானே மருத்துவமனை இருக்கிறது" என பதிலளித்தார். அப்போது அவரிடம் இந்த அருமையான கதையைச் சொன்னோம்...
ஜென் ஞானிக்கும், ஒரு வழிப்போக்கருக்கும் இடையே நிகழ்ந்த சம்பவமிது.
வழிப்போக்கர்: "இன்னும் எவ்வளவு காலம் நீங்கள் வாழ்வீர்கள்?" ஜென் ஞானி : "எழுபது வருடங்கள்."
வழிப்போக்கர் : "எழுபது வருடங்களுக்கப்புறம் எங்கே செல்வீர்கள்? என்ன செய்வீர்கள்?"
ஜென் ஞானி : "ஒரு குதிரையாகவோ, மயிலாகவோ பிறப்பேன்."
வழிப்போக்கர் : "அதற்கப்புறம் எங்கே செல்வீர்கள்?"

மருந்து
முதலில்
நோயாளிக்குத்தான்.
ஜென் ஞானி : "அதற்கப்புறமா... அனேகமாக பூமிக்கு வராமல் நரகத்திற்குச் சென்றுவிடுவேன் என நினைக்கிறேன்."
வழிப்போக்கர் : "நரகத்திற்கா!!! நீங்கள் எவ்வளவு பெரிய மகான்? எவ்வளவு நல்லவர்? நீங்களெல்லாம் ஏன் நரகத்திற்குச் செல்ல வேண்டும்!?"
ஜென்ஞானி : "நரகத்திலிருப்பவர்களுக்கு
தியானத்தைப் போதிக்க நான் முன்
வரவில்லை என்றால் வேறு யார்
வருவார்களாம்.
அவர்களை யார் காப்பாற்றுவதாம்..?
சொல்லுங்கள்..."
என்று ஜென்ஞானி பேசி முடிக்கையில் வழிப்போக்கர் உருகிவிட்டார். அவரின் உள்ளம் கரைந்துவிட்டது.
‘நல்லோர் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’ எனும் நம் நாட்டு வாக்கியத்தின் சாரத்தை உணர்ந்த வழிப்போக்கர், நன்றி பொங்கும் கண்ணீர் பெருக்கோடு ஞானியை வணங்கினார். வெளியே மழை கொட்டத் துவங்கியது! என அந்தக் கதை முடிவடைகிறது.
ஜென் கதையைக் கேட்டு முடித்த நம் அன்பருக்கு, வரும் போது இருந்த தாழ்மை உணர்ச்சி நீங்க, கைகளைக் கூப்பி வணங்கியபடி உரிமையோடு தியான மண்டபத்திற்குள் சென்று உட்கார்ந்தார். மருந்து முதலில் நோயாளிக்குத்தான்.
இன்னும் ஆழ்ந்து வரலாற்றை ஆராய்ந்து பார்க்கையில், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பல தியானங்களை பயன்படுத்தப் போகும் மனிதர்கள் இன்னும் உருவாகவேயில்லை எனத் தெரியவருகிறது.
அதேபோல் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் மனிதர்களுக்குத் தேவையான தியானங்கள் பலவற்றையும் அதே ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள். அதைத்தான் இன்றைய மக்களுக்கு பல இயக்கங்கள் எடுத்துத் தருகின்றன.
அப்படியென்றால் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள். "உங்களுக்காக ஒரு கூட்டம் எப்போதும் இயங்கிக்கொண்டேயிருக்கிறது. அந்த கூட்டம் உங்களின் பல முக்கியப் பிரச்சனைகளுக்கு, எப்போதோ சிந்தித்துத் தீர்வுகளைத் தந்துகொண்டேயிருக்கிறது" என்பது புரியவரும்.
நல்லவேளை, மனிதகுல வாழ்வை மனிதர்களின் கையில் மட்டுமே விட்டுவைக்கவில்லை. அப்படி மட்டும் விட்டு வைத்திருந்தால், எப்படி டையனோசர்கள் என்றோ பூமியில் இருந்து மறைந்துவிட்டனவோ அதேப்போல் மனித குலமும் மறைந்து போயிருக்க வாய்ப்பிருக்கிறது.
பூமியின் மீது ஓடியாடும் மனிதவாழ்வின் முக்கியமான பகுதிகளெல்லாம் ஏற்கனவே காப்பாற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள சில பகுதிகளை வைத்துக் கொண்டுதான் மனிதன் கரடிபொம்மை கூட விளையாடுவது போல வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறான். பெரிய வேடிக்கை இது.
அழகான சொற்றொடர் ஒன்று "நல்லவேளை உனது முக்கியமான வேலைகளை கடவுள் உன்னிடம் ஒப்படைக்கவில்லை. இரத்த ஓட்டம், நரம்பு இயக்கம், சுவாசம் என்ற வேலைகளை அவர் எடுத்துக்கொண்டு, யோசிப்பதை மட்டும் உன்னிடம் விட்டுவிட்டார்.
ஒருவேளை எல்லா வேலைகளையும் உன்னிடமே கொடுத்திருந்தால், அடுத்த
> "உங்களுக்காக ஒரு கூட்டம் எப்போதும் > இயங்கிக்கொண்டேயிருக்கிறது. அந்தக் கூட்டம் உங்களின் பல > முக்கியப் பிரச்சனைகளுக்கு, எப்போதோ சிந்தித்துத் தீர்வுகளைத் > தந்துகொண்டேயிருக்கிறது" ோரிரு நாட்களிலேயே அவரின் வீட்டுக்கதவை தட்டியிருப்பீர்கள்.
"என்னடா? ஏன் திரும்ப வந்தாய்?" எனக்கேட்டால்...
"கடவுளே! மன்னிச்சுகுங்க... ரொம்ப பிஸியா இருந்ததில் இதயத்தை தொடர்ந்து அழுத்த மறந்துவிட்டேன். உடல் செத்துவிட்டது" என்பீர்கள்.
இல்லை, "சாரி கடவுளே! நேற்று மூச்சுவிட மறந்துவிட்டேன்," என்பீர்கள்.

நன்றாக ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் புரியும், நம் உடலிலும், வாழ்க்கையிலும் நாம் இயக்க வேண்டிய பகுதி மிகக் குறைவாகவே இருக்கும்.
இது புரியாதவர்களுக்குதான்...
"வாழ்க்கை ஒரு பெரிய சாகசம்
உடல் ஒரு பெரிய சுமை" எனத்தெரியும்.
உங்கள் வாழ்வின் பல பகுதிகளை இயற்கையே முன்னின்று நடத்துகிறது. மனிதன் எவ்வளவு கெடுத்தாலும் முடிந்த அளவு இனிதாகவே செல்லும் வகையில்தான் உடலும், வாழ்வும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
முடிந்த அளவிற்கு இனிமையாக இயங்கும் உடலும், வாழ்வும் முழுமையாகத் தித்திக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.
உங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளும், சுதந்திரத்திற்குள்ளும் செயல்பட அனுமதிக்கப்பட்ட மனத்தை மட்டும் சரியாய்க் கையாளுங்கள். வாழ்வு தித்திக்க ஆரம்பித்துவிடும்.
உங்களுக்கு உதவ ஒரு கூட்டம் மட்டுமல்ல. பிரபஞ்சமே அதற்குத்தான் இயங்குகிறது என்பது புரியவரும்.

ஆத்ம தியானம்
ஒருமுறை, “பிரபஞ்சம் எங்கேயிருக்கிறது?” என ஒருவர் தியானமுகாமில் கேட்டார்.
அப்போது “நீங்கள் இயங்கும்போது, பிரபஞ்சம் உங்களுக்குள்ளே இருக்கிறது. நீங்கள் இயங்காத போது அது இல்லை. நிம்மதியாயிருங்கள்” எனச் சொன்னேன்.
பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் மையம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
உங்களின் வாழ்க்கையையே இயக்குவதாய் காட்டும் மனதை எழுப்பிவிடுங்கள். மனக்கண் திறக்கும் போது பெரிய அதிசயம் நிகழும்.
அது... மூடிய பூனை கண்ணைத் திறந்ததும் ஆச்சரியமாய் பார்க்கும், தன்னை சுற்றி ஒரு பெரிய உலகமே இயங்கிக் கொண்டிருக்கும் என்று.
அதேப்போல் மனக்கண் திறந்ததும் பிரபஞ்சமே உங்களை மையமாய் வைத்து இயங்குவதைக் காண்பீர்கள், இப்போது எதையெதையெல்லாம் துன்பங்கள், துயரங்கள் எனக் குறிப்பிடுகிறீர்களோ... அவையெல்லாம் இருக்காது.