KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/தியானத்தின் ஏழு பலன்கள்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

தியானத்தின் ஏழு பலன்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

1.மன அழுத்தத்திலிருந்து விடுதலை

மன அழுத்தத்திலிருந்து தியானம் உடனடி விடுதலையைத் தருவதால்தான் மேலை நாடுகளில் தியானத்திற்கு அமோக வரவேற்பு இருக்கின்றது.

ஜென் சீடர்: தியானம் எந்தெந்த நோய்களைச் சரிசெய்யும்?

ஜென் குரு: உன்னால் பெயரிட முடிந்த, உன்னால் பெயரிட முடியாத எல்லா நோய்களிலிருந்தும் வெளிவர தியானம் உதவும்.

2.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

தியானம் ஒருவருக்குள் நோய் எதிர்ப்புச் சக்தியை நேரடியாக அதிகரிக்கின்றது என்பதால்தான் நோயாளிகள்கூட தியானம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜென் சீடர்: நோய்கள் கூட தியானத்தில் சரியாவது எப்படி?

ஜென் குரு: நோய்களை சரிசெய்வது தியானத்தின் வேலையல்ல. இது உடலுக்குள் ஒளிந்திருக்கும் தன்னைத்தானே குணமாக்கிக் கொள்ளும் ஞானத்தன்மையை (Self Healing Intelligence) விழிப்புுறச் செய்கின்றது.

3. நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபடுதல்:

இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற நோய்கள் மனிதனுக்குள் உருவாக்கும் இம்சையான உணர்வுகளும், வேதனைகளும், தியானம் செய்த முதல் நாளிலிருந்து குறைய ஆரம்பிக்கின்றது.

ஜென் சீடர் : உடல் எடையைக் கூட தியானத்தில் சரிசெய்ய முடியுமா என்ன?

|

ஜென் குரு

| ஜென் குரு : மிக ஒல்லியான மனிதர்கூட உடலைக் கனமாக உணரலாம். நாலு அடி நடந்ததும் மூச்சு வாங்கலாம். குண்டாயிருப்பவர்கள் கூட சகஜமாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யலாம். இரண்டும் சாத்தியம். உடலைக் கனமாக உணர்வதற்குக் காரணமானது அதிக எடை அல்ல, குறை மனமே காரணம். எனவே மனிதருக்கு தேவையானது Weight reduction அல்ல, Ego reduction! ### 4) குடும்பச் சச்சரவுகள் சரியாகும்: பல குடும்பங்களில் இன்று கூட்டுத் தியானம் செய்வது பழக்கமாகி விட்டது. வீட்டில் தனி ஒரு நபராய் தியானம் செய்தால் கூட அது வீட்டிற்கு நிம்மதியைச் சேர்க்கின்றது. சச்சரவுகளை இருக்குமிடம் தெரியாமல் மறைத்து விடுகின்றது. |

| :---: | :--- | | உடலைக் கனமாக உணர்வதற்குக் காரணமானது அதிக எடை அல்ல, குறை மனமே காரணம். |

ஜென் சீடன்: தியானத்தினால் அருமையான குடும்பமாக என் குடும்பம் மாறி விடுமா?

ஜென் குரு: தியானம், முதலில் உங்களை அருமையானவராக்கும். உங்களைப் பார்த்து உங்களின் குடும்பமும் அருமையாகும். இப்படி பல குடும்பங்கள் வாழ ஆரம்பித்தால், நம் நாடே அருமையானதாகிவிடும்.

5) செல்வமும் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும்:

மலர் பட்டாம்பூச்சியை ஈர்க்கும்.
ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்.
ஞானம் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.

இம்மூன்றும் மஹாவாக்கியங்கள் மட்டுமல்ல. தியானம் செய்யும் ஒவ்வொருவரின் அனுபவ வாக்கியம்.

ஜென்சீடன்: அதெப்படி தியானம் செல்வத்தை ஈர்க்கும்?

ஜென் குரு: கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்காதே! செய்து பார், புரியும்.

6) மனத்தெளிவும், புத்திசாலித்தனமும் விழித்துக் கொள்ளும்:

தியானத்தினால் மனிதனின் புத்திசாலித்தனத்தை 6 மடங்குகள் அதிகரிக்க முடியும். அதைப்போல் மன ஒருமைப்பாட்டை (Concentration problem) 300% அதிகரிக்க முடியும் என்பதையும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்திருக்கின்றோம்.

ஜென் சீடன் : வெற்றிக்கு அவசியம் எது?

ஜென் குரு : முடிவெடுக்கும் திறன்.

ஜென் சீடன்: முடிவெடுக்கும் திறன் எப்படி வெற்றிக்கு அவசியமாகும்?

ஜென் குரு : உடலை ஒரு அங்குலம் நகர்த்துவதற்குக் கூட நீங்கள் முடிவு செய்தாக வேண்டும். தேவையான அளவு புத்திசாலித்தனமும், மனத்தெளிவும் விழித்துக் கொள்ளும் போதுதான் சரியான முடிவுகளை சடசடவென எடுக்க முடியும், சாதிக்க முடியும்.

தியானத்தினால் மனிதனின் புத்திசாலித்தனத்தை 6 மடங்கு அதிகரிக்க முடியும்.

7. நாடு நலம் பெறும்:

ஒவ்வொரு சொட்டால் ஒன்று சேரும் நீர்த்துளிதான் அருவியாகி ஆறாகின்றன, அங்கொன்றும் இங்கொன்றுமாக நீங்கள் தியாகம் செய்ய ஆரம்பித்தாலும் அது நல்லதே.

அமைதியும், ஆனந்தமும் கொண்ட உங்களைப் போன்ற மனிதர்கள் சேரச் சேர தியாகிகள் ஞான அருவியாவார்கள். அவர்கள் தான் ‘சத்யயுகம்’ எனும் ஆறாக மாறுவார்கள். அதில் எதிர்காலத்தில் நீச்சலடித்து ஆனந்தமாயிருக்கப் போகும் மீன் குட்டிகள்தான் உங்களின் பிள்ளைகள்.

ஜென் சீடன் :ஒருவர் தியானம் செய்தால் நாட்டுக்கு என்ன பலன்?
ஜென் குரு :ஒருவர் செக்கோவாவதால் நாட்டுக்கென்ன பயன்?
ஜென் சீடன் :நாட்டுக்கு அது கேடுதான்.
ஜென் குரு :கவலையை விடு. தியானம் செய்பவர்களால் நிச்சயம் நாடு
நலமாகும். இரண்டை மட்டும் எப்போதுமே ஒத்திப்
போடக்கூடாது. ஒன்று தியானம், இரண்டு ஆனந்தம்.

ஆத்ம தியானம்

தியானத்தின் முதல் நிலை பலன்களைத் தாண்டிய உயர்ந்த இரண்டு தியானத் தன்மைகளை பார்ப்போம்...

“பூரண தியாக மனப்பான்மையும், முழு பொறுப்புணர்வும் கொண்ட ஒருவரை என்னிடம் தாருங்கள். ஆயிரம் ஞானிகளை உங்களிடம் திரும்பத் தருகின்றேன்.”

1+1 = 2 என்பது வெளியுலகக் கணக்கு. 1+1 = 111 என்பது ஆன்மீகக் கணக்கு.

வெளியுலகில் இருவர் ஒன்றாய் சேர்ந்தால் சாதனை படைக்கலாம். உள்ளுலகில் இருவர் ஒன்றாய் கலந்தால் சகாப்தம் படைக்கலாம்.

1) முழுப் பொறுப்புணர்வு:

வெளியுலகில் சாதிக்க விரும்புபவர்களுக்கான அடிப்படை மூலதனம்.

2) பூரண தியாக மனப்பான்மை:

உள்ளுலகில் சாதிக்க விரும்புபவர்களுக்கு அடிப்படை மூலதனம்.

வெளியுலகில் பொறுப்பெடுத்தவர்கள் பணக்காரர்களாகவும், அறிவாளிகளாகவும், தலைவர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.

உள்ளுலகில் தியாக தன்மையின் உச்சியைத் தொட்டவர்கள் யோகிகளாகவும், தபஸ்விகளாகவும், மதகுருமார்களாகவும் மாறியிருக்கிறார்கள்.

இவ்விரண்டையும் தங்கள் வாழ்வில் சேர்த்தவர்கள்தான் ஞானகுருவாய் மலர்ந்திருக்கிறார்கள். சகாப்தம் படைத்திருக்கிறார்கள்.

புத்தர் 10,000 ஞானிகளை உருவாக்கியது அவரைச் சுற்றி எழுந்து நின்ற கைப்பிடியளவு முழுப்பொறுப்புணர்வு கொண்ட பூரணத் தியாகிகளை வைத்துதான்.

பூரணத் தியாகிகளாகவும், முழுப் பொறுப்பாளர்களாகவும் எழுந்து நில்லுங்கள்... முதலில் நீங்கள் ஞானியாவீர்கள்.

அடுத்து உங்களைக் கொண்டு ஓராயிரம் ஞானிகளை ஞானகுருவால் எளிதில் உருவாக்க முடியும்.