KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/யாரை நம்பலாம்? யாரை ஒதுக்கலாம்?Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

யாரை நம்பலாம்? யாரை ஒதுக்கலாம்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

யாரை நம்புவது? யாரை ஒதுக்குவது?

நம்முடைய உற்சாகமே போய் விடும்படி சிலர் பேசி வைத்து விடுகிறார்கள்.

எப்போதும் நம்பிக்கை தருபவர்களோ, சில நேரங்களில் நம்முடைய நம்பிக்கையைக் குலைத்துவிடும்படியும் பேசி விடுகிறார்கள்.

இவர்களை என்ன செய்வது?

உங்களுக்கான பதில் இங்கே...

சின்னக் கதை...

வீட்டின் பின்புறத்தில் இருந்த தோட்டத்தில், ஒரு பெரிய கல்லை, ஆயுதங்களின் உதவியோடு புரட்டிப்போடுவதற்கு தன்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தான் பன்னிரெண்டு வயதுச் சிறுவன் பாலா.

அவனால் முடியவில்லை, சோர்ந்து போய் தந்தையைத் திரும்பிப் பார்த்தான். தோட்டத்திலேயே அமர்ந்திருந்த பாலாவின் தந்தை, கேட்டார், "பாலா! உன்னால் ஆன எல்லா முயற்சியையும் நீ செய்தாயா?"

சிறுவன் சற்றே ஆச்சரியத்தோடு கேட்டான், "என்னப்பா இப்படிக் கேட்கிறீர்கள்? நான் என்னால் முடிந்த எல்லா முயற்சியையும் செய்துவிட்டேன்.

என்னுடைய எல்லா சக்தியையும் ஒன்று திரட்டித்தான் இந்த கல்லைப் புரட்டினேன்"

தந்தை “இல்லை” என்றார்.

ஆச்சரியம் பொங்க, "இன்னும் என்னிடமிருக்கும் எதை நான் பயன்படுத்தாமல் விட்டேன்!" என்று சிறுவன் யோசித்துக் கொண்டிருக்க...

portrait

யாரையும் நம்ப
வேண்டியதில்லை.
யாரையும் ஒதுக்க
வேண்டியதில்லை.

தந்தை கேட்டார், "உன்னுடைய எல்லா சக்தியையும் உபயோகித்ததாகச் சொன்னாயே... ஏன் என்னுடைய உதவியைக் கேட்கவில்லை?"

சிறுவனாய் இருந்தாலும் தந்தை சொன்ன வார்த்தைகளில் இருந்த வாழ்க்கைப் பாடம் சிறுவனை பெரிய மனுஷ சிரிப்பைச் சிரிக்க வைத்தது.

இந்தச் சிறுவன் செய்த இதே தவறைச் செய்பவர்கள்தான் சோர்வின் உச்சத்தையும், தேவையில்லாத சலிப்பையும் வாழ்வில் சந்திக்கின்றார்கள்.

யாரை நம்புவது? யாரை ஒதுக்குவது?

என்ற கேள்விக்குப் பதில்...

யாரையும் நம்ப வேண்டியதில்லை. யாரையும் ஒதுக்க வேண்டியதில்லை.

ஞானமடையாத மனிதர்களை நம்புவதால் எதிர்பாராத மன அதிர்ச்சி, இன்றோ நாளையோ ஏற்படுவது நிச்சயம்.

நம்பிக்கையையே ஆட்டங்கான வைக்கும் தடுமாற்றத்தை மற்றவர்கள் தந்தவிடுகின்றார்களே என்ற உங்களின் உணர்வு இன்றைய வாழ்வில் தடுக்க முடியாத ஒன்றுதான்.

'மனிதர்கள் இப்படித்தான்' என்ற முடிவுக்கு வந்து, மற்றவர்களின் வார்த்தைகளை, உதவியை, நாம் பெரிதாய் மதிக்கத் தேவையில்லை என்று ஒதுக்கும் முடிவும் விபரீதம்தான். இப்படி ஒதுக்க ஆரம்பித்து விட்டால் ஞானிகளையே ஒருவர் தன் வாழ்வில் இழந்து விட நேரிடும் அபாயம் உண்டு.

விளைவு நம் மொத்தச் சக்தியையும் ஒன்று திரட்டுவதற்காக வாழ்வில் வரும் குருநாதனையே கூட இழக்க நேரிடும்.

ஒரு ஆசிரியரின் உதவியில்லாமலேயே எல்ல மாணவர்களாலும் பட்டதாரிகளாகிவிட முடியாது. ஒரு தாயின் உதவியில்லாமலேயே எல்லாக் குழந்தைகளாலும் வளர்ந்துவிட முடியாது.

மனிதன் தன்னுடைய எல்லாச் சக்திகளையும் பயன்படுத்தாத வரையில் ஒன்று திரட்டாத வரையில் மற்றவர்களின் உதவிக்காக காத்திருக்கும் நிலைதான் இருக்கும்.

சில நேரங்களில் உற்சாகத்தையும், சிரிப்பையும் தருபவர்களே பல நேரங்களில் மாளாத சோர்வையும், துக்கத்தையும் தந்து விடுவார்கள். இவைதான் ஒவ்வொருவர் வாழ்விலிருந்தும் ஒதுக்கப்பட வேண்டியவை.

ஆனால் புத்திசாலிகள் யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்களின் முழு சக்தியையும் பயன்படுத்தும் ஜீவன் முக்தர்களாக மாறினாலே, அவர்களை மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் காப்பாற்றும் சக்தி பெற்றவர்களாகி விடுவார்கள்.

குழந்தைக்கு அன்புத்தாய் அவசியம்.
மாணவர்களுக்கு ஆசான் அவசியம்.
மனிதர்களுக்கு ஞானகுரு அவசியம்.

தியானம், தியானத்தைத் தரும் ஞான குரு... இவைதான் ஒவ்வொருவர் வாழ்விலும் நம்பிக்கைக்குரியவையாக மாற வேண்டியவை.

மனிதன் தன்னுடைய எல்லாச் சக்திகளையும் பயன்படுத்தாத வரையில் ஒன்று திரட்டாத வரையில் மற்றவர்களின் உதவிக்காகக் காத்திருக்கும் நிலைதான் இருக்கும்.

ஒருவர் தன்னுடைய சக்திகளையெல்லாம் ஒன்றாக்கும் அற்புதக் கலையான தியானத்தை வாழ்வில் சேர்ப்பதனாலேயே மனிதர்களால் பாதிக்கப்படாத ஜீவன் முக்த நிலையைத் தொட முடியும். தியானத்தைச் சேர்த்துப் பாருங்கள். உங்களின் மொத்தச் சக்தியும் ஒன்றாய்த் திரள ஆரம்பிக்கும்.

ஆத்ம தியானம்

icon

இந்தத் தியானத்தை நாற்காலியில் கால்களைத் தளர்வாகத் தொங்க விட்டபடி மட்டுமே அமர்ந்து செய்ய வேண்டும். தியானம் முடிந்த உடனேயே நிச்சயம் தூங்கச் சென்றுவிட வேண்டும்.

தியான நேரம் - 10 நிமிடங்கள் மட்டுமே.

நீங்கள் தீர்வு காண வேண்டிய குழப்பம், நபர், பிரச்சினை என எதுவாக இருந்தாலும் அதை உங்களின் மனக்கண் முன்னே எடுத்து வாருங்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கான உங்களின் மொத்தச் சக்தியையும் விழிக்க வைக்கும் தியானத்திற்குள் நுழைவோம்.

உடலின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் சக்தியடைப்பு சரியாவதனாலேயே ஒருவரிடம் ஏற்பட்டிருக்கும் மந்தமான மூளை இயக்கங்கள் விழிப்புக்குள் வரும். விளையாட்டு போல எதையும் சந்தித்து அதிலிருந்து வெளிவரும் ஞானத்தையும், சக்தியோட்டத்தையும் உயிர்ப்பிக்கும் முதல்படி இது.

முதல்படி (7 நிமிடங்கள்):

நாற்காலியில் கால்களைத் தளர்வாகத் தொங்கவிட்டு, கால்களை நிலத்தில் ஊன்றி, கண்களை மூடி அமர்ந்து நீங்கள் தீர்வு காண வேண்டியவற்றை மனக்கண்ணில் எடுத்து வாருங்கள்.

அதிலிருந்து உங்களை மீட்டெடுக்கக் கூடிய ஞானமும் சக்தியோட்டமும் உங்களுக்குள் மலர வேண்டும் என்று ஆழமான சங்கல்பத்தோடு இந்தப் படியைச் செய்யலாம்...

சுண்டு விரலிலிருந்து அடிவயிறு உட்பட, காது மடல் வரை உள்ள உடலின் ஒவ்வொரு பகுதியையும் முழுமையாகச் சுருக்குங்கள். தொடர்ந்து 7 நிமிடங்கள் சுருக்கி விட்டு நிறுத்தி விடலாம்.

இரண்டாம்படி (3 நிமிடங்கள்):

அடுத்த மூன்று நிமிடங்கள் உங்களுக்குள் பொங்கும் உணர்வை நிம்மதியாக, சாட்சியாகப் பார்த்தபடி அமர்ந்திருங்கள்.

இதற்குப் பின் உறங்கச் சென்று விடலாம். தொடர்ந்து ஒரே ஒருவாரம் செய்து பாருங்கள். இந்தச் சிறிய தியானம் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மூளையை சுறுசுறுப்பாக்கும் சக்தியோட்டம் பொங்க ஆரம்பிக்கும்.

Portrait