குற்ற உணர்வை விட்டாலே குதூகலமாவீர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சின்ன வயதில் குழந்தைகள் விளையாடும்போது தங்களுக்கு மிகவும் பிடித்த பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது அம்மா குழந்தையிடம் வந்து, 'அப்பா! சாப்பிட வாப்பா' என்று அழைத்தால், 'வேண்டாம்' என்று அந்தக் குழந்தை சொல்லும்.
ஆனால் அதையும் மீறி குழந்தையைக் கட்டாயப்படுத்தி, கையிலிருக்கும் பொம்மையை இழுத்தால் போதும், "எனக்குப் பொம்மைதான் வேண்டும். நீ செத்து ஒழி" என்று நம்மை அடிக்கக்கூட தயங்காது.
ஏனென்றால் அந்த நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு அந்த அம்மாவைவிட, பொம்மைதான் முக்கியமாகத் தெரிந்தது. ஆனால் வளர்ந்த பிறகு யாரும் சொல்லத் தேவையில்லை. வளர்ந்த பிறகு புரியும், "பொம்மையை விட அம்மா நிறைய விதத்தில் உதவி செய்வார்கள்" என்று.
அந்தக் குழந்தை சிறிது விபரம் தெரிந்த பிறகு, "ஐய்யோ எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறோம். நான் எவ்வளவு மோசமானவன். பெற்ற தாயைப் பார்த்து இப்படி பேசினேனா?" என்று வருந்தத் துவங்கினால் என்ன ஆகும்.
இப்போது என்ன செய்ய வேண்டும். 'குற்ற உணர்ச்சியை உருவாக்குவதனால் பிரயோஜனமில்லை. அப்போது இல்லாத ஒரு புத்திசாலித்தனம் இப்போது வளர்ந்திருக்கிறதே' என்று ஆனந்தப்பட வேண்டுமே தவிர, அப்போது செய்த நிகழ்ச்சிகளுக்காக வருத்தப்பட வேண்டிய அவசியம் தேவை இல்லை.
குற்றவுணர்வு என்பது வளர்ந்துவிட்ட புத்திசாலித்தனத்தை வைத்து, கடந்துபோன வாழ்க்கையை நினைத்து நொந்துகொண்டு இருப்பது.
ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு சத்தியம், குற்றவுணர்வினால் மட்டும் நல்லவனாக மாறிவிடலாம் என்று தயவு செய்து நினைக்கவே

நினைக்காதீர்கள். ஒருவர் என்னிடம் வந்தார், “நான் சிகரெட் பிடிக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி என்னிடம் ஆழமாக இருக்கிறது. ஆனாலும் சிகரெட் பிடிப்பதை நிறுத்தவே முடியவில்லை” என்று சொன்னார்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்...
குற்றவுணர்ச்சி ஆழமாக ஆழமாக... அந்தச் செயலை, உங்களால் நிறுத்தவே முடியாது.
காரணம் என்னவென்றால், அந்தக் குற்றவுணர்வே அந்தச் செயலை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும். சிகரெட் பிடிக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியே, அந்தக் குற்றவுணர்ச்சி மேலே வரும்போதெல்லாம் சிகரெட் பிடித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகப்படுத்தி விடும்.
எந்த ஒரு செயலையும் செய்யும்போது யோசிக்காமல், ‘செய்த பின்பு யோசித்தல்’ என்பது போஸ்ட் மார்ட்டம் செய்வது மாதிரி. இந்தக் குற்ற உணர்ச்சி போஸ்ட்மார்ட்டம் செய்வதற்குச் சமம்.
இறந்து போனவரின் உடலை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? அதிக பட்சம் பார்த்து, பார்த்து துக்கப்பட முடியும். இப்படி ஆகிவிட்டதே என்று கதறி அழ முடியும்.
இதனால் தீர்வு கிடைக்கப் போகிறதா?
இல்லை மீட்டெடுக்கத் தான் முடியுமா? இனி என்ன செய்ய முடியும்? எப்படி இறந்தார்? என்று வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
குற்ற உணர்ச்சியும் அது போன்றதே!
குற்ற உணர்ச்சி என்பது Updated intelligence-ஐ வைத்து, கடந்த கால நிகழ்ச்சிகளைத் திரும்பிப்பார்க்கும் செயல். அப்போது நமக்குள் ஏற்படுகின்ற விஷயம்தான் குற்ற உணர்ச்சி.
மனிதனாயிருப்பதற்குத் தேவையில்லாத ஒரு உணர்ச்சி 'குற்றஉணர்ச்சி'.
குற்றஉணர்விலிருந்து ஒருவர் தன்னை விடுவித்துக்கொள்வது தியானம். மற்றவர்களைக் குற்றஉணர்ச்சியில் ஆழ்த்தாமல் இருப்பது மிகப்பெரிய சேவை.
ஆத்ம தியானம்
வாழ்வின் தரத்தை உயர்த்த...
ஒழுக்கம் என்பது என்னவென்றால், தன்னுடைய அனுபவங்களை வைத்து, தன்னுடைய வாழ்க்கையைத் தெளிவாக நடத்துவது. அதைத்தான் நீதி நெறி என்று சொல்கிறோம்.
தனக்கு ஆனந்தம் தருவதும், சுற்றி உள்ளவர்களுக்கு ஆனந்தம் தருவதும் எதுவோ, அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதை வாழ்வதுதான் நீதிநெறியோடு வாழ்வது.
பலநேரத்தில் பார்த்தீர்களென்றால் நீதிநெறி என்ற பெயரில் நம் வாழ்க்கையையே துக்கத் திற்குள் ஆளாக்கிக் கொள்கின்றோம். பெரும்பாலான நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தை திணிப்பவர்களைப் பார்த்தீர்களென்றால் அவர்கள் வாழ்க்கை இரட்டைத் தனமாக இருக்கும்.
உங்கள் வாழ்க்கையில் தெளிவைக் கொடுப்பவர்கள் மட்டும்தான், அவர்கள் வாழ்க்கையிலும் தெளிவை வைத்திருப்பார்கள். தெளிவைச் சேர்ப்பவர்களை மட்டும்தான் வாழ்வில் சேர்க்கவேண்டும்.
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார், "மனித மனதை ஆழ்ந்த கருணையோடு அணுக வேண்டும் என்று ‘சரியாக இரு’, ‘நல்லா இரு’, ‘ஒழுங்கா இரு’என்று சொல்வது ரொம்ப எளிது. ஆனால் அதற்கான நுட்பத்தைத் தருவதுதான் கடினம்." ஒழுங்காய் இரு என அறிவுரை வழங்குவதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சொல்பவர்களெல்லாம் அதைச் செய்கிறார்களா? என்று பார்த்தால் மிகப்பெரிய கேள்விக்குறியில்தான் முடிகின்றது.
உண்மையில் செய்யத் தயாராக இருப்பவர்கள்தான் மற்றவர்களுக்கு நல்லது சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்களால்தான் தன்னைப் போன்று மற்றவரையும் கருணையோடு அணுக முடியும்.
கட்டளையிட்டால் கண்ணீர் வரும்.
கற்றுக்கொடுத்தால் களிப்பு மிகும்.
கட்டளையிடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து, கற்றுக்கொடுப்பதற்கு துவக்கப்புள்ளி வைத்தால் உங்களுக்குள்ளேயும், மற்றவர்களுக்குள்ளேயும் குற்றஉணர்வே எழாத குதூகல உணர்வு பொங்க வாழ்வாங்கு வாழ்வீர்கள். குற்றஉணர்வில்லா தூய நிலையே ஜீவன் முக்தி.
குற்றஉணர்வை உள்ளேயும், வெளியேயும் உருவாக்குவதை விட்டாலே குதூகலம் பொங்க வாழ ஆரம்பிப்பீர்கள். ஜீவன் முக்தியை வாழ்வீர்கள்.