வாழ்வே திருப்தியமாகும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒருமுறை ஒரு அம்மா ஆஸ்ரமத்திற்கு வந்திருந்தார். "எல்லோருக்கும் எவ்வளவு செய்திருக்கிறேன். 20 வருடம் ஓடாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்ன பயன்?
ஏதோ நேற்று வந்தவள். அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். என்னை ஏதோ மூன்றாம் நபரைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். இத்தனை நாள் நான் அவர்களுக்குச் செய்த உதவிக்கு என்ன பயன்?" என்று கேட்டார்.
அப்போது சொன்னேன், "அம்மா? இத்தனை வருடங்கள் நீங்கள் அவர்களுக்கு உதவியிருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். அப்போது குறைசொல்லவில்லை. ஆனால் தற்போது அவர்களைப் பற்றி குறைசொல்வதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள்...
விடை புரியும்!" என்று சொன்னேன்.
மற்றவர்களின் கவனத்தை நாம் பெற நினைப்பது ஏன்? என்பதை ஆழ்ந்து பார்த்தோமானால் "நீ புத்திசாலி, நீ மிகவும் நல்லவன். நீதான் ஆபாத்பாந்தவன்" என்ற புகழ்ச்சியான சில வார்த்தைகளுக்காகத்தான்.
மேலும் "நீ எதற்குமே லாயக்கில்லை, உருப்பட மாட்டாய், நீ தரித்திரம்" என்பது போன்ற அவச் சொற்களை வாங்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதும் புரியும்.
புகழ்ச்சியான வார்த்தைகள் கிடைக்கும் போது நாம் சந்தோஷம் அடைகின்றோம். இகழ்ச்சியான வார்த்தைகளைக் கேட்கும் போது கோபமும், வெறுப்பும் கொள்கிறோம். இப்படி பல ஆயிரம் பேர் நமக்குக் கொடுத்த மதிப்பெண் பட்டியலை எடுத்துக் கொண்டு வரவு, செலவு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதனால் தான் நம் வாழ்க்கை நம் கையில் இல்லை. நம் மகிழ்ச்சி நம்மிடம் இல்லை.

புகழ்ச்சியான
வார்த்தைகள்
கிடைக்கும் போது நாம்
சந்தோஷம்
அடைகின்றோம்.
இகழ்ச்சியான
வார்த்தைகளைக்
கேட்கும் போது
கோபமும், வெறுப்பும்
கொள்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் வாழாத வாழ்க்கையைப் போலித்தனமாகப் பாவித்துக் கொண்டிருக்கிறோம்.
இதனால் நம் வாழ்க்கை என்பது ஒரு சீட்டுக்கட்டால் உருவாக்கப்பட்ட கோபுரம் போலாகிவிட்டது.
நாம் ஒவ்வொருவரிடமும் அபிப்பிராயம் என்னும் சீட்டு வாங்கி, அதை ஒன்றின் மீது ஒன்றாக பொறுமையாக அடுக்கி, மனம் எனும் கோபுரத்தை கட்டுகின்றோம்.
ஒரு மகன், அம்மா சொன்னதைக் கேட்டு நடந்தால் 'ஒழுங்கான பையன்' என்று ஒரு சீட்டு.
மாமியார் சொல்வதை மருமகள் கேட்டால் 'நல்ல மருமகள்' என்று ஒரு சீட்டு.
சொத்துப் பிரிக்கும் போது கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் 'நல்லவன்' என்று ஒரு சீட்டு.
இப்படிப் பல சீட்டுக்களை வாங்கி வாங்கி, 'என் வாழ்க்கை' என்னும் கோபுரத்தைக் கட்டுகின்றோம்.
இவர்களில் யாராவது ஒருவரின் கருத்து மாறும்போது, மொத்தக் கோபுரமும் சரசர வென்று கீழே விழுந்து விடுகின்றது. மனமுடைந்து போகின்றீர்கள்.
ஒரே ஒரு சீட்டை உருவினால் கூட மொத்த கோபுரமும் தரை மட்டம்தான்.
மற்றவர்கள் நம்மைப்பற்றிச் சொல்லும் தவறான அபிப்பிராயங்கள் நம்மை உலுக்கிப்போடுவதன் ரகசியம் இது தான்.
நீ மோசமானவன், உதவாக்கரை, ஏமாற்றுக்காரன் என்று யாராவது சொன்னால் போதும், அவர்கள் சொன்னது உண்மைதான் என்று உடனே கோபப்பட்டோ, நொந்து போயோ நிரூபித்து விடுவோம்.
இந்த இடத்தில்தான் மன அழுத்தம் அல்லது மன இறுக்கம் உருவாகிறது. இதனுடைய பக்கவிளைவுதான் Hysteria போன்ற மன நோய்கள்.
உண்மையில் நமது அன்பு, காதல், பாசம் எல்லாமே திருவோடுகா ஏந்திய கதை தான்.
நாம் மகாராஜாக்கள், மகாராணிகள் என்ற உண்மை தெரியாமலேயே ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முன் நின்று பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இதில் சில வேடிக்கையான விஷயங்களும், நடைபெறுவது உண்டு.
அதில் ஒன்று... மாமியாரும், மருமகளும், கணவனும், மனைவியும், காதலனும் காதலியும் ஓயாது சண்டை போட்டாலும் அவர்கள் பிரிந்து விடுவதில்லை. சண்டையின் உச்சத்தைப்பார்த்தால் ஏதோ பிரிந்து போவதைப்போன்று தோன்றும். ஆனாலும், ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியவே மாட்டார்கள்.
காரணம், இது மாதிரியான சண்டைகள்தான் அவர்களிடையே சலிப்பு உச்சத்திற்குச் சென்று விடாமல் முடித்துக்கொள்ளுகிறது.
சண்டையின் மூலம் மேலும் மேலும் ஒருவர் மீது இன்னொருவர் அதிகக் கவனம் செலுத்த இந்தச் சண்டைகள் மிகவும் உதவியாக இருப்பதால் சண்டைப்போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
அது ஏதோ ஒரு வகையில் சுவையளிப்பது போன்று மக்களுக்கு தோன்றக்காரணம் இது தான்.
> சண்டைகள்தான் அவர்களிடையே சலிப்பு > உச்சத்திற்குச்சென்று விடாமல் முடித்துக்கொள்ளுகிறது.
இப்படி கவனத்தை எதிர்பார்ப்பதுகூட ஒரு வகையான போதைதான். இந்த போதை சிலருக்கு செயற்கையான சக்தியைக்கொடுக்கலாம்.
நூறு பேர் நம்மைக் கவனித்தால் தெருவில் அவர் ஒரு முக்கியமான ஆள்.
ஆயிரம் பேர் கவனித்தால் அவர் ஒரு பிரமுகர்.

பத்தாயிரம் பேர் நம்மைக் கவனித்தால் நாம் ஒரு வி.ஐ.பி...
ஐம்பதாயிரம் பேர் கவனித்தால் அவர் ஒரு தலைவர்... ஹீரோ.
ஆனால் இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தால் அவர் ஹீரோவாக இருக்க முடியாது.
ஜீரோவாகத்தான் இருக்க முடியும். உருக்குலைந்த சீட்டுக்கட்டுக் கோபுரம் போல மனம் உடைந்து போகும்.
‘மற்றவரின் நன் மதிப்பைப் பெறுவது’ ஒன்றுதான் பொதுமக்களின் மனதில் முக்கியமான நோக்கமாக இருக்கிறது.
இப்படி மற்றவர்களின் கவனத்தையும் மதிப்பையும் பெறுவதற்காக வாழ ஆரம்பிப்பதால், அவர்களின் மகிழ்ச்சிக்காக தங்களைக் கஷ்டப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். இதன் விளைவு நற்பெயர் கிடைத்தாலும் திருப்தி கிடைப்பதில்லை.
தன்னை திருப்திப்படுத்திக் கொள்வதற்கோ, தன் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கோ அக்கறை பிறக்காதவரை மற்றவர்களுக்காக நடனமாடிக் கொண்டிருப்பார்கள். ‘நான் என் சுதந்திரத்தை இழக்கமாட்டேன். மற்றவர்களின் நல்ல, கெட்ட ஒப்புதல்களால் பாதிக்கப்படாத அளவிற்கு சிறந்த உள்ளுலக முதிர்ச்சியை பெற உழைப்பேன்’, என்ற இந்த அக்கறைகள் பிறக்கும் போதுதான் வாழ்க்கைக் கரையைக் கடக்க ஆரம்பிப்பீர்கள். இது நடந்து விட்டால் நீங்கள் ஒப்பற்ற ஹீரோவாகிவிடுவீர்கள்.
ஆத்ம தியானம்
இன்றைய மனிதனின் நிலையைப் பார்த்தால்...
நம்முள் நமக்குத் தேவையான அன்பில்லை, சக்தியில்லை என்றுதான் தோன்றும்.
ஆனால் தன்மீதே தனக்கு நம்பிக்கையில்லை என்பதே நிஜம்.
யாருமே அவரவர் விருப்பப்படி வாழ்க்கையை வாழ முடியாமல் போனதற்கு காரணம் இதுதான்.
இதற்குத் தீர்வு, உங்களது கவனத்தை யார்மீதும் திருப்ப வேண்டாம்.
யாருடைய கவனத்தையும் நீங்கள் ஈர்க்க வேண்டாம்.
உங்களின் திருப்திக்காக வாழுங்கள்.
தன்னிடமே திருப்தியும் தன்னகத்தே சுகத்தையும், தன் செயல்களிலேயே நிறைவையும் காண்பவர்தான் கடவுள்.
உங்களிடமே உள்ள இவற்றைக் கண்டுபிடியுங்கள். நீங்களும் கடவுளாவீர்கள்.