எதிர்பாராத பிரச்சனைளுக்கான சாவி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“உவ்வே! நல்லாவே இல்லை.
அம்மா போடுகிற காபிதான் நல்லா இருக்கு.
நீ போட்டால் கசக்கிறது...
உனக்கு குளிப்பாட்டவே தெரியலை.
அம்மாதான் ஒழுங்காகக் குளிப்பாட்டிவிடும்.”
என்று ஏழு வயதுச் சிறுவன் ராஜன் தன் பாட்டியிடம் சலித்துக்கொண்டான்.
பேரன் சலித்துக்கொண்டதில் பாட்டியின் முகம் வாடிப்போனது. தன்னுடைய பேரனுக்கு அம்மா போட்ட காபிதான் பிடிக்கும்போது, “நாம் ஏன் நடுவில் தொந்தரவு செய்ய வேண்டும்? நான் குளிப்பாட்டுவதை விட அம்மா குளிப்பாட்டுவதுதான் அவனுக்கு பிடித்திருக்கிறது. சரி. அப்படியே போகட்டும்” என்று யோசித்த பாட்டி, அன்றிலிருந்து பேரனுக்காக அதிகாலையில் எழுவதை நிறுத்தி விட்டார்.
இதை எல்லாவற்றையும் துவக்கத்திலிருந்து கவனித்த மருமகள், அடுத்த நாள் காலை மகனுக்கு ஒரு கப் காப்பியைத் தந்து விட்டு, “தம்பி! நீ விவரம் தெரியாமல் பேசிட்டே. நீ விளையாட்டாய் பேசியது பாட்டியை எவ்வளவு பாதித்திருக்கு தெரியுமா? பெரியவர் மனம் புண்படும்படி பேசக்கூடாதென்று உனக்குத் தெரியுமில்லையா? ஏன் அப்படிப் பேசினாய்?” என்று கேட்டாள். இப்படிக் கேட்ட தாயின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சிறுவன் ராஜன் பேசினான்...
"நேற்று அப்பா உன்னிடம் ரொம்ப வருத்தமாக சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். என்ன சொன்னாலும் அம்மா சொல்ற பேச்சை கேட்பதில்லை. அம்மாவிற்கு இருக்கிற ரத்த அழுத்தத்திற்கு டாக்டர் ரொம்ப நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அம்மாவை ஓய்வெடுக்கச் சொன்னால், என்னிடமே கோபித்துக் கொள்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை.. என்று அப்பா அப்பொழுது புலம்பினார்.
இப்போதுப் பார். பாட்டி எப்படி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று!"
இப்படி பேசிய தன் மகனை கண்கள் கலங்க, கட்டியணைத்துக் கொண்டார் அன்புத்தாய்.
"அற்புதமான சம்பவம்" என்று சொல்லி புருவத்தை உயர்த்தி விட்டுவிட வேண்டிய சம்பவமல்ல இது.
ஆழமாக ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய சம்பவமிது.
ஞானக்குழந்தை போல் பேசிய தன் குழந்தையைப் பார்த்து அதிசயித்த தாய், "எப்படிடா உன்னால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது" என்று கேட்டாள் .
அதற்கு சிரித்த குழந்தை, "அப்பாதான் காரணம்" என்றது.
"அவரா!" என்று ஆச்சரியமாய் திரும்பக் கேட்ட தாயிடம், "இரண்டு நாள் முன்பு, இரவு தூங்கச் செல்லும் முன் அப்பா சொன்ன ஜென் கதை ஞாபகம் இருக்கா?"
ஜென் சீடன் : "ஒரு நல்ல மாற்றத்திற்காகச் சொன்னாலும் எதிராளி எப்போதும் புண்பட்டே தீருவார். மனக்கஷ்டப்பட்டே தீருவார் என்ற நிலையிருந்தால் என்ன செய்வது?"
ஜென் குரு : புண்ணாகும் அளவிற்கு விஷயம் இருந்தால், அதை எப்படி ஒரு சின்னச் சிராய்ப்போடு நிறுத்திக்கொள்ள முடியும் என்று கருணையோடு ஆழ்ந்து யோசித்து என்ன செய்தாலும், அது சரியாய்தான் முடியும்.

ஞானக்குழந்தை
போல் பேசிய தன்
குழந்தையைப்
பார்த்து அதிசயித்த
தாய், "எப்படிடா
உன்னால்
இப்படியெல்லாம்
யோசிக்க முடிகிறது"
என்று கேட்டாள் .
அப்பா சொன்ன இந்தக் கதை உனக்கு ஞாபகம் இருக்காம்மா?
ஜென் குரு சொன்னபடி நான் யோசித்துப் பார்த்தேன். இப்பப் பார், பாட்டி நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
"பல வருட அனுபவங்களுக்குப் பிறகு கூட ஒருவருக்கு வரமுடியாத இந்தப் பக்குவத்தையும், அணுகு முறையையும், ஒரே ஒரு ஞானக்கதை செய்துவிட முடியுமா?" என்று ஆச்சரியம் பொங்க யோசித்தாள் அந்தத் தாய்.
சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்கள்கூட ஞானிகளின் சாதனைகளை, கருத்துக்களை தினம் ஒரு சில நிமிடங்களாவது தெரிந்து கொள்வதின் மூலமாகவே வாழ்வில் வரும் எதிர்பாராத சிக்கல்களைக்கூட சரி செய்யும் சூத்திரங்களை உருவாக்கும் பக்குவத்தை பெற்று விடுவீர்கள்.
ஆத்ம தியானம்
இராமாயணம், மஹாபாரதம், பகவத் கீதை, தெனாலிராமன் கதைகள் போன்றவற்றை சிறுவர்களுக்குச் சொல்வது, வேலையில்லாத பாட்டிகளின் வேலை என்று ஒதுக்கிவிடாதீர்கள்.
- Personality development
- Relationship building
- Emotional balance
- Creating thinking
- Business management
என்று இன்று பரவலாக பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் கட்டி, கற்றுத்தரப்படும் மேற்கண்ட வகுப்புகளில், அவர்கள் சொல்லும் உன்னதமான தீர்வுகளை, மேற்சொன்ன கதைகள் மூலமாகத்தான் சொல்கிறார்கள் என்பதை உங்களுக்காக இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
நிஜமான சாதனையை நோக்கி, ஜீவன் முக்தியை நோக்கி உங்களை மிக எளிதாக தினமும் முன்னேற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஞானக்கதையை நீங்கள் மட்டும் படிப்பதோடு அல்லாமல், குடும்பமே கேட்கும்படி செய்தால், அங்கு மிக எளிதாக ஒரு தியானத்தை நடத்தி விட்டீர்கள்.
ஞானிகளின் கதையைக் கேட்பது தியானம்.
அதை தியானிப்பது வளர்ச்சி. அதை நடைமுறைப்படுத்துவது உங்களையே மகானாக்கிவிடும். ஜீவன் முக்தர்களாக்கிவிடும்.