KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/எதிர்காலம் எதிர்பார்ப்பதை விட பெரும் சாதனையாகும்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

எதிர்காலம் எதிர்பார்ப்பதை விட பெரும் சாதனையாகும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Nithyananda

ஆச்சரியமானாலும் இது உண்மையே...

டீ குடிப்பதிலிருந்து டீ.வி பார்ப்பது வரை எதுவுமே உங்களின் முடிவுப்படி நடப்பதில்லை! ஏன்? இந்தக் கட்டுரையை நீங்கள் படிப்பதுகூட நீங்கள் இப்போது முடிவெடுத்துச் செய்வதல்ல. ஏற்கனவே எடுத்த பல முடிவுகளின் கூட்டுத்தொகையாகத்தான் இப்புத்தகமே உங்களின் கையிலிருக்கிறது.

பல புத்தகங்களின் நடுவே, இதைத் தேர்ந்தெடுக்கக் காரணமாய் இருந்த உங்களின் எண்ணம், 'தேவை'. அநேக கட்டுரைகளின் நடுவே இந்தக் கட்டுரையை உங்களைப் படிக்க வைக்க காரணமாய் இருக்கும் உங்களின் ஆர்வம், 'குணம்'.

இப்படியெல்லாம் செய்வதற்கு நேரத்தையும், ஓய்வையும் தரும் உங்களின் வாழ்க்கை முறை, சமூகநிலை ஆகிய அனைத்தும் ஒன்றாய்ச் சேர்ந்துதான், இந்தக் கட்டுரையை, உங்களைப் படிக்க வைத்திருக்கிறது.

மேற்சொன்ன காரணங்களில் ஒன்றிரண்டு மாறியிருந்தால்கூட, வேறு புத்தகத்திலுள்ள வேறொரு கட்டுரையை வேறு எங்காவது அமர்ந்து படித்துக் கொண்டிருந்திருப்பீர்கள்.

நிகழ்காலம் என்பது இறந்தகால அனுபவங்களின் கூட்டுத்தொகை.

எதிர்காலம் என்பது நிகழ்கால அனுபவங்களின் கூட்டுத்தொகை.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான முடிவுகளை ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொண்டேயிருக்கிறீர்கள். இந்த முடிவுகள்தான் உங்களின் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கின்றன.

இறந்தகால வாழ்வில் எடுத்த முடிவுகள்தான் எதிர்கால வாழ்வின் வடிவத்தையே நிர்ணயிக்கின்றன எனும் உண்மையை உணர்த்தும் ஒரு அருமையான கதை.

portrait

எதிர்காலம்
என்பது
நிகழ்கால
அனுபவங்களின்
கூட்டுத்தொகை.

இரு சகோதரர்கள் ஜென் குருவைச் சந்தித்தார்கள்.

மிகுந்த ஆர்வத்தோடு இருவரும் குருவிடம் கேட்டார்கள், "எங்களின் எதிர்காலத்தைச் சொல்லுங்கள். அது எப்படியிருக்கும்?"

குரு சொன்னார், "வேண்டாம்ப்பா, எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்வது அவ்வளவு நல்லதாக போய் முடியாது.

எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதனாலேயே அது மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. எதிர்காலத்தை நல்லவிதமாய் அமைக்க உழைக்கலாம்; அது நல்லதில் போய் முடியும். எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் முயற்சி வேண்டாம்."

ஆனால், அவர்கள் விடுவதாய் இல்லை. மிகவும் பிடிவாதமாய் கேட்டார்கள். அதனால் ஜென் குரு சொல்லிவிட முடிவு செய்தார்.

மூத்த சகோதரரைப் பார்த்து, "இன்னும் ஒரே வருடத்தில் நீ அரசனாகிவிடுவாய்."

இளைய சகோதரரைப் பார்த்து, "இன்னும் ஒரு வருடத்தில் நீ கொலை செய்யப்படுவாய்."

மூத்த சகோதரர் மிகுந்த மகிழ்ச்சியோடு குதித்தார். இளைய சகோதரர் நிற்க முடியாமல் அங்கேயே மயங்கி விழுந்தார். இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தது.

அப்போது குரு சொன்னார், "நான்தான் அப்போதே சொன்னேனே, எதிர்காலத்தைப்பற்றி தெரிந்து கொள்வதெல்லாம் அவ்வளவு நல்லதில் முடியாதென்று."

அன்றிலிருந்து மூத்தவர் கற்பனைகளிலேயே கொடிகட்டிப் பறந்தார். தன்னுடைய அரச வாழ்வு எப்படியிருக்கும்? எப்படியெல்லாம் வாழலாம்? என்ற கனவிலேயே நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தார்.

இளையவர் அன்றிலிருந்து மிகுந்த ஜாக்கிரதையோடு நடந்துகொள்ள ஆரம்பித்தார். ஒவ்வொரு நபரோடும் மிகுந்த கவனத்தோடும், விழிப்போடும் நடந்துகொள்ள ஆரம்பித்தார்.

பதினொரு மாதங்கள் கழிந்தன. இளைய சகோதரர் மூத்த சகோதரரை தன் இல்லத்திற்கு அழைத்திருந்தார். அங்கு வந்த மூத்த சகோதரர், "என்னுடைய அரண்மனைக்கு ஒரு பெரிய நிலம் பார்க்க வேண்டும். அரண்மனை இப்படி இருக்க வேண்டும்." என்று பேசிக்கொண்டிருந்தார்.

கடைசியில் சிறிது காட்டோடு கூடிய பெரிய நிலத்தை பார்க்க இருவரும் சென்றார்கள். அங்கு நடக்கும் போது மூத்த சகோதரர் கால் தடுக்கி விழுந்தார். விழுந்த இடத்தில், புதைக்கப்பட்ட ஒரு பானை! பானையைத் திறந்து பார்த்தால்... அது முழுக்க முழுக்க வைர, வைடூரியங்கள் நிறைந்த புதையல்!

மூத்த சகோதரர் சத்தமிட்டு சந்தோஷமாகக் குதிக்க ஆரம்பித்தார்,

"எனக்குப் புதையல் கிடைத்துவிட்டது. நான் அரசனாகப் போகிறேன்." என்று அவர் போட்ட சத்தம் அங்கு ஒரு புதருக்குள் பதுங்கியிருந்த திருடன் காதில் விழுந்தது.

"ஆஹா, நல்ல வேட்டை!" என்று அவர்களைத் தாக்கிப் புதையலை அபகரிப்பதற்காக திருடன் ஆயுதத்தோடு குதித்தான். ஏற்கனவே மிகுந்த ஜாக்கிரதையோடு வாழ்ந்து கொண்டிருந்த இளைய சகோதரர் நொடிக்குள் அங்கு நடப்பதை உணர்ந்து தன்னுடைய அண்ணனை திருடனின் தாக்குதலிருந்து காப்பாற்றினார்.

"எனக்குப் புதையல் கிடைத்துவிட்டது. நான் அரசனாகப் போகிறேன்." காப்பாற்றும் போது, திருடன் அடித்த அடியில் இளைய சகோதரரின் கை உடைந்தது.

அதற்குள் அருகேயுள்ள பாதை வழியாக ஒரு கூட்டம் பிரயாணமாய் வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த திருடன், இதற்கு மேலும் இங்கிருப்பது ஆபத்து என்று பூமிக்குள் இருந்த பானையிலிருந்து இரண்டு கைகளுக்கு அடங்குமளவிற்கு வைரங்களை எடுத்துக்கொண்டு தப்பித்து ஓடிவிட்டான்.

portrait

> சாதிக்க வேண்டுமா?
> அதற்கு தேவையான
> வாழ்க்கைச்
> சூழலையும்,
> புத்திசாலித்தனத்தையும்
> நாம்தான் உருவாக்கிக்
> கொள்ள வேண்டும்.

கண்டுபிடித்த புதையலை வைத்து நல்ல செல்வத்தோடு நன்றாய் வாழ்ந்தார்கள். ஆனால் மூத்த சகோதரர் அரச னாகவும் இல்லை, இளைய சகோதரர் இறக்கவும் இல்லை.

ஜென் ஞானியிடம் ஒரு வருடம் கழித்து இருவரும் சென்றார்கள். இப்போது இளையவர் மிகுந்த சந்தோஷத்தோடும், மூத்தவர் வருத்தத்தோடும் இருந்தார்.

நடந்ததையெல்லாம் கேட்டறிந்த ஜென் ஞானி அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

"நான் தான் அப்போதே சொன்னேனில்லையா? எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதாலேயே அதன் போக்கை மாற்றிவிடுவீர்கள் என்று."

அரசனாவது பற்றி கனவு கண்டதிலேயே நீங்கள் நேரத்தையெல்லாம் வீணடித்துவிட்டீர்கள். அதனால்தான் அரசனாவதற்குத் தேவையான வாழ்க்கைச் சூழல்களையும், புத்திசாலித்தனமும் உங்களைச் சுற்றி உருவாவதைத் தவறவிட்டு விட்டீர்கள்.

உங்களிடம் மரணத்தைப் பற்றி எச்சரிக்கை இருந்தது. அதனால் மிகுந்த விழிப்புணர்வோடு தொடர்ந்து வாழ்ந்தீர்கள். அதனால் விதிப்படி உங்களுக்கு நேர வேண்டிய மரணமானது வெறும் கை முறிவோடு நின்றுவிட்டது.

நீங்கள் அரசனாகாமல் போனதற்குக் காரணம், வாழ்க்கையைப் பற்றிய பொறுப்புணர்வு சிறிதும் இல்லாமல், கனவிலேயே வாழ்வை வீணடித்ததுதான். நீங்கள் தப்பித்து மரண கண்டத்தைத் தாண்டியது, மிகுந்த பொறுப்புணர்வோடு உங்களையும் அறியாமலே நீங்கள் உங்களின் வாழ்வில் கொண்டுவந்த விழிப்புணர்வால்தான். தியானத்தால்தான்.'' என்று சொல்லி முடித்தார்.

இருவரின் இப்போதைய வாழ்வையும், நிலையையும் இதற்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்வின் போக்குதான் நிர்ணயித்திருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றதா?

இன்றைய நம் வாழ்வும், அதில் நாம் செய்யும் செயல்களும் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் அல்ல. இந்த முடிவுகளை நம்முடைய இறந்தகால வாழ்வுமுறைதான் நிர்ணயிக்கின்றது... என்பதைப் புரிந்துகொண்டாலே இன்னொரு இனிய வாழ்வியல் சத்தியம் புரியவரும்.

அது... இன்றைய வாழ்வை மாற்றியமைப்பதனாலேயே எதிர்கால வாழ்வை மாற்றியமைக்க முடியும் என்பதே அது.

உங்கள் கையிலிருக்கும் நிகழ்காலத்தைத் திருத்தினால், எதிர்காலத்தையே திருத்தி எழுத முடியும்.

ஆத்ம தியானம்

உங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது? என்று கண்டுபிடிக்க ஆசையா?

நிகழ்காலத்தை ஆய்வு செய்யுங்கள்... எதிர்காலத்தின் உருவம் தயார்! என்ன மாதிரியான எண்ணங்கள், எந்த மாதிரியான உணர்வுகள் உங்களை இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என ஆராயுங்கள். இந்த அச்சிலிருந்துதான் எதிர்காலம் உருவாகப்போகின்றது.

மனமானது குழப்பமான எண்ணங்களால் இருந்தால், எதிர்காலம் குழப்பமானதாய்த்தான் இருக்கப் போகின்றது.

உணர்வானது ஆனந்தமயமானதாக இருந்தால், எதிர்காலம் நிச்சயம் ஆரோக்கியமயமானதாகத்தான் இருக்கப்போகின்றது.

எனவே, நிகழ்கால எண்ணங்களையும், உணர்வுகளையும் சீர்ப்படுத்துங்கள், எதிர்காலம் தன்னால் சீராகும்.

நிகழ்காலத்தை ஆனந்தமாக்குங்கள், ஆரோக்கியம் நிறைந்ததாக்குங்கள். எதிர்காலம் எதிர்பார்த்ததைவிட பெரிய சாதனையாக மலரும்.