துக்கம், எரிச்சலிலிருந்து விடுதலை பெறுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

முதல் முறையாக அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டின் முக்கியமான இடங்களைக் காண்பிப்பதற்காக உடன் வந்திருந்த வழிகாட்ட RecursionError[?]
முதல் முறையாக அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டின் முக்கியமான இடங்களைக் காண்பிப்பதற்காக உடன் வந்திருந்த வழிகாட்டியாளர் பல அடுக்குமாடிக் கட்டிடங்களையும், பல பல்கலைக்கழகங்களையும், பல ஆராய்ச்சிக் கூடங்களையும், பல பொழுதுபோக்கு மையங்களையும் காட்டினார்.
கடைசியாக அவர் வம்புக்கென்றே ஒரு கேள்வியைக் கேட்டார், "இங்கே இவ்வளவு கட்டியிருக்கிறோம். அங்கே என்ன செய்திருக்கிறீர்கள்?" என்று.
என்னோடு வந்திருந்தவர்கள், "என்ன இவர் விளையாட்டுத்தனமாக கேட்பதாக நினைத்து எதையோ கேட்டு வைத்துவிட்டார்?" என முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது,
"நீங்கள் வெளியுலக ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகங்களை நாடெங்கும் கட்டி வைத்திருக்கிறீர்கள். நாங்கள் உள்ளுலக ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகங்களை நாடெங்கும் கட்டி வைத்திருக்கின்றோம்" என சத்தமாய் சொன்ன பதிலில் கேள்வி கேட்டவர் புருவங்களை உயர்த்தி "அப்படியா?" எனக் கேட்டார்
"ஆம். ஆனந்த சமாஜங்களை உருவாக்கியிருக்கின்றோம்" எனச் சொன்னேன்.
"அப்படியென்றால்?"
“நீங்கள் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களைக் கட்டியிருக்கின்றீர்கள். நாங்கள் நூற்றுக்கணக்கான கோயில்களை கட்டியிருக்கின்றோம்.
ஆனந்தமயமாக உள்ளுக்குள்ளும், வெளியிலும் உணர்ந்து வாழும் உள்ளுலக ஆராய்ச்சியாளர்களான (Inner scientist) ஞானிகளைச் சுற்றி மக்கள் ஒன்றுகூட ஆரம்பித்தனர். அவர்களும் ஆனந்தமயமாக வாழ்வதற்கான உள்ளுலக ஆராய்ச்சியில் அதாவது தியானத்தில் தங்களின் வாழ்க்கையை சேர்ப்பதற்கு ஆரம்பித்தனர்.
இப்படி ஆனந்தமயமான வாழ்வை வாழ ஆரம்பித்த மனிதர்களும், ஞான குருவும் சகஜமாய், சமமாய் வாழவும், உலகுக்கெல்லாம் இந்த ஆனந்தமயமான வாழ்வை கற்றுத்தரவும் கட்டப்பட்ட உள்ளுலக பல்கலைக்கழகங்களே கோயில்கள். ஆனந்தமயமான வாழ்விற்காக மக்கள் ஒன்றுகூடுவதே ஆனந்த சமாஜம்.

ஆனந்தமயமான வாழ்விற்காக மக்கள் ஒன்றுகூடுவதே ஆனந்த சமாஜம்.
கடந்த முன்னூறு வருடங்களில் நடந்த ஆக்கிரமிப்புகளினாலும், கலாச்சார சீரழிவுகளினாலும் இந்திய பல்கலைக்கழகங்களான கோவில்களின் மகத்துவங்கள் மக்களுக்குச் சென்று சேருவது நின்றுவிட்டது.
மக்களும் இரண்டு நாளுக்கொருமுறை கோவிலுக்கு சடங்குக்காகச் சென்று வருவது எனும் நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது மக்களுக்கும் சமுதாயத்திற்கும் மாபெரும் இழப்பு.
நீங்களும் நல்ல முயற்சியில்தான் இருக்கின்றீர்கள்.
வெளியுலகிலிருந்து உள்ளுலகிற்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா? என ஆராய்ச்சி செய்கின்றீர்கள். சௌகரியங்களையும், சொகுசுகளையும் அதிகரிக்கின்றீர்கள். மருந்து கூட வெளியிலிருந்து உள்ளே தருவதுதான்.
ஒரு உண்மையை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும். வெளி சொகுசுகளை அதிகரிக்கும் முன், சொகுசுகளை ஆழமாய் அனுபவிக்க உதவும் ஆனந்த சக்தியை ஒவ்வொரு தனி நபரும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
ஆனந்த சக்தியை அதிகரித்துக்கொள்ளாத ஒருவர் "Five Star Hotel" லில் கூட வாழ்க்கையை நொந்துகொண்டு, மனச்சோர்வுற்றுதான் வாழ முடியும். ஆனந்த சக்தியை அதிகரித்துக் கொண்ட ஒருவரால் ஆலமரத்தடியில் கூட வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டு, ஆனந்தமாய் இருக்க முடியும்.
எனவேதான் வெளியுலக ஆராய்ச்சியை விட உள்ளுலக ஆராய்ச்சி மிக முக்கியமானது என்போம். சொகுசைவிட ஆனந்தசக்தி முக்கியமானது" என்றேன்.
இந்தப் பதிலை உன்னிப்பாய்க் கேட்டு முடித்த வழிகாட்டி “ஆனந்த சக்தியை அதிகரிக்க என்னால் கூட முடியுமா? இந்த நாட்டில் அதற்கு வழிவகை இருக்கிறதா?” என பவ்யமாய்க் கேட்டார்.
அப்பொழுது சொன்ன பதிலை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
"ஒருவரின் கோபம் இன்னொருவரை பற்றிக்கொள்கிறது. ஒருவரின் சிரிப்பு இன்னொருவரை தொற்றிக்கொள்கிறது."
பொதுவாக ஓரிடத்தில் இருவர் பேசிக்கொள்ளும்போது, முதல் நபர் இரண்டாம் நபரின் உணர்ச்சிகளை நிர்ணயிக்கின்றார்.
இன்னொருவர் எரிந்து விழுந்தால் நாமும் எரிந்து விழத் தயாராகிவிடு கின்றோம். இன்னொருவர் அழுவதால் நாமும் அழுதுவிடத் தயாராகின்றோம்.
தியானம் செய்து உணர்ச்சி பக்குவத்தை Emotional Balance ஒருவர் பெற்றுவிட்டால், இன்னொருவரின் உணர்ச்சி வேகம் அவரை பாதிக்காது.
அதன் பிறகு எதிராளியின் கோபம் கூட உங்களைப் பாதிக்காது.
தியானம் செய்து உணர்ச்சி பக்குவத்தை Emotional Balance ஒருவர் பெற்றுவிட்டால், இன்னொருவரின் உணர்ச்சி வேகம் அவரை பாதிக்காது. இன்னொருவர் வம்புக்கிழுத்தாலும், நீங்கள் சாந்தம் குறையாமல் பண்பு குறையாமல் பேசமுடியும், உங்களின் சாந்தத்தன்மையானது வம்பிழுப்பவரைக்கூட பவ்யமாக்கிவிடும்.
அதேபோலத்தான் உங்களின் ஆனந்தமும், உங்களைச் சுற்றியிருப்பவரின் துக்கத்தை மாற்றிவிடும் சக்தி பெற்றது.
இப்போது துக்கம், எரிச்சல் மிகுந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகமிருப்பதால் எல்லோரும் ஆனந்தமயமாய் இருப்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது. இதிலிருந்து மிக எளிதாக நீங்கள் கூட விடுதலை பெறமுடியும்.
செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
ஆனந்தமயமாய் வாழும் மனிதர்களிடம் நட்புறவை வளர்த்துக்கொள்ளுங்கள், அவர்களின் ஆனந்தம் உங்களின் துக்கத்தைக் கரைக்கும். துக்க பூமி ஆனந்த பூமியாகும்.
ஆத்ம தியானம்
கோயில்களின் இலட்சியங்களில் ஒன்று, "ஒவ்வொரு வீட்டின் வாயில்களும் ஆனந்தத்தின் நுழைவாயில்களாக இருக்க வேண்டும் என்பது"
இல்லத்தில் ஆனந்தம் குடியிருக்க, உங்களின் இதயத்தில் ஆனந்தம் குடியிருக்க வேண்டும். அதற்கான அருமையான தியானம் இது.
இன்னொருவரின் உணர்ச்சி மாற்றங்களுக்கு ஏற்ப சத்தமிடும் மத்தளமாக இருப்பதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வையுங்கள். எதிராளி எப்படிப் பேசினாலும் முதலில் அச்சூழலை சாந்தத் தன்மையோடு அணுகப்பழகுங்கள். சாந்தத்தோடு அணுகுங்கள். எதிர்ப்பவர்கூட பவ்யமாவார்.
உங்களின் சாந்தத்தன்மையானது உங்களின் இதயத்திலும், இல்லத்திலும் ஆனந்தத்தை ஊறவைக்கும்.