உள்ளுலகையும், வெளியுலகையும் வளமாக்கும் தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
“நான் நல்லாத்தானே இருக்கிறேன். எனக்கு எதற்கு தியானம்?” என்று கேட்பவர்களுக்கும், நல்லாயிருக்க விரும்புபவர்களுக்குமான சிறப்புக் கட்டுரை இது.
நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆராய்ச்சி இது.
இரண்டு தவளைகளை எடுத்து ஆராய்ச்சி செய்தார்கள். முதல் தவளையை எடுத்து ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த நீரால் நிரம்பிய ஒரு பாத்திரத்திற்குள் போட்டார்கள்.
சில விநாடிகளில் தன்னை சுதாரித்துக்கொண்ட தவளை பாத்திரத்தில் இருந்து எம்பி குதித்துத் தப்பித்துவிட்டது.
இரண்டாவது தவளையை அதே அளவுள்ள பாத்திரத்திற்குள் சாதாரண நீரை நிரப்பி அதற்குள் போட்டார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தண்ணீரைச் சூடேற்றினார்கள்.
வேடிக்கை என்னவென்றால், மெதுவாக தண்ணீர் சூடேறியதால் இரண்டாவது தவளை தன்னைச் சுற்றி நடப்பது பற்றிய சுதாரிப்பே இல்லாமல் இருந்துவிட்டது.
தன்னால் தாங்க முடியாத அளவிற்கு சூடேறிவிட்டது என்று தவளை சுதாரிக்கும் முன்பே தவளைக்கு மயக்கம் வந்துவிட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக சூடு அதிகமான நீருக்குள் தவளை மாட்டிக்கொண்டது. அந்தப் பாத்திரத்திற்குள்ளே வேகவேகமாகச் சுற்றி வந்த தவளை மயங்கி விழுந்தது.
சில நொடிகளுக்குள் இறந்துபோனது.
இந்த ஆராய்ச்சியிலிருந்து, அவர்கள் வெளியிட்ட இரண்டு முக்கியமான கண்டுபிடிப்புகள்.

ஒன்று.... உயிருக்கே கேடு எனும் அவசர நிலை ஏற்படும் வரை விழித்துக்கொள்ளும் தன்மை, சுதாரித்துக்கொள்ளும் தன்மை துளியும் இருப்பதில்லை.
இரண்டாவது..... அவசர நிலையாக எதுவும் மாறாத வரை உயிருக்கே கேடு விளைவிக்கக் கூடிய சம்பவம் நம் வாழ்வில் நடந்தேறிக் கொண்டிருந்தால்கூட விழித்துக்கொள்வதோ, சுதாரிப்பதோ நடப்பதே இல்லை.
உயிருக்கே கேடு
எனும் அவசர நிலை
ஏற்படும் வரை
விழித்துக்கொள்ளும்
தன்மை,
சுதாரித்துக்கொள்ளும்
தன்மை துளியும்
இருப்பதில்லை.
அதனால்தான் மக்களைப் பார்க்கும்போது ஞானிகள் சிரிப்பதுண்டு. காய்ச்சலுக்கும், வலிக்கும் உடனடியாக ஏதாவது மருத்துவம் செய்து அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளச் செயல்படும் மனிதன் அதைவிட மோசமான கேடுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வது பற்றி யோசிப்பதே இல்லை.
காய்ச்சலை விட நூறு மடங்கு மோசமானது மனஉளைச்சல்.
அவமானத்தை விட நூறு மடங்கு மோசமானது அகங்காரம்.
மனித மனம் உள்ளுலகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இரண்டாவது தவளையாகத்தான் செயல்படுகிறது.
காய்ச்சலைவிட மோசமான மனஉளைச்சல் தினம் தினம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இருந்தாலும் அதிலிருந்து வெளிவருவது எவ்வளவு முக்கியம்? என்பதைப் பற்றி யோசிப்பதும் இல்லை. அதிலிருந்து வெளிவருவதற்காக முயற்சிப்பதும் இல்லை.
திடீரென்று ஒரு காலகட்டத்தில் மருந்தால்கூட சரிசெய்ய முடியாத, வெளியே சொல்ல முடியாத அளவிற்கு மனஉளைச்சலும், அகங்காரமும் அதிகமாகி மனிதனைத் தாக்கும்போது, என்ன செய்வதென்றும் புரிவதில்லை.
விளைவு, வாழ்வே வெறுப்பாகின்றது.
வாழ்வு நரகமாகின்றது.
தியான ஆராய்ச்சி:
ஒருமுறை நீங்களே இந்த ஆராய்ச்சியைப் செய்து பாருங்கள்.
உங்களின் உள்ளுலகம் எப்படி இருக்கின்றது?
கொஞ்சம் கொஞ்சமாக அது சூடேறிக்கொண்டிருக்கின்றதா? அடிக்கடி சோர்வு, அடிக்கடி சலிப்பு, எதன் மீதாவது வெறுப்பு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று அடிக் கடி வர ஆரம்பித்தாலும் சரி.
காப்பாற்றிக்கொள்ளுங்கள். உள்ளுலகம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.
இல்லை கவலை, பயம், போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள் வர ஆரம்பித்தாலும் தெரிந்துகொள்ளுங்கள். உள்ளுலகம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.
காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ICU- வில் வைத்து ஒருவருக்கு சிகிச்சை தருவதற்கு இணையாகக் கவனிக்கப்பட வேண்டிய செயல் இது. தியானம் இது.
> கவலை, பயம், போன்ற உணர்ச்சிக்கொந்தளிப்புகள் வர ஆரம்பித்தாலும் > தெரிந்துகொள்ளுங்கள். உள்ளுலகம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. > > காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆத்ம தியானம்
ஜென் சூத்திரங்களைத் தன் வாழ்வில் கடைப்பிடித்து பெரிய தொழிலதிபரானவர் என்ற பெருமைக்குரியவர் அவர்.
அவருக்கு பல கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் சொந்தம்.
"இவ்வளவு பெரிய நிர்வாகத்தை கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் நீங்கள் நிர்வாகம் செய்வது எப்படி? அதன் இரகசியம் என்ன?" என்று நிருபர்கள் ஒருமுறை அவரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்....
"என்னுடைய குருநாதர் எனக்குச் சொன்ன இரண்டு இரகசியங்களையும் என்னுடைய கம்பெனி மற்றும் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்குச் சொல்வேன். அதை அவர்கள் அவர்களின் தொழிலாளிகளுக்குச் சொல்வார்கள்.
அந்தத் தொழிலாளிகள் வாடிக்கையாளர்களுக்குச் சொல்வார்கள்.
இந்த ஒன்றால் என்னுடைய எல்லா நிர்வாகமும் எந்தச் சிரமமும் இல்லாமல் வெகு எளிதாக, இனிமையாக நடக்கின்றது."
இந்த பதிலைக் கேட்டதும் மிகுந்த ஆர்வத்திற்குள்ளான நிருபர்கள், "அதென்ன இரகசியம்....? அதென்ன இரகசியம்....?" என்று கேட்டார்கள்.
சிரித்த ஜென் சீடரான தொழிலதிபர் சொன்னார்.....
"முதல் இரகசியம்... எதிர்காலத்தில் வர இருக்கும் சங்கடங்களைக் கண்டுபிடித்து இப்போதே விழித்துக்கொள்ளுங்கள்.
எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே சரி செய்து விடுவதற்கான எல்லா முயற்சி யையும் எடுத்துவிடுங்கள்.
எதிர்காலம் உங்கள் கையில் இருக்கும். இரண்டாவது இரகசியம்.... முதல் இரகசியம் உண்மையிலேயே இரகசியம்தான் என்பதை உணர்ந்து உற்சாகத்தோடு செயல்படுங்கள். அதுபோதும்."
இந்த வரிகள் உள்ளுலகத்தையும் வளமாக்கும், வெளியுலகத்தையும் வளமாக்கும் தியானம். சிரத்தையோடு செய்து பாருங்கள். ஒரே வாரத்தில் பலன், பலம் இரண்டும் தெரியும்.
பின்குறிப்பு :
விழித்துக்கொள்வதும், சுதாரித்துக்கொள்வதும் ஒவ்வொரு மனிதரிடமும் இருக்க வேண்டிய அடிப்படை அத்தியாவசியமான குணங்கள்.