KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/திருமணம் ஒரு அறிவியல்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

திருமணம் ஒரு அறிவியல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

சீடன் : திருமணம்?

ஞானகுரு : அது ஒரு தியான நுட்பம்

திருமணம் ஒரு அறிவியல்.

இதை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால் (Science behind the mar-riage) பல Ph.D களை வாங்கிட முடியும். அவ்வளவு அருமையான வாழ்வியல் தியான நுட்பம் இது.

கட்டுரைக்குள் நுழையும் முன், சில உண்மைகள் :

1. மனிதராய்ப் பிறந்தது இந்த உலகை அனுபவிக்கத்தான்.

2. உலகை அனுபவிப்பதற்காக எடுத்துவந்த பொருட்கள் தான் உடலும், மனமும் நீங்கள் வேறு, இவை வேறுதான்.

3. நீங்கள் என்பது உணர்வு.

4. ஒவ்வொரு மனித உணர்வும் சுகமாயிருக்கவே விரும்புகிறது. அதற்காக உழைக்கிறது.

5. இந்தச் சுகம் 24 மணி நேரமும் இருந்தால் அதுதான் ஆனந்தம்.

6. 24 மணிநேர சுகத்தைப் பெற சக்தியை தரும் நுட்பம்தான் தியானம்.

7. ஆனந்தத்தைப் பெறுவதற்கான விழிப்புணர்வையும், பெற்ற ஆனந்தத்தை நிலையாக வைத்திருப்பதற்கான புத்தியையும் பெறுவதுதான் ஞானம்.

தியான முகாமில், "நீங்கள், ஏன் சன்யாசியானீர்கள்?" என என்னிடம் ஒருவர் கேட்டபோது "நீங்கள் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?" எனக் கேட்டேன்.

பதில் சொல்ல சில நொடிகள் யோசித்தவர், "இந்த ஒரு கோணத்தில் நான் யோசித்ததேயில்லை. ஆம், என்திருமணம் செய்தேன்?" என அவர்தன்னையே கேள்வி கேட்டுவிட்டு, "சமுதாயத்தில் அது தான் வழக்கமாயிருக்கிறது. அவ்வளவுதான். அதற்குமேல் யோசிக்கத் தெரியவில்லையே," எனச் சொன்னார்.

ஆனந்தத்தைப் பெறுவதற்கான விழிப்புணர்வையும், பெற்ற ஆனந்தத்தை நிலையாக வைத்திருப்பதற்கான புத்தியையும் பெறுவதுதான் ஞானம்.

"சில நூறு வருடங்களுக்கு முன்புவரை திருமணம் என்பதன் அறிவியல் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதற்கப்புறம் நிகழ்ந்த கலாச்சார சீரழிவுகளால்தான் இந்த ஞான விளக்கங்கள் மக்களுக்குத் தொடர்ச்சியாக கிடைக்காமல் போய்விட்டது."

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் திருமணம் என்பது, ஒரு பரபரப்பு விழாவாக இருக்காது. அது மிகுந்த அமைதியுணர்வோடும், ஆனந்தமயமான கொண்டாட்டத்தோடும் நிகழும் தியானத் திருவிழாவாக இருக்கும்.

திருமணத்தை செய்துவைக்கும் ஆச்சாரியார்? (அர்ச்சகர்) இதற்கென்றுதயாராகிவருவார். ஏனோதானோஎன்று மந்திரம் சொல்லாமல், ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள்? திருமணம் செய்துகொண்டு எப்படி வாழ வேண்டும்? இல்லறம் இனிக்க என்ன செய்யவேண்டும்? என்ற வாழ்வியல் தியான விளக்கங்களை படிப்படியாகச் சொல்லி திருமணத்தை நடத்தி வைப்பார்.

அந்த விளக்கங்கள் புதுத் தம்பதியருக்கு வழிகாட்டியாகவும், பழைய தம்பதியருக்கு நினைவூட்டியாகவும் இருக்கும்.

திருமணம் என்பது கோயில் திருவிழா போல நடைபெற வேண்டியது.

இரண்டு இளம் தெய்வங்களின் இதய கோவிலில் தீபம் ஏற்றும் திருவிழா அது.

ஒரு இளைஞனையும், ஒரு இளைஞியையும் பெற்றோர் எனும் பெரிய நிலைக்கு உயர்த்தப்போகும் அந்த வைபோகம், கடமைக்காகச் செய்யப்படும் சடங்காச்சாரியமாக இருக்கக்கூடாது. அது விழிப்புணர்வோடு செய்யப்படும் தியானமாக இருக்க வேண்டும் எனச் சொன்னபோது,

"திருமணம் ஒரு கோவில் திருவிழா போல் நடக்க வேண்டும் காரணம், இரண்டு இளம் தெய்வங்களின் இதயக் கோவிலில் தீபம் ஏற்றும் திருவிழா அது... எனச் சொன்ன வரிகள் என் இதயத்தையே தொட்டுவிட்டது, என் திருமணத்திற்கு முன்பே தெரியாமல் போய்விட்டதே!

திருமணமான என்னைப் போன்றவர்கள் என்ன செய்ய?" எனக் கேட்டார்.

"திருமணமாகியிருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.

திருமணமானவர்கள், திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள், துறவிகள் என மூன்று தரப்பட்டவர்களுமே இந்த அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டும்" எனச் சொன்னேன்.

அந்த அறிவியல் இங்கே உங்களுக்காக சில வரிகளில்...

உடலெடுத்த ஒவ்வொரு உயிரும் ஆனந்தத்தை (24 மணி நேர சுகத்தை) அடைய வேண்டும். ஆனந்தம் என்பது நாம் புதிதாய் உருவாக்கக் கூடிய ஒன்றல்ல. ஏற்கனவே நமக்குள் இருந்து கொண்டிருப்பதுதான்.

ஆனால், அதே நேரத்தில் சுகம் என்ற பெயரில் மனிதர்கள் பல சம்ஸ்காரங்களைச் (கர்மங்களை, ஆசைகளை) சேர்த்து வைத்திருக்கிறார்கள். அந்த சம்ஸ்காரங்களை அவர்கள் கடந்துவர வேண்டும். அதுவரை அவருக்குள் இருக்கும் ஆனந்தத்தை அவராலேயே உணர முடியாது.

ஆனந்தம் என்பது நாம் புதிதாய் உருவாக்கக் கூடிய ஒன்றல்ல. ஏற்கனவே நமக்குள் இருந்து கொண்டிருப்பதுதான்.

தன் உடல், தன் மனதோடு விழிப்புணர்வோடு வாழ்ந்து, போராடி தியான அனுபவங்களைப் பெற்று அந்த சம்ஸ்காரங்களைக் கடந்து வரும் மிக எளிய வழியைத் தேர்ந்தெடுப்பவர்கள்தான் துறவறமெடுப்பார்கள்.

"இன்னொரு துணையோடு, தியான வழிகாட்டுதலோடு, உலக வாழ்க்கையோடு வாழ்ந்து, போராடி தியான அனுபவங்களைப் பெற்று, அந்த சம்ஸ்காரங்களைக் கடந்து, ஆனந்தத்தைத் தொடலாம்" என முடிவு செய்துவிட்டுத்தான் திருமணத்திற்கு ஒருவர் சம்மதிக்க வேண்டும்.

சம்மதிப்பதோடு நிற்காமல், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் திருமண வாழ்வு தித்திக்கும். திருமண வாழ்வின் ஒவ்வொரு படியையும் எப்படி அணுகுவது என்று புரியும். அதன்பிறகு திருமணம் புதிராக இருக்காது. புனிதமாக இருக்கும்.

ஆத்ம தியானம்

திருமணம் என்பது இரண்டு இளம் தெய்வங்கள், இரண்டு தெய்வமாக மாறுவதற்காக தரப்படும் நுட்பம்.

இருவரும் இதயமொருமித்து, அவரவரின் சம்ஸ்காரங்களைக் கடந்து வருவதற்கு தன்னால் முடிந்த அளவு உதவி, ஒருவரையொருவர் தெய்வமாக மதித்து, இருவரும் இருவருக்குள்ளுமிருக்கும் தெய்வீகத்தன்மை உணர்ந்து, இருவரும் தனித்தனி தெய்வங்களாக மாறுமளவுக்கு சுதந்திரம் தந்து வாழ்வதுதான் திருமணம்.

இதையெல்லாம் தனக்குத்தானே செய்து கொண்டால், அதற்குப் பெயர்தான் துறவு, சந்நியாஸம்.

திருமணம் என்பது கணவனை சிவனாகவும், மனைவியைப் பார்வதியாகவும் மாற்ற வேண்டும். துறவறம் என்பது தனி மனிதனை அவனுக்குள் இருக்கும் இன்னொரு பாதி ச க்தியைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும். இதைத்தான் அர்த்தநாரீஸ்வரர் நிலை எனக் குறிப்பிடுவார்கள்.

நீங்கள் யாராயிருந்தாலும், உங்களின் வாழ்வானது சம்ஸ்காரங்களைக் கடக்கும் வகையில் இருக்கிறதா? இல்லை அதிலேயே சிக்கிக் கொள்ளும் அளவுக்கு இருக்கிறதா? என ஆராயுங்கள்.

வாழ்வைத் திருத்தியமையுங்கள்.

Nithyananda