KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/நிஜமான சுதந்திரம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

நிஜமான சுதந்திரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கல்லூரி ஒன்றில் நடத்திய நித்யானந்த ஸ்புரண தியான முகாமில் இளைஞரொருவரோடு நிகழ்ந்த இனிமையான உரையாடல்.

"திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் அவசியமா?"

"திருமணத்திற்குப் பின்பும் அவசியம்"

"அதெப்படி திருமணத்திற்குப் பின்பும்...?"

"உங்களின் இந்தக் கேள்வி நியாயமானதுதான். பிரம்மச்சரியத்தின் அறிவியல் (Science of Bramamachariyam) மக்களுக்கு தெரியாததால் தான் சந்தேகங்கள் எழுகின்றன." எனச் சொன்னபோது, இந்தச் சின்னக் கதையைச் சொன்னேன்.

கிரகஸ்தரொருவர் ரிஷியிடம் வில்லங்கமான கேள்வியொன்றைக் கேட்டார்.

கிரகஸ்தர் : 18 பிள்ளைகளைப் பெற்ற என்னுடைய தாத்தாவின் வயது 97. உங்களுடைய ஆஸ்ரமத்திலுள்ள மூத்த சன்யாசியின் வயது 95.

என்னுடைய தாத்தா ஒரு பிரம்மச்சாரியல்ல. ஆனால், உங்களின் மூத்த சன்யாசி வாலிப வயதிலிருந்தே துறவிதான்.

பதினெட்டு பிள்ளைகளைப் பெற்ற என் தாத்தா 97 வயதிலும் உங்களின் மூத்த சன்யாசியைப் போலவே உற்சாகமாகவே இருக்கிறார். ஆரோக்கியமாயிருக்கிறார்.

இவர் சம்சாரி, அவர் சன்யாசி. இருவரும் ஒரேமாதிரியாக நன்றாகயிருக்கிறார்களே!!! எப்படி இது சாத்தியம்?'' என்று கேட்டு நிறுத்தினார்.

ரிஷி: “காரணம் இருவருமே பிரம்மச்சாரிகள்”

கிரகஸ்தர்: “என்னது! இருவருமே பிரம்மச்சாரிகளா?”

ரிஷி

ரிஷி : “95 வயதுவரை வாழ்ந்த சன்யாசி, சன்யாசியாகாமல் திருமணம் செய்து கொண்டிருந்தாரென்றால் அவரது வாழ்க்கை அதோ கதிதான். அதே போல் உன் தாத்தாவிற்கும் மாறி நிகழ்ந்திருந்தால் வம்புதான்”.

கிரகஸ்தர் : “திருமணமாகி ஒரு பெண்ணோடு ஒரு குடும்பத்தோடு வாழ்ந்த என் தாத்தாவால், ஒரு தனி சன்யாசியாக வளர்ந்திருக்க முடியாதா?”

ரிஷி : ஒரு குடும்பத்தோடு வாழவேண்டும் என்ற ஆசைகளை (பிராரப்தம்) எடுத்துக்கொண்டு உடலெடுத்த ஒருவர், குடும்பத்தோடுதான் வாழ வேண்டும்.

அதுதான் தர்மம்.

அதனால்தான் என்னிடம் துறவறம் கேட்டுவருபவருக்கெல்லாம் நான் துறவறம் தந்துவிடுவதில்லை.

இன்னொரு துணையில்லாமலே வாழுமளவுக்கு சக்தியளவில் உயர்ந்தவர்தான் துறவறம் எடுக்க வேண்டும். அவருக்குதான் துறவறம் இனிக்கும்”

கிரகஸ்தர்: “அப்படியென்றால் சக்தியளவில் உயராதவர்களுக்கு மட்டும்தான் திருமண வாழ்க்கை கிட்டுமா?”

ரிஷி: "சக்தியளவில் ஒருவர் தன்னை உயர்த்திக்கொள்வதுதான் பிரம்மச்சரியம், தனி மனிதனாய் வாடுவதல்ல. தனி மனிதனாய் மலர்வதே பிரம்மச்சரியம்."

திருமண வாழ்வு தித்தித்ததால், நிச்சயம் அவரது வாழ்வு, அவரது பிராரப்தத்தின்படியேதான் இருக்கிறது. அவரின் வாழ்வு சரியானது.

அதேபோல்தான் துறவிக்கும், துறவறம் தித்திக்க வேண்டும். அது குன்றாத உற்சாகத்தைத் தரவேண்டும். அப்படியில்லாமல் திருமணமோ, துறவறமோ முதலில் தித்தித்து, பின் கசக்க ஆரம்பித்தால், அந்த நபர் தனக்கு நேர்மாறான வாழ்வைத் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று அர்த்தம்.

ஒரு மனிதனின் சக்தி என்பது அவருடைய உற்சாகத்திற்கான எரிபொருள் போன்றது. அந்தச் சக்தியானது அளவுக்கு மீறி செலவழிக்கப்படும் போதுதான் மனிதனை இறுக்கம், துக்கம், சோர்வு, கோபம் போன்ற எல்லாமே ஆக்கிரமிக்க ஆரம்பக்கின்றன. மனிதன் வாட ஆரம்பிக்கிறான். பிராரப்த ஆசைகளின்படி வாழும் ஒருமனிதனுக்கு அவர் தேர்வு செய்த வாழ்வின் ஒவ்வொரு படியும் தித்திக்கும், அவர் வாடமாட்டார்.

அப்படி வாடினால், அதிலிருந்து உடனே வெளிவரவேண்டும்.

கிரகஸ்தர் : "ஆமாம்! நான்கூட அடிக்கடி வாடித்தான் போகிறேன். அதிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும்?"

ரிஷி : "தனி மனிதராய் வாழ விரும்பினாலும், குடும்பஸ்தராய் வாழ விரும்பினாலும் இருவரின் வாழ்க்கைக்கும் அடிப்படையானது சக்திதான்.

அதில் பற்றாக்குறையானவர் எங்கேயிருந்தாலும் வாட ஆரம்பித்துவிடுவார். அதை பெற்றவர் எங்கேயிருந்தாலும் குன்றாத ஆனந்தத்தோடும், உற்சாகத்தோடும் இருப்பார்.

"சக்தியளவில் ஒருவர் தன்னை உயர்த்திக்கொள்வதுதான் பிரம்மச்சரியம், தனி மனிதனாய் வாடுவதல்ல. தனி மனிதனாய் மலர்வதே பிரம்மச்சரியம்." உங்கள் தாத்தாவும், நம் மூத்த சன்யாசியும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள், சக்தியில் உயர்ந்தவர்கள்.

உங்கள் தாத்தாவும், நம் மூத்த சன்யாசியைப் போலவே வீணான கற்பனைகளிலும், எண்ணங்களிலும் சிக்கிக்கொள்ளாதவர்கள். அந்த அளவிற்கு உள்சுதந்திரம் பெற்றவர்கள்.

Nithyananda

உள் சுதந்திரம் அடைவதற்கான உயர்ந்த முறையே பிரம்மச்சரியம் என்றழைக்கிறோம்.

இருவரும் அந்த அளவிற்குத் தியானங்களைச் செய்து உயர்ந்தவர்கள்.

உள் சுதந்திரமடைவதற்கான உயர்ந்த முறையே பிரம்மச்சரியம் என்றழைக்கிறோம்.

அந்த சுதந்திரத்தை நிஜமாய் கொண்டாடுபவர்களே பிரம்மச்சாரிகள். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பூரணமான உள் சுதந்திரம் பெறவேண்டும், என முடித்தார்.

எப்படி ஆங்கில மருத்துவராவதற்கு ஐந்து வருட எம்.பி.பி.எஸ். முக்கியமோ, அதேபோலத்தான் வாழ்க்கைக்கு தியானமும்.

தியானம் வயதானவரைவிட வாலிபர்களுக்குத்தான் சிறப்பான பலன்களை தருகின்றது. ஐம்பது வருட குடும்பஸ்தராவதற்கு முன் சில வருடங்களாவது சக்தியை சேமித்துவைக்கப் பழகியிருக்க வேண்டும்.

சக்தி சேமிப்பு,

வாழ்க்கை சேமிப்பு.

இல்லறவாசிகள் கூட நல்லறம் செய்ய சக்தியை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 97 வயதில் கூட துள்ளி விளையாட முடியும். ஆரோக்கியமாயிருக்க முடியும்.

ஆத்ம தியானம்

சக்தி சேமிப்பு?

ஒரு துளி எண்ணத்தைக்கூட வீணாக்கக்கூடாது. வீணான ஒரு எண்ணத்தைக்கூட விட்டு வைக்கக்கூடாது.

இரண்டுமே சக்தி சேமிப்புதான்.

ஐம்புலன்களின் அசைவில்லாமல் தினசரி வாழ்வு சாத்தியமில்லை.

அதற்காக, அவற்றை துஷ்பிரயோகம் செய்வதும் நியாயமில்லை.

இந்தத் துஷ்பிரயோகங்களைத் தடுப்பது யோகம். தாண்டுவது தியானம்.

கண், காது, மூக்கு, நாவு, உடல், மனம் ஆகிய அனைத்தையும் அளவாய் பயன்படுத்துவது தியானம்.

இது ஒருவருக்குள் நிகழ ஆரம்பித்துவிட்டால் அதுதான் பிரம்மச்சரியம். நிஜமான சுதந்திரம்.