KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/முக்தியடையும் முன்பே மகானாகலாம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

முக்தியடையும் முன்பே மகானாகலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Jaggi Vasudev

நம்மைச் சுற்றியிருக்கிற பத்து பேர் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக நாம் செலவழிக்கின்ற சக்தியில், பாதியளவுகூட, நம்மைப் புரிந்துகொள்வதற்காக நமக்கு நாமே செலவழிப்பதில்லை.

உங்களை நீங்களே புரிந்துகொள்வதற்கு, சக்தியை முதலீடு செய்யத் தயாரானால், உங்களுக்காக முக்தியை முதலீடு செய்ய 'கடவுள்' தயார்.

புதுப்பெண் புகுந்த வீட்டில் தன் பெருமையைக் காண்பிப்பதற்காக, "ஏங்க! இன்னைக்கு கேசரி செய்து தரவா?" எனக் கேட்டார்.

கணவன் ரொம்ப சந்தோஷத்தோடு, "சரிம்மா! செய்" எனச் சொல்ல, அந்தம்மா கேசரி செய்ய ஆரம்பித்தார்.

சமையலறைக்குச் சென்றதும் முதல் வேலையாக தன் கைப்பையில் இருந்த சமையல் குறிப்புப் புத்தகத்தை ஆவலோடு திறந்து வைத்தார்.

படிக்கின்ற காலத்தில் இவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளாமல் சும்மா ஊர்சுற்றுவதால் வரும் குளறுபடிகள். கல்யாணமாகிவிட்டதே, என்ற கட்டாயத்தில் பல விஷயங்களை வேறு வழியில்லாமல் கற்றுக்கொள்கிறார்கள். இந்தக் கட்டாயங்களால் தான் இனிமையான இல்லறம் கூட சுமையாகத் தெரிகிறது. அதனால்தான், பலர் இப்படியெல்லாம் பேசுவார்கள்... “நான் சமைக்கக் கத்துக்கிட்டேன் தெரியுமா?”

“ஒத்த ஆளா மொத்த வீட்டையும் பாத்துக்கிறேன் தெரியுமா?”

‘பின்ன பத்துப்பதினைஞ்சு பேர் சேர்ந்தா ஒரு வீட்டைப் பார்த்துக்கொள்ள முடியும்!?’

கற்றுக்கொள்ள வேண்டிய பருவத்தில் எதையெதைக் கற்றுக்கொள்ள தவறுகிறோமோ, அவைதான் பிற்காலத்தில் சுமையாக மாறிவிடுகின்றன.

portrait

எப்போதோ நீங்கள்
சம்பாதித்த நல்ல
குணங்கள்தான்
உங்களின்
இப்போதைய
வாழ்வில் இனிமை
சேர்க்கிறது.

நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், உங்களுக்கு இது பொருந்தும்...

“இந்த வயதில் கொஞ்சம் சோம்பேறித்தனம் காரணமாக வாழ்க்கையை நழுவவிடுவது, சொத்தை நழுவ விடுவதைவிட மிக மிக மோசமானது.

பணத்தை எப்போது வேண்டுமானாலும்
சம்பாதித்துக்கொள்ளலாம். குணத்தை இப்போது
மட்டுமே சம்பாதிக்க முடியும்.

எப்போதோ நீங்கள் சம்பாதித்த நல்ல குணங்கள்தான் உங்களின் இப்போதைய வாழ்வில் இனிமை சேர்க்கிறது.

எனவேதான் எப்போதும் சொல்வேன்...

‘இப்பொழுதை நழுவ விடாதீர்கள்’ என்று.

சரி கதைக்கு வருவோம்.

சமையல் குறிப்புப் புத்தகத்தில் உள்ளபடி கேசரி செய்ய ஆரம்பித்தார் புதுப்பெண். சட்டியை எடுத்து அடுப்பில் வைக்கவும்... என எழுதப்பட்டிருந்ததை படித்து சட்டியை அடுப்பில் வைத்தார்.

அடுத்து, ரவையை வறுக்கவும்... வறுக்க ஆரம்பித்தார்.

தண்ணீரை ஊற்றவும்.. ஊற்றினார்.

சர்க்கரையைக் கொட்டவும்... கொட்டினார்.

கேசரிப் பொடி, ஏலக்காய்க் பொடியைத் தூவவும்... தூவினார்.

இதையெல்லாம் செய்து பார்த்தால், “சுடச்சுட கேசரி ரெடி!” என எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, “ஆஹா! கேசரி ரெடி!” என குஷியாய் சத்தமிட்டு, சுவைக்காக ஒரு பிடி கேசரியை எடுத்து வாயில் போட்டுப் பார்த்தால்... அது கேசரியாகாமல், வெறும் ரவையாகவே இருந்தது.

புத்தகத்தில் போட்டிருந்தபடி, கேசரி ரெடியாகவே இல்லை. காரணம், சமையல் குறிப்புப் புத்தகத்தில் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை.

கேசரி கிண்ட அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும் என்பது மிகமிக அடிப்படையான விஷயம் என்பதால் அதையெல்லாம் புத்தகத்தில் குறிப்பிடமாட்டார்கள்..

அதேப்போல்தான் உங்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுத்தருபவர்கள், “இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்” என்றரீதியில் பல அடிப்படை உண்மைகளைக் குறிப்பிடுவதேயில்லை. மனிதர்களும் அவற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பதேயில்லை.

மனித மனம் இருக்கிறது பாருங்கள், அது ஒரு பெரிய வேதாளம்தான்.

விக்ரமாதித்தனைக் குழப்பிவிட்டுவிட்டு முருங்கை மரத்துக்குத் தாவுவது போலத்தான் மனித மனமும். உங்களுக்குப் புதுப்புது குழப்பங்களை அது தந்துவிட்டு அதன் இஷ்டத்துக்கு வேறு எங்காவது தாவிக்கொண்டேயிருக்கும்.

அதுவும், இன்றைய ஆன்மீக புத்தகங்கள் எல்லாமே முதிர்ந்த ஆன்மீகவாதிகளுக்காகவே எழுதப்படுகின்றன.

இப்பொழுதை நழுவவிடாதீர்கள்.

அறுசுவை உணவுக் குறிப்புகள் போலவே, மிக அருமையான ஆன்மீக குறிப்புகளைக் கொண்ட புத்தகங்கள் வெளிவருகின்றன.

ஆனால் அவற்றில் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும் என்பன போன்ற ஆனந்தத்திற்கான அடிப்படை தியானக் குறிப்புகள் இருப்பதில்லை.

எனவேதான் பல புத்தகங்களைப் படித்து, அவற்றில் குறிப்பிட்டுள்ளபடி ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்த பின்பும், சட்டியில் கேசரி உருவாகாதது போல, முக்தி கிடைப்பதில்லை. பத்து இருபது வருடங்களாக ஆன்மீகவாதியாக இருப்பவர்களுக்குக் கூட முக்தி கிடைப்பதில்லை.

சுவாமி பரமஹம்ச நித்யானந்தா

நிஜத்தில் முக்தி என்பது க்ஷண நேரத்திற்குள் கிடைப்பது தான்.

முக்தி கிடைக்க சில அடிப்படையான சத்தியங்களை மட்டும் புரிந்துகொண்டாலே போதும், ஒரு ஞானி ரெடி. அது நீங்கள் தான்!

ஞானியாகும்வரை
தினம்
தியானம்
செய்ய வேண்டும்.

அவை...

1. ஞானியாகும்வரை தினம் தியானம் செய்ய வேண்டும்.

2. "ஞானியாவதெல்லாம் என்னுடைய இலக்கு அல்ல" என சொன்னால்...

நீங்கள்தான் நிச்சயமாகத் தினம் தியானம் செய்யவேண்டும். குறைந்தபட்சம் உங்களுக்கு ஆரோக்கியமாவது முழுமையாக வேண்டுமல்லவா? அது தியானத்தில்தான் சாத்தியம்.

3. கடவுளை வழிபடுவதைத் தாண்டி... அவர் வழி பட வேண்டும். அவரின் போதனைகளின் வழியில் படவேண்டும். அவற்றை செயல்படுத்துதல் வேண்டும்.

4. மனித உருவில் உள்ள கடவுளை வழிபடாத நாத்திகராக நீங்கள் இருந்தால்கூட... உங்களுக்குள் இருக்கும் அளப்பறிய ஆனந்த சக்தியையும், ஞானத்தையும் அனுபவிக்க வேண்டும், அடைய வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும். 5. இவையெல்லாவற்றையும் பெறவேண்டுமானால்.. அதற்கு மனதைப் பற்றவைக்க வேண்டும். அதற்கு தியானம் செய்ய வேண்டும்.

ஆத்ம தியானம்

ஜென் மாணவனிடம் குதர்க்கவாதி ஒருவர் பலபேர் முன்னிலையில் எக்குத்தப்பான கேள்வியொன்றைக் கேட்டார்.

குதர்க்கவாதி:நீங்கள் ஆணா? பெண்ணா?
ஜென் மாணவன்:நான் உன்னை மாதிரி... எனச் சொன்னார். கேள்வி கேட்டவர் அங்கேயே அமர்ந்துவிட்டார்.

உங்களை நீங்களே புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டால், தினம் ஒரு தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டால், நீங்கள் ஸ்திரமானவராக மாறிவிடுவீர்கள். எதுவும் உங்களைப் பாதிக்காது.

அதுமட்டுமல்லாமல் எப்பேர்ப்பட்ட குதர்க்கங்களையும் கூட எளிதாய் சமாளித்து வெளிவந்துவிடுவீர்கள்.

பக்தர் ஒருவர் கேட்டார் , "குதர்க்கமாய் பேசுபவர்களைச் சமாளிப்பது எப்படி? அவர்கள் என்னைக் கெட்டவர்களாகவே பார்க்கிறார்கள்... என்ன செய்ய?"

அதற்கு சொன்ன பதில், "நல்லவர்களாய் இருப்பது மட்டும் முக்கியமல்ல, நீங்கள் நல்லவர்தான் என்பதை நிரூபித்தும்காட்ட வேண்டும்."

இது கலியுகம்!

நீங்கள் நல்லவர்கள்தான் என்பதை எல்லோரும் இனிமையாய் புரிந்துகொள்ளும் வகையில், உங்களின் உடை, நடை, பாவனை, சொல், செயல் மூலம் நிரூபிப்பது எப்படி? என்பதைப் பற்றித் தியானியுங்கள். அப்போது வரும் பதில்களை எழுதிக்கொள்ளுங்கள். எழுதியவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துங்கள்.

"முக்தியடையும் முன்பே மகானாகிவிடுவீர்கள்".

நீங்களும் செய்து பாருங்களேன்...