ஆசைகளை அடையும் சக்தியைப் பெறுவதே ஆன்மீகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கடன் வாங்குவதுபற்றி ஒருமுறை சொல்லிக்கொண்டு இருந்தபோது என்னிடம் ஒருவர், "5 லட்சம், 10 லட்சம் கடன் வாங்கினால்தான் நாம் கஷ்டப்பட வேண்டும், கவலைப்பட வேண்டும்.
50 லட்சம், 1 கோடி கடன் வாங்கினால், கடன் கொடுத்தவர்தான் கஷ்டப்படுவார். நமக்கு கவலை இல்லை" என்றார்!
மேலும் அவர்...
"ஐந்து லட்சம், 10 லட்சம் வரைக்கும் வாங்கினால் திருப்பிக் கொடுக்க வேண்டுமே என்கின்ற பயம் நமக்கு இருக்கும். கஷ்டம் இருக்கும்.
ஒரு அளவுக்கு மீறி வாங்கிவிட்டபின், நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர்கள் வேண்டிக் கொள்வார்கள்.
நம் உடம்பு நன்றாக இருக்க வேண்டும், நம் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று, நம்மைவிட அவர்கள் நமக்காக தொடர்ந்து வேண்டிக்கொண்டு இருப்பார்கள்.
நாம் நன்றாக இருக்க வேண்டுமென்று அவர்கள் கோவில் கோவிலாகப் போய், பூஜை செய்துகொண்டு இருப்பார்கள்" என்று சொன்னார்.
வெளியுலகத்தில் அதிகமாகக் கடன் வாங்கினால், கடன் வாங்கியவருக்கு லாபம், கடன் கொடுத்தவருக்கு நஷ்டம்.
ஆனால் உள்ளுலகில் கடன் வாங்கினால், கொடுத்தவருக்கு நேரடியாக லாபமோ, இல்லையோ ஆனால் கடன் வாங்கியவருக்கு நேரடியாக நஷ்டம்.
பல நஷ்டங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அருமையான கட்டுரைக்குள் நுழைவோம்.

வாழ்வதற்கு
ஆசைகள்
அடிப்படையான
பிராணன்
போன்றது.
முதலில் ஒரு சத்தியம்...
ஆசைகள் இல்லாமல் வாழ்வது என்பது, சாத்தியமே இல்லை.
There is no chance to live without desires
வாழ்வதற்கு ஆசைகள் அடிப்படையான பிராணன் போன்றது.
உயிர் போன்றது.
இயங்கும் எந்தவொரு மனிதருக்கும் ஆசை என்பது தவிர்க்க முடியாத ஒரு பாகம்.
எருமை மாட்டுக்குத்தான் ஆசைகளே இருக்காது. காலையில் எழுந்த உடன் சாப்பிடும். அதன்பின் படுத்துக் கொள்ளும். மழை பெய்தாலும் சரி, வெயிலடித்தாலும் சரி, அப்படியே இருக்கும்.
ஆசைகள் இருக்கவேண்டுமென்பதற்காக, ஆசைகளைக் கடன் வாங்கச் சொல்லவில்லை.
பணத்தைக் கடன் வாங்குவது மனிதர்களின் இயல்பு. ஆனால் இப்போது அடுத்தவர்களிடமிருந்து ஆசைகளைக்கூட கடன் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
பிறர் ஆசைகளையும், பிறர் வாழும் வாழ்க்கை முறையையும்கூட, அடுத்தவர்களிடம் இருந்து கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது.
பக்கத்து வீட்டுக்காரர், அவர் வீட்டிற்கு குளிர்சாதனப்பெட்டி வசதி வாங்கினார் என்றால், இங்கு உடனடியாக நம் வீட்டிலும், அதேபோன்று குளிர்சாதனப்பெட்டி வசதி இல்லாமல் நம்மால் வீட்டுக்குள் இருக்க முடியாது.
இல்லை என்றால் என்னாகிறது?
நம் வீட்டு வெப்பம் திடீரென்று அதிகமாகிவிடுகிறது.
மனைவி சொல்வார்,
"அட! அவரெல்லாம் ஏ.சி போட்டுவிட்டாரே நம் வீட்டிலும் வாங்கி வைத்துக்கொள்வோம். அடிக்கடி உபயோகிக்காமல் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால், நமக்கென்று கண்டிப்பாக ஒரு ஏ.சியாவது இருக்கட்டும். வாங்கிக்கொண்டு வாருங்கள். நாமும் பத்து இடத்திற்குப் போய் வருகிறோம். மற்றவர்கள்முன் கவுரவமாக இருக்க வேண்டுமல்லவா? அதுக்காகவே நமக்கென்று ஒன்று வாங்கிக்கொண்டு வாருங்கள்" சொல்வார்.
பக்கத்து வீட்டுக்காரர் வாங்கினார் என்பதற்காக, அது நமக்கு அலர்ஜியாக இருந்தாலும், அதைத் தேவையின்றியே வாங்கி வந்து மாட்டி வைத்துக்கொள்கிறோம்.
அதன்பின் 'வாங்கி விட்டோம்' என்பதற்காக, இரண்டுநாள் உபயோகப்படுத்தி, உபயோகப்படுத்தியதால் வரும் அலர்ஜிக்கு கடன் வாங்கி, மருத்துவரிடம் வைத்தியம் பார்த்து... என்று இதுபோன்ற சம்பவங்கள் நம் வாழ்வில் எத்தனை நடந்தாலும், அடுத்தவரிடம் இருந்து அந்த ஆசைகளை வாங்குதல் என்கின்ற குணத்தை மட்டும் நாம் விடுவதே இல்லை. அதைப் பற்றி யோசிப்பதுகூட இல்லை.
நாம் வெறுமனே பணத்தை மட்டும் கடன் வாங்காமல், ஆசைப்படும்
அடுத்தவரிடம் இருந்து ஆசைகளை வாங்குதல் என்கின்ற குணத்தை மட்டும் நாம் விடுவதே இல்லை. மனத்தையும் கடன் வாங்கத் துவங்கிவிடுகின்றோம். இந்தப் பழக்கத்திலிருந்து ஒருவர் காப்பாற்றப்பட்டுவிட்டாலே பல நஷ்டங்களில் இருந்து அவரைக் காப்பாற்றி விடலாம்.
ஆழ்ந்து உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், இந்த அடிப்படையான உண்மை புரியும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... ஆசைகளை அழிப்பதோ, அடக்குவதோ ஆன்மீகத்தின் லட்சியம் அல்ல.

உண்மையான
ஆன்மீகம் என்பது,
"ஆசைகளை
அடக்குவதோ,
அழிப்பதோ
அல்ல. ஆசைகளை
ஆராய்வது.
உண்மையான ஆன்மீக வாழ்க்கை, உண்மையான ஆனந்த வாழ்க்கை, உங்களின் ஆசைகளைப் புரிந்துகொள்வதினால்தான் ஏற்படும். அடக்குவதனாலோ அல்லது அழிப்பதனாலோ, உங்களுக்குள் நீங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வீர்களே தவிர, எந்த விதமான நல்லதையும் நீங்கள் செய்துகொள்ளமாட்டீர்கள்.
அடக்குகின்ற ஆசைகள், அடக்கப்படுகின்ற ஆசைகள், உங்களுக்குள் எரிமலைபோல் பொங்க ஆரம்பித்து, வேறு ஏதாவது ஒரு ரூபத்திலே வெளிப்பட்டே தீரும்.
ஒரு இரண்டு நாள் சாப்பிடாமல் விரதம் இருந்து பாருங்கள், மூன்றாவது நாள் கனவில் பெரிய விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள்.
நீங்களே ஆராய்ந்து பார்க்கலாம். அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை இருந்து, ஏதோவொரு காரணத்திற்காக, யோசிக்காமலே ஆராய்ந்து பார்க்காமலே எந்தெந்த ஆசைகளை அடக்குகின் றாமோ, அந்த ஆசைகள் வேறு ஏதாவது ரூபத்திலே வந்து, நம்முடைய உடம்பையும், மனதையும் தாக்கும்.
அதனால்தான் சொல்கிறோம், உண்மையான ஆன்மீகம் என்பது, "ஆசைகளை அடக்குவதோ, அழிப்பதோ அல்ல. ஆசைகளை ஆராய்வது."
அடக்குவதனாலோ அல்லது அழிப்பதனாலோ, உங்களுக்குள் நீங்களே பிரச்சினைகளைத்தான் உருவாக்கிக்கொள்வீர்களே தவிர, எந்தவிதமான நல்லதையும் நீங்கள் நேரடியாக செய்து கொள்ளமாட்டீர்கள்.
அடக்குகின்ற ஆசைகள், உங்களுக்குள் எரிமலைபோல் பொங்க ஆரம்பித்து வேறு ஏதாவது ஒரு ரூபத்திலே வெளிப்பட்டுவிடும்.
உண்மையிலேயே மனத்தெளிவோடு நீங்கள் உங்கள் ஆசைகளை ஆராய்வீர்களானால், ஆராய்ச்சியினாலேயே, ஆராய்வதனாலேயே தேவையில்லாமல் உங்களுக்குள் சேர்த்து வைத்திருக்கும் ஆசைத்தன்மைகள் தானாகவே அழிந்துவிடும்.
ஆசைகளை ஆராய ஆரம்பிப்பதே ஆசைகளைப் பற்றிய தெளிவைத் தரும்.
கடன் வாங்கிய ஆசைகள் தாமாக வலுவிழந்து உங்களை விட்டு விலக ஆரம்பிக்கும்.
சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சக்தியைப் பெறுவீர்கள்.
உங்களுக்குள், ‘ஆசைகளை ஆராய்தலைச்’ செய்ய ஆரம்பித்தீர்களானால், உங்களின் அகவுலக வாழ்க்கை இனிமையாவதுபோல், புறவுலக வாழ்க்கையும் இனிமையாக அமையும்.
புறவுலக வாழ்க்கையை இனிமையாக்கவும், அகவுலக வாழ்க்கையை ஆனந்தமாக்கவும் உங்கள் ஆசைகளை ஆராய்ந்து பாருங்கள். சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சக்தி பெறுவீர்கள். உங்கள் சொந்த ஆசைகள் நிச்சயம் நிறைவேறும். அதை முதலில் நிறைவேற்றும் புத்திசாலித்தனத்தைப் பெறுவீர்கள்.
ஆசைகளை ஆராய ஆரம்பிப்பதே ஆசைகளைப் பற்றிய தெளிவைத் தரும்.