வாழவும், வளரவும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“இல்லமும், உள்ளமும் தித்திக்க” என்ற தலைப்பில் தியான சத்சங்கம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது, கல்லூரி மாணவர் ஒருவர் கேட்டார், “காதல் என்பது மனிதனுக்கு அவசியமான ஒன்றுதானா? அது இல்லாமல் வாழவே முடியாதா?” என்று என்னிடம் கேட்டபோது சொன்னேன்...
“உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் இருக்கும் அளவுகடந்த அன்பை வெளிக்கொண்டுவரும் இனிய நிகழ்வுதான் காதல்.
உங்களை உங்களுக்கே புரிய வைப்பதுதான் உறவு. அது உங்களை உங்களுக்கே கண்டுபிடித்துத் தருவது.
'நானா இப்படி மாறிப்போனேன்?! எனக்குள்ளா இவ்வளவு ரசிப்புத்தன்மையும், சகிப்புத்தன்மையும் ஒளிந்திருந்தது?! என்னாலும் இன்னொரு மனிதருக்காக தியாகம் செய்ய முடியுமா?’ -என்று உங்களை வியப்பிற்குள்ளும், ஆச்சரியத்திற்குள்ளும் ஆழ்த்துமளவிற்கு வளர வைப்பதுதான் உறவு, அன்பு, காதல். இதை உணர்த்துபவர்தான் காதலர்.
'எனக்குள்ளா இவ்வளவு சக்தியும் ஒளிந்திருந்தது?
என்னிடமிருந்துதான் இவ்வளவு புத்திசாலித்தனமும் வெளிப்பட்டதா! எங்கிருந்து இவ்வளவு ஆனந்தமும், ஞானமும் எனக்குக் கிடைத்தது?,
- என உங்களைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுமளவிற்கு உங்களை வளர வைப்பவர்தான் குருநாதர்'.
"இந்த ஆழ்ந்த உறவைத்தான் காதல், அன்பு, பக்தி என்று சொல்கின்றோம்.
விழிப்புணர்வோடு செயல்பட ஆரம்பித்தால் உறவுகள்கூட உங்களைத் தியானத்தில் ஆழ்த்தும்".

உங்களைப் பார்த்து
நீங்களே
ஆச்சரியப்படும்
அளவிற்கு உங்களை
வளர வைப்பவர்தான்
குருநாதர்
துரத்தும் நாயைக் கண்டதும் பயந்து நடுங்கக்கூடிய இளம் பெண்ணாக ஒருவர் வளர்ந்திருக்கலாம். ஆனால், தான் பெற்ற கைக்குழந்தையோடு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது தன் குழந்தையைத் தாக்க வந்தது புலியாக இருந்தால்கூட, அதைக் கையிலிருக்கும் முறத்தைக் கொண்டு துரத்துமளவிற்கு சக்தி வந்துவிடும். தைரியம் வந்துவிடும்.
இதுதான் உறவு!
இதுதான் அன்பு!
மனிதரை வளரச்செய்யும் அன்பு மனிதருக்கு தேவையானதுதான்.
சூஃபி ஞானியிடம் குடும்பஸ்தர் ஒருவர் இப்படியொரு கேள்வியைக் கேட்டார், "புதிதாய் மனிதர்களிடம் பழகுவதற்கு அச்சமாக இருக்கின்றது. சில நேரங்களில் இந்த அச்சம் உச்சத்திற்கு போய், வீட்டிலிருக்கும் நான்கைந்து நபர்களிடம் மாட்டிக்கொண்டு மாய்வதற்குப் பதிலாக, நான்கைந்து செல்லப் பிராணிகளை வாங்கி அவற்றோடு மட்டுமே நிம்மதியாய் வாழ்ந்து விடலாமா என்றெல்லாம் தோன்றுகிறது. இது சரியா?"
அதற்கு ஞானி சொன்னார், "மிருகங்களோடு பழகுவது வெகுசுலபம். ஏனென்றால் உங்களின் அகங்காரத்தை அவை பாதிப்பதில்லை.
ஆனால், மனிதர்களோடு பழகும் ஒவ்வொரு நொடியும் உங்களின் அகங்காரத்திற்கு அடிவிழுந்துகொண்டேயிருக்கும்.
அகங்காரத்தை விட்டுவிடத் தயாராயில்லாதவருக்குத்தான் தனக்கு மட்டும் தொடர்ந்து அடிவிழுவது போலவே இருக்கும். அகங்காரத்தை விட்டுவிடத் தயாராயிருக்கும் ஒருவருக்கு, மனிதர்களோடு பழகுவதென்பது இனிமை மிகுந்த ஒன்றாக இருக்கும்.
நீங்கள் இப்போது முடிவு செய்ய வேண்டியது...
மனிதர்களா? மிருகங்களா? என்பதல்ல,
அகங்காரத்தை விட்டுவிடலாமா? இல்லையா? என்பதே!''
தன் புலம்பலுக்கு வெறும் சமாதான வார்த்தைகளை மட்டும் தராமல், புலம்பலைவிட்டு புதுப்பொலிவு பெறுவதற்கான வழியையே காட்டிய ஞானியை நன்றி பொங்க பார்த்த குடும்பஸ்தர் மீண்டும் கேட்டார்.
"பழைய உறவுகள் என்னைப் பாதிக்குமளவிற்கு என் அகங்காரம் இருந்ததால்தான் நான் இவ்வளவு பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றேன் என்பதெல்லாம் புரிகின்றது.
புது மனிதர்களிடம் கூட அச்சம் வருகின்றதே!
இது ஏனென்றுதான் புரியவில்லை.''
ஞானி மிக அழகாய் பதில் சொன்னார், "உங்களுடைய வீட்டு நிலைப் படியில் எத்தனையோ முறை "நங்!'' என்று இடிபட்டிருப்பீர்கள். வலியால் துடித்துடித்துப் போயிருப்பீர்கள்.
அகங்காரத்தை விட்டுவிடத் தயாராயில்லாதவருக்குத்தான் தனக்கு மட்டும் தொடர்ந்து அடிவிழுவது போலவே இருக்கும். அகங்காரத்தை விட்டுவிட தயாராயிருக்கும் ஒருவருக்கு, மனிதர்களோடு பழகுவதென்பது இனிமை மிகுந்த ஒன்றாக இருக்கும்.
துடிதுடிக்க வைத்த பல வலிகளில் ஒன்றுகூட இப்பொழுது நினைவில் இருக்காது. ஆனால், ஒரே ஒருமுறை கன்னத்தில் விழுந்த அறையை நினைத்தால்கூட வலியும், வேதனையும் பொங்கும்.
இது எப்படி என்றால் தன் கையைக் கொட்டிய குளவியை “என்னையா கொட்டினாய்?” என்று சொல்லி கைக்குள்ளேயே பிடித்து வைத்துக்கொள்வதைப் போன்றது.

மனதில் பிடித்து
வைத்திருக்கும்
தேவையில்லாத
உணர்வுகளை விட
ஆரம்பித்தாலே
அகங்காரத்தின்
பிடி தளர
ஆரம்பித்துவிடும்.
நாம் பிடித்து வைத்திருக்கும் வரைதான்
குழவியானது கொட்டிக் கொட்டி வேதனை
தந்துகொண்டேயிருக்கும். அதேபோல் நாம்
பல வேதனைகளை மனதில் பிடித்து வைத்துக்
கொண்டிருக்கின்றோம்.
மனதில் பிடித்து வைத்திருக்கும் தேவையில்லாத உணர்வுகளை விட ஆரம்பித்தாலே அகங்காரத்தின் பிடி தளர ஆரம்பித்துவிடும்.
அகங்காரத்தின் பிடி தளர்ந்துவிட்டால்...
இம்மூன்று அதிசயங்கள் நிகழும்.
புதுமனிதர்களைப் பார்ப்பதே இனிமையாய் இருக்கும். அவர்களோடு பழகுவதை நினைத்தாலே அது பரவசமாய் இருக்கும். பழக ஆரம்பித்துவிட்டால் அது ஆனந்தமாயிருக்கும்.” எனச் சொல்லி முடித்தார் ஆனந்தமாய் வாழ்ந்த சூஃபி ஞானி.
மனித உறவுகள் தனி மனிதருக்குள் ஆனந்தமயமான உணர்வுகளை ஊற வைக்கும் ஊற்றுகள். இவ்வுண்மையை உணர்ந்து பழக ஆரம்பிக்கும் மனிதர்கள் வளர ஆரம்பிப்பார்கள்.
அப்புறம்தான் உறவுகள் உயர்வுதரும் என்பதை உணர ஆரம்பிப்பார்கள்.
ஆத்ம தியானம்
வாழவும், வளரவும் தியானம்
“நான் ஒருவரை மிகவும் நேசிக்கின்றேன். அவரும் என்னை நேசித்தார். ஆனால் அவரோடு வாழும் பாக்கியம் கிடைக்கவில்லை.
அவருக்கு வெளிநாட்டில் பெரிய வேலை கிடைத்ததும் ரொம்பச் சுலபமாக... “சரி! சரி. இது பெரிய வாய்ப்பு. நான் போக வேண்டியிருக்கிறது. திரும்பி வர மூன்று வருடங்களாகும்.” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
அவரால் சுலபமாக பிரிந்துவிட முடிந்தது. என்னால் முடியவில்லை. ரொம்ப கஷ்டமாகயிருக்கிறது. அவர் செய்தது சரியா? ஒருவேளை, நான் இப்படிச் செய்திருந்தால் அது ஒழுக்கக்கேடாகி விடாதா?” என்று பெண்மணியொருவர் பெங்களூரு ஆஸ்ரமத்தில் நடைபெற்ற சிகிச்சையின்போது என்னிடம் கேட்டார்.
அப்போது அவரிடம் சொன்னேன்...
“ஒழுக்கக்கேடு என்று பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டு ஏன் இப்படி உங்களை வருத்திக் கொள்கின்றீர்கள். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதுதான் வளர்ச்சி. வளரத் தெரிந்தவர்தான் வாழத் தெரிந்தவர்.
உங்களின் நேசத்திற்குரியவர் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டதுபோல் நீங்கள் வாழவேண்டியதில்லை. ஆனால் என்றைக்கு இதற்குப்பிறகு நம்மால் செய்வதற்கு எதுவுமில்லையென்று புரியவருகின்றதோ, அன்றைக்கே நம்மையும் மாற்றிக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.”
இங்கு ஒரு ஆழமான தியான சூத்திரத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள். “உறவுகள் உணர்வுகளை உய்விக்கத்தான். அது உங்களை இன்னும் அருமையானவராக்கத்தான்.
உங்களின் உணர்வுகளை மற்றவர்கள் இனிமையாக்கினாலும் சரியே. அப்படியில்லாத பட்சத்தில், அவர்கள் நம் வாழ்வை கசப்பாக மாற்றுவதிலிருந்து நம்மை மாற்றியமைத்துக் கொள்வதும் சரியே.”
உங்களுக்காகத்தான் வாழ்வானது அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது.
வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்டவரல்ல நீங்கள்.
இனிமையான மனிதர்களைத் தேடிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, நீங்கள் மாறுவதற்காக உழையுங்கள். பழகுங்கள்.
அதன்பிறகு புரியும், ஒவ்வொரு மனிதரும் உங்களுக்குள்ளிருக்கும் ஒவ்வொரு புதுப்புது அதிசயங்களை வெளிக் கொண்டுவருபவர்கள் என்று!
மேலுள்ள தியான வரிகள் உங்களை வாழவும் வைக்கும், வளரவும் வைக்கும்.