KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/அன்புSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

அன்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

“நான் உலகத்தையே நேசிக்கிறேன். ஆனால் என்னை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே?”

“ஒரு ஈ, எறும்புக்குக் கூட துரோகம் செய்ததே இல்லையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?”

“இராத்திரி, பகலாக எல்லோருக்காகவும் உழைத்தேன். ஆனால் கண்ட பலன் ஒன்றுமே இல்லையே?”

இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்று உங்களுக்குள் இருக்கிறதா?

உங்களுக்கான பதில்கள் மட்டுமல்ல, தீர்வே உள்ளுக்குள் காத்திருக்கிறது தொடருங்கள்.

எதையும் எதிர்பார்த்து இருப்பதல்ல உறவு.

Relationship is not expecting something.

‘வாஜஸ்பதி மிஸ்ரா’ என்பவர் ‘பிரம்ம சூத்திரம்’ என்கிற நூலுக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய உரையைப்போல வேறு யாரும் உரை எழுத முடியாது என்கிற அளவுக்கு உலகத்தில் உள்ள எல்லாத் தத்துவங்களையும் உள்ளடக்கி உரையை எழுதினார்.

அவர் அந்த உரையை எழுதத் துவங்குவதற்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம். வாஜஸ்பதியின் குரு அவரிடம் சொன்னார், "பிரம்ம சூத்திரத்திற்கான உரையை நீதான் எழுத வேண்டும். என் மகளைத் திருமணம் செய்து கொள். எனக்கு வயதாகிவிட்டது. திருமணத்தைப் பார்க்கும் வரைகூட நான் உயிரோடு இருக்க மாட்டேன் போலிருக்கிறது" என்று சொன்னார்.

"நான் கூடிய சீக்கிரமே இறந்து விடுவேன். அதனால் மிகச் சிறப்பாக அதனைச் செய்துவிடு" என்று சொல்லிவிட்டு சில நாட்களிலேயே உயிரை விட்டுவிட்டார்.

குரு சொன்னபடியே திருமணம் நடந்தது. வாஜஸ்பதியும் தனிக்குடித்தனம் ஆரம்பித்து, உரையை எழுதத் துவங்குகிறார்.

Jaggi Vasudev

இவ்வளவு
அர்ப்பணிப்பு
உணர்வோடும்
ஒரு பெண் இருக்க
முடியுமா?

காலம் கடந்தன. வருடங்கள் உருண்டோடின.

உரை எழுதி முடித்தாகி விட்டது. 'இந்த நூலுக்கு என்ன பெயர் வைக்கலாம்' என்று யோசித்துக் கொண்டிருந்தார் வாஜஸ்பதி.

தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, அவர் அருகில் இருந்த விளக்கிற்கு ஒரு பாட்டி நெய் ஊற்றி விளக்கேற்றிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.

"அம்மா, நீ யார்?" என்று கேட்டார் வாஜஸ்பதி.

"நான்தான் உங்கள் மனைவி. என்னைத் திருமணம் செய்து கொண்டதும் நீங்கள் குருவின் ஆணையை ஏற்று உரையை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.

உங்களுக்கு எந்தத் தொல்லையும் தராமல் வேண்டிய உதவிகளை பக்கத்திலிருந்து செய்து வருகிறேன்" என்று பவ்யமாகச் சொன்னார்.

வாஜஸ்பதிக்கு ஒரே பரிதவிப்பாக இருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் பரவசம் அடைந்தார். இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடும் ஒரு பெண் இருக்க முடியுமா?

மிஸ்ரா கேட்டார், "என் கவனத்தை ஒரு முறையாவது திருப்பியிருக்கக் கூடாதா? உன்னை யார் என்று காட்டியிருக்கக் கூடாதா? உன் வாழ்க்கையை நான் வீணடித்து விட்டேனே!" என்று உருக்கத்தோடு அழுதார்.

அதற்கு அவள் பதில் சொன்னாள், "உங்களுக்கு சேவை செய்வது ஒன்றே எனது பாக்கியம். அது நிறைவேற நீங்கள்தான் எனக்கு உதவினீர்கள்.

உங்களைத் திருமணம் செய்து கொண்டதால்தான் எனக்கு இந்த பாக்கியம் கிடைத்தது. இதற்கு எனது அநேக கோடி நன்றிகள்" என்று உள்ளம் நெகிழ்ந்து சொன்னாள்.

அவள் பெயர்தான் பாமதி. இந்தப் பெயரையே அவர் எழுதிய பிரம்மசூத்திர உரைக்குப் பெயராக வைத்தார்.

பல ஆண்டு காலம் பாமதியை எதையும் எதிர்பார்க்காமல் இயங்க வைத்தது எது?

அள்ள அள்ளக் குறையாமல் பெருகும் அன்பு என்னும் சக்திதான்.

இப்படி அன்பு பொங்க வாழ்வதுதான் ஜீவன் முக்த வாழ்வு.

இதை உணர்ந்தவர்களுக்கு வாழ்க்கை மிகச் சிறந்த பரிசு. வாழ்க்கை எப்படியிருந்தாலும் சரி அதைக் கொண்டாட இதுபோன்ற அன்பானவர்களால்தான் முடியும். ஜீவன் முக்தர்களால்தான் முடியும்.

நமது உறவுகள் அனைத்தும் எதையோ எதிர்பார்த்துத்தான் இருக்கிறது.

"மகன் எதிர்காலத்தில் தன்னைக் காப்பாற்றுவானா?"என்று ஒரு தந்தை எதிர்பார்க்கிறார்.

"அப்பா தனக்கு நிறைய சொத்து, சுகத்தைச் சேர்த்து வைப்பாரா?" என்று மகன் எதிர்பார்க்கிறான். இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்பு பொங்க வாழ்வதுதான் ஜீவன் முக்த வாழ்வு.

சிலர் பணத்தை, புகழை, பதவியை எதிர்பார்ப்பார்கள். "ஆனால்... நான் அப்படியெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல" என்பவர்களின் எதிர்பார்ப்பு இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் கவனம், முக்கியத்துவம், ஈர்ப்பு ஆகியவற்றை அன்பு என்ற பெயரிட்டு, அதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

கேட்பதை நிறுத்தி, கொடுக்க ஆரம்பித்தால் நீங்கள் அன்பை வீசும் தென்றல் காற்றாக மாறுவீர்கள்.

ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பீர்கள். நீங்கள் ஆனந்தமாய் இருப்பதோடு, மற்றவர்களையும் ஆனந்தமாய் வைத்திருக்கும் ஜீவன் முக்தர்கள் ஆவீர்கள்.

ஆத்ம தியானம்

நம்மை நாமே திருப்திபடுத்திக் கொள்வதற்கோ, நம்முடைய ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கோ நமக்கு அக்கறை இல்லை.

இதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையும் அடுத்தவர் கையில் இருக்கும் டிவி ரீமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்டுவிக்கப்படும் டி.வி. போலாகிவிடுகிறது. மற்றவர்களுக்காக நடனம் ஆடவும், அவர்களின் மகிழ்ச்சிக்காக நம்மைக் கஷ்டப்படுத்திக் கொள்வதிலும் நம்முடைய நாட்கள் கழிகின்றன. தொடர்ந்து ஆட்டுவிக்கப்படுகிறோம்.

மற்றவர்களின் சிறு சிறு மகிழ்ச்சிக்காக நம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிடுகிறோம். இதையேதான் எல்லோரும், எல்லோருக்காகவும் செய்கிறார்கள் என்பது விந்தை.

உங்களுக்கான வாழ்வை நீங்கள் வாழும்போதுதான் வாழ்ந்த திருப்தியை அடைவீர்கள்.

இது சுயநலம் அல்ல. உண்மையாகவே மனித குலம் வாழ ஆரம்பிப்பதற்கான தீர்வு.

முதலில் நீங்கள் திருப்தியாய் வாழ வேண்டும். அப்புறம்தான், அதை மற்றவர்களுக்குள்ளும் உருவாக்கும் ஜீவன் முக்தராக முடியும். முதலில் உங்களுக்காக வாழ ஆரம்பியுங்கள்!

Portrait