KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/வாழ்வியல் இரகசியம்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

வாழ்வியல் இரகசியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களின் உடலே இந்த உலக வாழ்வை வாழ்ந்து முடிப்பதற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணைதான். மனம் என்பது வாழ வந்த இடத் தில் உங்களைப் பிடித்துக்கொண்ட இன்னொரு வாழ்க்கைத்துணை.

எனவே நீங்கள் திருமணமானவரா? இல்லை துறவியா? என்பதைவிட உங்களின் சம்ஸ்காரத்தை எரித்து நீங்கள் முழு மனிதராவதுதான் முக்கியம். முழு மனிதராக மாறத் தயாராகுங்கள்.

ஆத்ம தியானம்

ஜாதகம் பார்ப்பது, பொருத்தம் பார்ப்பது என்பதெல்லாம் யாரும் யாரும் ஒன்றாய் வாழ்ந்தால் நன்றாயிருக்கும் என்பதற்காக அல்ல. யாரும் யாரும் ஒன்றாய் வாழ்ந்தால், சீக்கிரமாய் இருவரின் சம்ஸ்காரங்களும் எரிந்து தீர்ந்து போகும். எவ்வளவு சீக்கிரமாய் இருவரின் சம்ஸ்காரங்களைத் தீர்த்து முழு மனிதர்களாவார்கள் என்பதைக் கணிக்கத்தான் ஜாதகம்.

எந்த இருவர் ஒன்றாய் வாழ்ந்தால் அவர்களின் வாழ்வே ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் என்று கண்டறிந்து சொல்வதற்கு உதவும் அறிவியல்தான் ஜாதகம்.

இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொண்டாலேபோதும், முழுமைத்தன்மையைப் பெற ஒருவருக்கொருவர் எப்படி உதவுவது? என்று ஆழமாய் யோசிக்க ஆரம்பிப்பீர்கள்.

> வாழ்வின் போக்கே புதுத் திசை நோக்கித் திரும்பும். > வாழ்க்கைக்கே புது அர்த்தம் கிடைக்கும்.

கடமைக்காகவோ, சமுதாயத்திற்காகவோ, பாதுகாப்பிற்காகவோ, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது இல்லறம் அல்ல.

முழுமைத்தன்மைக்காகவும் பூரணத்தன்மையை அடைவதற்காகவும் ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்து வாழ்வதே இல்லறம்.

முழுமைத்தன்மையை அடைவதற்காக, தடையாயிருக்கும் எல்லா உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் தாண்டிக் கடந்து வாருங்கள். முக்கியமாக உங்களோடு வாழ்பவர்கள் அவற்றைக் கடந்துவர உதவுங்கள். இது பெரிய வாழ்வியல் தியானம்.

எனவே, உங்களோடு வாழ்பவர்களின் வாழ்வை உயர்த்துங்கள் உயர்த்தப்படுவீர்கள்.

மாற்றங்களை முழுமையாக்குங்கள், முழுமையாவீர்கள்.