KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/உயர்த்துங்கள்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

உயர்த்துங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உயர்த்தப்படுவீர்கள்

portrait

இரborderசியங்களைத் தெரிந்து கொள்வதில் எல்லோருக்குமே பெரிய ஆர்வம் உண்டு. அதுவும் அடுத்தவர்களின் இரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் பெரிய சுவை எல்லோருக்கும் உண்டு.

இன்று உங்களின் முக்கியமான இரகசியம் ஒன்றைப்பற்றி தெரிந்துகொள்வோம்.

ஜென் கேள்விகளின் பதில்களைப் புரிந்துகொள்ள கட்டுரைக்குள் நுழையலாம்.

எதுவுமே...
தெரியாதவரை அது இரகசியம், புதிர்.
தெரிந்துகொண்ட பின் அது செய்தி, வழி.
தெரிந்ததை அனுபவமாக்கினால் அதுவே அனுபவம்,
ஞானம்.

தர்க்கவாதி ஒருவர் ஜென் ஞானியிடம், "நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவேயில்லை? இதற்கான தியானப்பூர்வமான விளக்கத்தை சொல்ல முடியுமா?" எனக் கேட்டார்.

விதண்டாவாத தொனியில் கேட்டவரிடம் ஜென் ஞானி கேட்டார், "நீங்கள் எதற்காக திருமணம் செய்துகொண்டீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்".

"எதற்காக என்றால்! என்ன பதில் சொல்வது. அப்படித்தான் உலகத்தில் வழக்கமிருக்கிறது. பெரியவர்கள் வகுத்துத் தந்த வழி இது..." என்று பதில் சொல்லத் தடுமாறியவரிடம்,

ஜென் ஞானி, "தடுமாறாதீர்கள்!

திருமணத்திற்கே தியானப்பூர்வமான விளக்கமிருக்கின்றது. முதலில் அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

portrait

பூரணத்துவம்
நோக்கி ஒவ்வொரு
உயிரும் செய்யும்
நீண்ட பிரயாணம்,
முழு மனிதராவது!
அதற்காகவே
வாழ்வது!

வாழ்வே ஒரு பெரிய தவம். பூரணத்துவம் நோக்கி ஒவ்வொரு உயிரும் செய்யும் நீண்ட பிரயாணம், முழு மனிதராவது! அதற்காகவே வாழ்வது!

நீங்கள் தனி மனிதராக இருந்தாலும், திருமணமானவராக இருந்தாலும், உங்களின் மனமும், அதிலிருந்து பொங்கும் உணர்ச்சிகளும், எண்ணங்களும் உங்களை வாட்டிக் கொண்டேயிருக்கும். அவற்றோடு நீங்கள் போராடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

உணர்ச்சிகளையும், எண்ணங்களையும், பொங்க வைக்கும் சம்ஸ்காரங்களோடு தனி ஆளாகப் போராடி ஜெயிக்கலாமா? இல்லை, இருவராகச் சேர்ந்து போராடி ஜெயிக்கலாமா? என்ற முடிவுதான் ஒருவரை சந்நியாசியா இல்லை சம்சாரியா என முடிவு செய்கின்றது''. எனச் சொல்லி முடித்தார்.

திருமணம் என்பது வாழ்வில் அடுத்தடுத்துச் செய்யப்பட வேண்டிய சமூகக் கடமைகளில் ஒன்றல்ல. அது மிகவும் ஆழமாக ஆராய்ந்து, உயர்ந்த புரிந்து கொள்ளுதலோடு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய தவம்.

நீங்கள் முழு மனிதராவதற்கும், உங்களுக்குள் உள்ள சம்ஸ்காரங்களை எரிப்பதற்காகவும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுமே தவம்தான்.

வாழ்வைப் பற்றி முழுமையாய்க் கற்றுத்தந்து முழுமனிதர்களை உருவாக்கிக் கொண்டிருந்த குருகுல தத்துவத்தின் ஒரு அருமையான அம்சத்தை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

“மாதா, பிதா, குரு, தெய்வம் ... விபரம் தெரியும் வரை குழந்தையை வளர்த்த தாய், அடுத்து குழந்தையை தந்தையிடம் வெளி உலக அறிவைப் புகட்டுவதற்காக ஒப்படைப்பார்.

தன் பிள்ளை தன்னைத்தானே கவனித்துக் கொள்ளுமளவிற்கு வளர்ந்ததுமே உள்ளுலக அறிவை புகட்டுவதற்காக தந்தை தன் குழந்தையைக் குருவிடம் ஒப்படைப்பார். குரு ஞான, யோக சூத்திரங்களை போதித்து முழுமைத்தன்மை நோக்கி முன்னேற்றுவார்.

பதினான்கு வயதிற்குள் முதல் ஞான அனுபவமடைந்துவிட்ட குழந்தைகளைத் துறவறத்திற்கும், முதல் ஞான அனுபவமடையாதக் குழந்தைகளை சம்ஸார வாழ்விற்கும் தேவையான கல்விகளையும், கலைகளையும் தந்து கற்றுத் தேற வைப்பார்கள்”, என்ற ஆழமான கருத்தைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆனந்தயோகம் பயிலும் மாணவரொருவர் இப்படி என்னிடம் கேட்டார்...

“அப்படியென்றால் ஞானமடையாதவர்களுக்குதான் திருமணமா? திருமணம் ஒரு தண்டனையா”?

திருமணம் தண்டனையல்ல, தவம்.

சம்ஸ்காரங்களைத் தியானத்தின் மூலமாக மிக எளிதாக எரித்துவிட முடியும். அப்படி எரித்து விட்டவர்கள் முழு மனிதர்களாக மலர்ந்திருப்பார்கள். அவர்களுக்காக எந்தவொரு வெளித் தேவையும் இருக்காது. இவர்களுக்குத் துறவறம் பெரிய கொண்டாட்டமாயிருக்கும்.

எளிதில் எரிக்க முடியாத அளவிற்கு சம்ஸ்காரங்களை அதிகம் பெற்றிருப்பவர்கள், இன்னொருவரின் துணையோடு அவற்றை எரிக்கத் தயாராவார்கள். ஒருவரையொருவர் புரிந்துகொண்டவர்களாய் இருக்கும் பட்சத்தில் சம்ஸ்காரங்களை எரிப்பது வேக வேகமாக நடைபெறும். வெகு சீக்கிரத்திலேயே இருவருமே முழுமைத்தன்மை நோக்கி முன்னேறுவார்கள்.

> தன் பிள்ளை தன்னைத்தானே கவனித்துக் கொள்ளுமளவிற்கு > வளர்ந்ததுமே உள்ளுலக அறிவை புகட்டுவதற்காக தந்தை தன் > குழந்தையை குருவிடம் ஒப்படைப்பார்.

திருமண வாழ்வின் தியான விளக்கம் புரிந்து செயல்பட்டால்...

திருமண வாழ்வும் ஒரு அருமையான தவமாகும்" என்று சொல்லி முடித்தேன்.

நம் கட்டுப்பாட்டில் இருக்கும் நம் மனமே நம் சொல்பேச்சு கேட்காது. இதில் இன்னொருவரின் மனத்தை நம் சொல்பேச்சு கேட்க வைக்க முயற்சிப்பதெல்லாம் தேவையற்ற சங்கடங்களைத்தான் வரவேற்கும்.

எனவே, நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், தனி நபராக இருந்தாலும், இந்த ஒரு வாழ்வியல் இரகசியத்தைப் புரிந்துகொண்டு அதை நிஜமாக்கிடுங்கள். வாழ்வும் முழுமையாகும். நீங்களும் முழுமையாவீர்கள்.