நெருக்கம் அதிகரிக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நீங்கள் சிரித்துப் பேசினீர்களா...திட்டினீர்களா... கவலைப்பட்டீர்களா...
என்பதைப் பற்றியெல்லாம் யாரும் கண்டுகொள்வதேயில்லை எனும் உண்மை உங்களுக்குத் தெரியுமா?
நண்பன் திட்டினாலும் வலிப்பதில்லை. எதிரி சிரித்தாலும் எரிகிறது.
காரணம் வார்த்தைகளை விட வார்த்தைகளை உற்பத்தி செய்யும் மனோநிலைக்குத்தான், இன்னொருவரின் மனோநிலையை நேரடியாகப் பாதிக்கும் சக்தி உண்டு.
ஜென் ஞானியிடம் தியானம் கற்க வந்திருந்த குடும்பத் தலைவி ஒருவர் இப்படிக் கேட்டார் .
"நான் எவ்வளவுதான் இனிமையாகப் பேசினாலும், என் மாமியாரை மட்டும் என்னால் மாற்றவே முடியவில்லை.
நான் சிரித்துப் பேசினால், 'என்ன துளிர்விட்டுப் போச்சா?' என்று சச்சரவில்தான் முடிவடைகிறது. அமைதியாக இருந்தால் அதற்கும், 'வாயில் என்ன கொழுக்கட்டையா இருக்கின்றது?' என்று திட்டுதான் விழுகின்றது.
சரி, கொஞ்சம் தைரியமாய் பேசினால்தான் சரியாய் வரும் போலத் தெரிகின்றது என்று பேசினால், 'இப்ப எதிர்த்துப் பேசவெல்லாம் ஆரம்பித்துவிட்டீர்களோ?'என்று அது பெரிய சண்டையில் முடிந்து விடுகின்றது.
ஏன் இப்படி நடக்கின்றது ?
எப்படி இதிலிருந்து வெளி வருவது?’’
அதற்கு ஞானி சொன்னார், “ஒரு உரையாடல் முடிந்த பிறகு நம் உரையாடல் மற்றவர்களின் உள்ளத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுதான் முக்கியமேயன்றி, நீங்களாக என்ன பேசினீர்கள் என்பதல்ல.”
எந்த உணர்விலிருந்து அந்த நிமிடத்தில் நாம் பேசினோம். எந்த உணர்வில் அதை ஒருவர் கேட்டார் என்ற இரண்டின் கூட்டுத்தொகைதான் நீங்கள் இன்னொருவருக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை நிர்ணயிக்கின்றது.
“அப்படியென்றால் வார்த்தைகளுக்கு மதிப்பே இல்லையா?”
“நிச்சயமாக இல்லை.
இப்படி யோசித்துப் பாருங்கள். எளிதாய் புரிந்துகொள்வீர்கள். ஏற்கனவே நீங்கள் எதையோ நினைத்து உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கின்றீர்கள். அப்போது உங்களை யாராவது கொஞ்சினால் எப்படியிருக்கும்?
அன்பாயிருக்கவும், உரிமையாய் விளையாடுவதற்குமே கூட, மற்றவர்களின் உணர்வறிந்து பேசுவது முக்கியமானது.
உணர்வறிந்து பேசத்தெரிந்துவிட்டால் உங்களின் சாதாரண வார்த்தைகள்கூட உங்களைச் சுற்றியிருப்பவர்களைத் திருப்தியாக்கும். ஆனந்தத்தை அதிகரிக்கும்.
உணர்வறியாமல் பேசும்போதுதான் மற்றவர்கள் எரிந்து விழுவார்கள். திட்ட முயற்சிப்பார்கள்.

உணர்வறிந்து
பேசத்தெரிந்துவிட்டால்
உங்களின் சாதாரண
வார்த்தைகள்கூட
உங்களைச்
சுற்றியிருப்பவர்களைத்
திருப்தியாக்கும்.
ஆனந்தத்தை
அதிகரிக்கும்.
இன்னொருவரின் உணர்வறிந்து செயல்பட ஆரம்பித்துவிட்டால் உரையாடல் என்பது இனிமையான குதிரை சவாரி போலாகிவிடும்."
"இன்னொருவரின் உணர்வை அறிவது எப்படி?"
"உங்களின் உணர்வை அறியுங்கள். அதை அதிகரியுங்கள். மிக எளிதாக இன்னொருவரின் உணர்வுகளை அறியும் கலையைப் பெற்றுவிடுவீர்கள்" எனச் சொல்லி முடித்தார்.
நம்முடைய உணர்வுகளையே நாம் அறிந்து கொள்ளாமலிருப்பதுதான் நாமே நமக்கு செய்யும் பெருந்துரோகம்.
எந்த உணர்விலிருந்து அந்த நிமிடத்தில் நாம் பேசினோம். எந்த உணர்வில் அதை ஒருவர் கேட்டார் என்ற இரண்டின் கூட்டுத்தொகைதான் நீங்கள் இன்னொருவருக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை நிர்ணயிக்கின்றது.
பொங்கும் ஊற்றை மூடியிருக்கும் கற்குவியலைப்போல நம்முடைய உணர்வை மூடியிருக்கும் கற்குவியல்தான் எண்ணங்கள். இவற்றைத்தவிடுபொடியாக்கிவிட்டால் உங்களின் உணர்வுகளை அறிந்து கொள்வீர்கள். உணர்வு பொங்க ஆரம்பிக்கும்.
உறவுகளில் எதிர்ப்பும், இடைவெளியும் குறையும். நெருக்கம் அதிகரிக்கும். மிக உயர்ந்த வாழ்வை வாழ ஆரம்பிப்பீர்கள்.
ஆத்ம தியானம்
எண்ணங்களைத் தவிடு பொடியாக்கினால் மனமே சுத்தமாகிவிடும்.
சுத்தமான மனம்தான் உயர்ந்த உணர்வுகளை அதிகரிப்பதற்கு நேரடியாக உதவும் ஊடகம்.
இதற்கு நேரடியாக உதவும் தியானம்தான் விமல தியானம்.
விமல தியானம்
வஜ்ராசனத்தில் அமர்ந்துகொண்டு, இரண்டு கைகளிலும் சின்முத்திரையை உருவாக்கி முழங்கால்களில் வைத்துக்கொண்டு நிமிர்ந்து அமருங்கள்.
கவனம் முழுவதையும் உள்வாங்கித் திருப்புங்கள்.
அடி வயிற்றிலிருந்து “ம்ம்ம்...” என்ற நாதத்தை உங்களின் முழுச்சக்தியையும் பிரயோகித்து உச்சாடனம் செய்யுங்கள். இந்த ‘ம்’நாதம், மஹா மந்திர நாதம் என்று அழைக்கப்படும்.
மஹாமந்திர நாதத்தை எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாகவும், எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாகவும், எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாகவும் உச்சாடனம் செய்யுங்கள்.
செய்வதற்கு மனதையே உலுக்கும் வலிமைப் பெற்ற, எளிதாய் இருக்கும் இந்தத் தியானத்தின் தனிச்சிறப்பு, எண்ணக்குவியல்களை வெகு எளிதாகக் கரைத்து விடும் என்பதே!
மேற்சொன்ன பலன்களைத் தாண்டிய இன்னும் சில பலன்கள் இந்தத் தியானத்தில் உள்ளது.
தொடர்ந்து செய்துவர...
★ சைனஸ் தொந்தரவுகள் வராமல் காக்கும். ★ நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ★ தலைவலியைச் சரி செய்யும். ★ ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
மகா மந்திரம் செய்து சக்தி பெறுங்கள்.