KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/நிஜமான சொத்துக் குவிப்புSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

நிஜமான சொத்துக் குவிப்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

portrait

ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்,

"உங்களுக்கு அழிவில்லை'

இந்த நிமிடம் நீங்கள் வாழும் இந்த உடல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் இருக்கப்போகின்றீர்கள். வாழப்போகின்றீர்கள்.

இறப்பு என்ற பெயரில்...

உங்களோடு தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் உடலை நீங்கள் இழக்கலாம். ஆனால், என்ன செய்தாலும் உங்களுக்குள் இழையோடிக் கொண்டிருக்கும் உணர்வுகளை இழக்க மாட்டீர்கள்.

உடலை அழிக்கலாம். ஆனால் உணர்வுகளை அழிக்கவே முடியாது.

இப்போது உங்களின் உடலுக்குள் நீங்கள் எப்படி 'நான்!' என்று உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களோ, அப்படியேதான் உடலைவிட்ட பிறகும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

இதில் நீங்கள் முடிவு செய்யவேண்டியதெல்லாம் இந்த ஒன்றேயொன்றைத்தான்... "எப்படியிருந்தாலும் வாழப் போகின்றோம். எப்பவும் தொடரப்போகின்றது இந்த வாழ்வு. அதை இனிமையாகத் தொடரலாமா? இனிமையுணர்வு பொங்க இப்போதே வாழ ஆரம்பிக்கலாமா?" முடிவு செய்துவிட்டு கட்டுரையைத்தொடருங்கள்.

அமெரிக்காவில் தியான சத்சங்கமொன்றில் பேசிக்கொண்டிருக்கும்போது பக்தரொருவர் கேட்டார், " 'நான்' எனும் உணர்வுதான் அகங்காரம் எனச் சொல்கின்றீர்கள். ஞானமடையும்போது இந்த அகங்காரம் அழிந்துவிடும் எனவும் சொல்கின்றீர்கள். அப்படியென்றால் ஞானமடையும்போது நான் அழிந்துவிடுவேனா?" என்று.

portrait of spiritual teacher

அப்போது அவருக்கு, “Movement from i to I will happen” எனச் சொன்னேன். அதாவது, “நான் மனிதன் (i) என்ற சிறிய உணர்விலிருந்து நான் பிரபஞ்சம் (I) என்ற பெரிய உணர்வுக்குள் நுழைவீர்கள்.” எனச் சொன்னேன்.

ஞானமடைவதுகூட உணர்வு மாற்றம்தான்.

ஒருமுறை மனோதத்துவ நிபுணர் ஒருவர் மருத்துவ கல்லூரியில் நிகழ்ந்த தியான சத்சங்கத்தில் இக்கேள்வியை கேட்டார், “இன்றைய இல்லங்களில் வசிப்பவர்களின் உள்ளங்களில் நிம்மதி இல்லாமல் போனதற்கான காரணம் என்ன?

தற்கொலைகள் வசதி படைத்தவர்களிடமும், படித்தவர்களிடமும் வருவது ஏன்?

ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வது என்பது சாத்தியமற்ற ஒன்று என்னுமளவிற்கு மாறியது ஏன்?

தியான அடிப்படையில் இவற்றிற்கான உங்களின் விளக்கங்களையும், தீர்வுகளையும் தர முடியுமா?”

“உங்களின் எல்லா கேள்விகளுக்குமான விளக்கம் ஒன்றுதான்... அது, மனிதர்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் செதுக்க முயற்சிப்பதுதான். தாங்கள் விரும்பும் வகையில் மற்றவர் மாறவேண்டும் என்ற ஒரே குறியோடு மனிதர்கள் செய்யும் செயல்கள்தான் நீங்கள் குறிப்பிடும் எல்லாப் பிரச்சனைகளுக்குமான மூல விதைகள்.”

"தீர்வுகள்?" "தீர்வும் ஒன்றுதான்"

மற்றவர்களை உங்களின் விருப்பம் போல மாற்றுவதை நிறுத்தினால் போதும், எல்லாம் சரியாகிவிடும்" என பதில் சொல்லி முடித்தேன்.

ஜென் ஞானி ஒருவர் பொதுமக்களுக்கான தியான சத்சங்கம் நடத்திக் கொண்டிருக்கும்போது ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த இந்த வரிகளை மிகக் கருணையோடு சொன்னார்.

"நாமெல்லாம் கொஞ்சம் இதயப்பூர்வமாக பார்க்க வேண்டிய காரியம் இது.

உங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக பலரை உங்களின் இஷ்டத்திற்கு தங்களை மாற்றிக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துகின்றீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்பதற்காக எரிச்சலடைகின்றீர்கள்.

ஆனால், நம்மிடமுள்ள ஒரே ஒரு குறையை மாற்றிக்கொள்ள நாம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கின்றோம் என்று யோசித்திருக்கின்றீர்களா?

சுலபமாக பலரைகுத்திவிடுகின்றீர்கள். வாழ்வின் ஒவ்வொரு படியையும் தாண்ட நீங்கள் பட்ட கஷ்டங்களை திரும்பிப்பார்த்தாலே போதும், உங்களோடு வாழும் ஒவ்வொரு மனிதரின் உணர்வையும் உணர்ந்து மதித்து வாழும் உத்தமராகி விடுவீர்கள்"

வெளியே கோடிக்கணக்கான சொத்துக்கள் ஒருவருக்கு இருந்தாலும், அவரின் நிஜமான சொத்து அவரின் உணர்வுதான்.

உங்களின் நிஜமான சொத்தான உணர்வுக்கு இனிமை சேர்ப்பதற்காக நீங்கள் செய்யும் செயல்கள் மட்டும்தான் உங்களின் பொக்கிஷம்.

ஒரு நிமிடத்தின் அறுபது நொடிகளிலும் இனிமை பொங்க
வாழ ஆரம்பிப்பவருக்கு, உலகமே சொர்க்கமாய் தெரிவதோடல்லாமல்

மற்றவர்களை உங்களின் விருப்பம் போல மாற்றுவதை நிறுத்தினால் போதும், எல்லாம் சரியாகிவிடும். மற்றவர்களுக்கு நரகத்தை உருவாக்கிக்கொண்டேயிருப்பது முடிவுக்கு வந்துவிடும்.

இனிமையுணர்வைச் சேகரிக்க ஆரம்பித்துவிட்டவர், நிஜமான சொத்துக்குவிப்பு செய்ய ஆரம்பித்துவிட்டவர். நிதானமாய் நிஜ சொத்துக்குவிப்பு செய்ய ஆரம்பியுங்கள். காரணம், நீங்கள் அழிவில்லாதவர்.

ஆத்ம தியானம்

சொத்துக்குவிப்பு தியானம்

எப்போதும் இனிமை பொங்க வாழ்வதற்கு தனியாக கற்றுக்கொள்ள எதுவுமில்லை.

ஏதோவொரு இனிமையான சூழலில் பொங்கிய ஆனந்த உணர்வு; அன்பு மிகுதியாலும், பக்தி மிகுதியாலும் பொங்கிய ஆனந்த உணர்வு; ஆரோக்கியத்தால் பொங்கும் ஆனந்த உணர்வு போன்ற உணர்வுகளைத் தக்க வைத்துக்கொள்ள ஆரம்பியுங்கள்.

அதற்கான செயல்களில் மட்டும் உங்களின் கவனத்தை ஆழப்படுத்துங்கள். இனிமையுணர்வு பொங்க ஆரம்பிக்கும்.

ஒரு துளி இனிமையை
இருதுளி இனிமையாக்குவதும்,
இருதுளி இனிமையை
பலதுளி இனிமையாக்குவதும்தான் ஞானம்.

இதற்காக செயல்பட ஆரம்பிப்பதுதான் தியானம்.

துக்கம் அழிவிற்குரியது. அகங்காரம் அழிவிற்குரியது. ஆனந்தம் அழிவில்லாதது. நீங்கள் அழிவில்லாதவர்.

இன்றிலிருந்து இனிமை எனும் சொத்துக் குவிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் அழிவில்லாதவர் எனும் ஆனந்தமயமான அனுபவம் நிஜமாகும்.